Published:Updated:

`நோ மினிமம் பேலன்ஸ், ஏடிஎம் கட்டணம்; வருமான வரி.. ஜி.எஸ்.டி!’ - நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்பு

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கொரோனா வைரஸ் காரணமாக வருமான வரி, ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிகள் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. எனினும் மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்துவது சாத்தியமற்றது. இதனால் நாடு முழுவதும் தேவையற்ற மக்கள் நடமாட்டத்தை உடனே கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. அத்தியாவசியத் தேவைகள் அன்றி மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துக்கடைகள், மளிகைக் கடைகள் தவிர மற்ற கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதனால் இந்த நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்லாது அனைத்து மக்களின் பொருளாதார நிலையும் கேள்விக்குறியானது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் காரணமாக வருமான வரி, ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரிகள் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், லாக்-டவுன் உத்தரவு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகக் கொண்டு வரப்பட்டது என விளக்கமளித்தார்.

  • வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள்...!

    ``கொரோனா வைரஸ் காரணமாக 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30-ம் தேதிக்கு நீட்டிக்கப்படுகிறது. தாமதமாகக் கட்டுவோருக்கு விதிக்கப்படும் வட்டி சதவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது’’ என்றார் நிர்மலா சீதாராமன்.

ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி
ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி
  • ஜி.எஸ்.டி - கடைசி நாள்..!

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை கட்டுவதற்கான கடைசி தேதியாக ஜூன் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் தாமதமாகக் கட்டுவோருக்கு விதிக்கப்படும் வட்டி சதவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.

  • அதேபோன்று ரூ. 5 கோடிக்கும் குறைவான டர்ன் - ஓவர் செய்யும் நிறுவனங்களுக்கான வட்டி, அபராதம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஏற்றுமதி - இறக்குமதிக்கு வழங்கப்படும் சுங்க அனுமதி தொடர்ச்சியாக (24*7) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுமது இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுவருபவர்களுக்கு ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

`பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ.8 வரை உயர்த்த முடியும்!’ -விவாதமின்றித் தாக்கலான மசோதா
  • புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, அவற்றின் வருமானத்தை தாக்கல் செய்யக் கூடுதலாக ஆறு மாத அவகாசம் அரசாங்கம் தரவுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  • டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு எந்த வங்கியில் ஏ.டி.எம் மூலமும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதேபோன்று வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என அறிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு