Published:Updated:

மத்திய பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் ஆலோசனை

பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை விவாதிப்பதற்காக இந்த ஆலோசனை நிதியமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரவுள்ள 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார்.

2023-ம் ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகளுடன் இன்று (2022 நவம்பர் 21) முதல் நவம்பர் 28 வரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை விவாதிப்பதற்காக இந்த ஆலோசனை நிதியமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறை வல்லுநர்கள், தொழிற்சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள், வேளாண்துறை பிரதிநிதிகள் ஆகியோருடன் இந்த ஆலோசனை திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 28 வரை நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.