Published:Updated:

குடும்ப பட்ஜெட்... தவறான 8 நம்பிக்கைகள், சரியான விளக்கங்கள்!

குடும்ப பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
குடும்ப பட்ஜெட்

குடும்ப பட்ஜெட்

குடும்ப பட்ஜெட்... தவறான 8 நம்பிக்கைகள், சரியான விளக்கங்கள்!

குடும்ப பட்ஜெட்

Published:Updated:
குடும்ப பட்ஜெட்
பிரீமியம் ஸ்டோரி
குடும்ப பட்ஜெட்

இப்போதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்களில் சம்பளமானது வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப் பட்டுவிடுகிறது. ஏ.டி.எம் கார்டைப் பயன் படுத்தி அதைச் செலவு செய்வதும், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கி விட்டு அதற்கு வங்கியில் இருந்து பணத்தைக் கட்டுவதும் மிக எளிதாகி இருக்கிறது.

த.ராஜன் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

ஆனால், இப்போது என்ன பிரச்னை எனில், நாம் செய்கிற செலவுகள் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது. நம் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிப்பது, நாம் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்ததுக்கான பணத்தின் முழுமதிப்பைப் பெறுவது குடும்ப பட்ஜெட் (Family Budget) மூலம் மட்டுமே சாத்தியமாகும். நம் குடும்பத்துக்கான வரவு செலவுத் திட்டம் நமது வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிக்க உதவு வதுடன் நாம் அதிகம் செலவு செய்வதையும் தடுக்கிறது.

குடும்ப பட்ஜெட் குறித்து தவறான 8 நம்பிக்கைகள் (Myths) உலவுகின்றன. அந்தத் தவறான நம்பிக்கைகளுக்கு சரியான விளக்கங்கள் இதோ...

தவறான நம்பிக்கை 1: நான் நிறைய சம்பாதிக்கிறேன். எனவே, எனக்குக் குடும்ப பட்ஜெட் தேவையில்லை..!

விளக்கம்: இந்தக் கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை. பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் ஒரு ராஜாவைப்போல வாழ்ந்தார். ஆனால், 400 மில்லியன் டாலர் கடனில் மூழ்கி இறந்தார். பட்ஜெட் போடுவதன் மூலம் உங்களின் செலவு முறை (Spending Pattern) தெளிவாகத் தெரியவரும். அது உடைகள், உணவு உண்பதில் தேவையற்ற செலவுகளைக் கண்டறிய உதவும். மேலும், எதிர்காலத்துக்கான தேவையை நிறைவேற்றும் பணத்தையும் சேர்க்க உதவும். பட்ஜெட் போட்டு வரவு செலவு செய்பவர், குறைவாக வருமானம் ஈட்டுபவராக இருந்தாலும் அவர் பணக்காரர் ஆகமுடியும். அதேநேரத்தில், பட்ஜெட் போடாமல் அதிகமாகச் செலவு செய்பவர், அதிக வருமானம் சம்பாதிப்பவராக இருந்தாலும் அவர் ஏழையாகவே இருப்பார்.

தவறான நம்பிக்கை 2: என் வேலை மிகவும் பாதுகாப்பானது; நான் சம்பளத்தில் சேமிக்க வேண்டிய அவசியமில்லை..!

விளக்கம்: பொருளாதார மந்தநிலையின்போது செலவுகளைக் குறைக்க பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ததை நாம் பார்த்தோம். பல நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்ததையும் பார்த்தோம். சிறிய நிறுவனங்களில் உரிமை யாளர்களுக்கு எதிர்பாராத விதமாக அசம்பாவிதம் ஏற்பட்டால் அல்லது நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினால் உரிமையாளருடன் சேர்ந்து பணியாளர்களும் கஷ்டப்படும் நிலை உருவாகும். எதிர்பாராமல் ஏற்படும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ஒரே வழி, அவசரகால நிதியைச் சேர்த்து வைப்பதுதான். எனவே, தேவை இல்லாத செலவுகளைக் குறைத்து இக்கட்டான நிலைமைகளைச் சமாளிக்க பணத்தைச் சேமித்து வைப்பது மிகவும் அவசியமாகும்.

குடும்ப பட்ஜெட்... தவறான 8 நம்பிக்கைகள், சரியான விளக்கங்கள்!

தவறான நம்பிக்கை 3: நான் கணக்குப் போடுவதில் மோசம். என்னால், பட்ஜெட் போட முடியாது!

விளக்கம்: இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் குடும்ப பட்ஜெட் போட ஒருவருக்கு பெருக்கல், கூட்டல் வாய்ப்பாடு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. செல்போன், கம்ப் யூட்டர், லேப்டாப் எல்லா வற்றிலும் கால்குலேட்டர்கள் இருக்கின்றன. இது போக விரிதாள் (spreadsheet) போன்றவை இருக்கின்றன. இவை பட்ஜெட் போடுவதை எளிதாக்குகின்றன. எனவே, ‘எனக்கு பட்ஜெட் போட தெரியாது’ என்று நீங்கள் கூறினால், அது பாதுகாப்பான எதிர்காலத்துக்காகச் சேமிக்க உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றே அர்த்தம்.

தவறான நம்பிக்கை 4: நான் அதிர்ஷ்டசாலி; எனக்கு ஒருபோதும் பணப் பற்றாக்குறை வராது!

விளக்கம்: எதிர்பாராத பெரிய செலவுகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான விபத் துகள் போன்ற கணிக்க முடியாத நிகழ்வுகளின்போது யாராக இருந்தாலும் பணப் பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டிவரும். எனவே, பணத்தைச் சேமித்து, எதிர் பாராத செலவுகளை எதிர் கொள்ளத் தயாராக இருங்கள்.

தவறான நம்பிக்கை 5: நான் எனது பில்கள் மற்றும் கடன்களுக்கு உடனடியாகப் பணம் செலுத்தி விடுகிறேன். எனக்கு பட்ஜெட் தேவையில்லை.

விளக்கம்: கிரெடிட் கார்டு பில்களுக்கான பணம், கடன் களுக்கான பணத்தை உடனே செலுத்திவிடும் உங்கள் தகுதிகள் பாராட்டத் தகுந்தது தான். ஆனால், இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும். நீங்கள் சுய ஒழுக்கம் உடையவராக இருக்கலாம். அதற்காக பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டியதில்லை என்று அர்த்தமல்ல. பட்ஜெட் போடுவது உங்களை மிகவும் ஒழுக்கமாகவும், அறிவு பூர்வமாகவும் செலவழிக்கச் செய்கிறது. எனவே, சேமிப்பு டன்கூடிய பட்ஜெட், கடனில் சிக்குவதைத் தவிர்க்க உதவுகிறது.

தவறான நம்பிக்கை 6: பட்ஜெட் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்!

விளக்கம்: பட்ஜெட் போட்டு செலவு செய்வது, சிக்கனமான வாழ்க்கை (Frugal Living) அல்ல, மாதம் ஒரு திரைப்படம் மற்றும் வாரம் ஒருமுறை வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடு வது போன்ற அனைத்து இன்பங்களையும் துறப்ப தல்ல. ஆனால், அது உங்கள் வருமானத்தைவிட அதிகமாக செலவு செய்ய அனுமதிக்காது. எல்லோரும் சேமிக்கத் திட்டமிடுகிறார்கள்; முதலீடு செய்யத் திட்டமிடுகிறார்கள். ஆனால், செலவு செய்வதற்கு நம்மிடம் ஒரு நல்ல திட்டம் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்போம். புத்தி சாலித்தனமான செலவுத் திட்டம் மட்டுமே உங்களை அதிகமாக சேமிக்க வைக்கும். பட்ஜெட் போட்டு செலவு செய்யும்போது பற்றாக் குறையை (Deprived) உணர வேண்டிய அவசியமில்லை; பாதுகாப்பான எதிர் காலத்தைப் பெற உங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத் தொகையைச் சேமிக்க பட்ஜெட் உதவுகிறது.

குடும்ப பட்ஜெட்... தவறான 8 நம்பிக்கைகள், சரியான விளக்கங்கள்!

தவறான நம்பிக்கை 7: என் தேவைகள் சிறியதுதான்; நான் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை..!

விளக்கம்: மனித இயல்பில் நிலையான அணுகு முறை எப்போதும் இருக்காது. குறைந்த விலையில் வீடு அல்லது நிலம் வருகிறது, பணி ஓய்வுக் காலத்துக்குப் பெரிய தொகை என்பது போன்ற தேவைகள் எப்போது வேண்டுமானாலும் உருவாக லாம். எனவே, இது போன்ற சூழ்நிலையில், உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை நீங்கள் லாபகரமாகப் பயன்படுத்திக்கொள்ள, தேவைப்படும் தொகையைச் சேமித்து வைக்க பட்ஜெட் உதவுகிறது. உங்கள் தற்போதைய தேவைகள் சிறிதாக இருக்கலாம். ஆனால் உணவு, தங்குமிடம் மற்றும் உடை போன்ற அடிப்படைத் தேவைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. எனவே, எதிர்காலத்தில் உங்கள் மருத்துவச் செலவுகளையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு பட்ஜெட் போட்டு செலவு செய்வது மூலம் தேவையைச் சமாளிக்க சேமித்து வைத்திருக்க முடியும்.

தவறான நம்பிக்கை 8: எனக்கு தொடர்ந்து சம்பள உயர்வு, போனஸ் கிடைக்கிறது; நான் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை!

விளக்கம்: இத்தனை வருடங்களாக நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கலாம். கடந்த காலத்தில் உங்களுக்குக் கிடைத்த இந்த நன்மைகள் தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கும் என்று நிச்சயம் இல்லை. எனவே, அவற்றின் மீது முழு நம்பிக்கை வைப்பது வீண். சம்பள உயர்வு, போனஸ் போன்ற கணிக்க முடியாத பலன்களைச் சார்ந்திருப் பதைவிட பட்ஜெட் போட்டு சேமிப்பது நல்லது.

சமீபத்திய பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட் 19 பாதிப்பு நம் அனைவருக்கும் நல்ல பாடம் கற்பித்துள்ளது, அதை நாம் எளிதில் மறந்துவிடக் கூடாது. உங்கள் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான முதல் படி, பட்ஜெட் போட்டு செலவு செய்வதாகும். அது மட்டுமே உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism