Published:Updated:

அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள்; வட்டியில் மாற்றமில்லை; தைரியமாக முதலீடு செய்யலாம்!

சேமிப்பு

எளிமையான நம்பகமான இந்த சேமிப்பு மக்களை பெருமளவில் கவர்ந்ததால், பெரும்பாலானவர்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் தங்கள் பணத்தை சேமிக்க தொடங்கினர்.

மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறு சேமிப்பு திட்டங்கள் அல்லது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் இந்தியாவில் அறிமுக படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, 5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்து ஆண்டு தொடர் வைப்பு கணக்கு போன்ற ஒன்பது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Post Office
Post Office
Photo: Ashok kumar.D / Vikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எளிமையான நம்பகமான இந்த சேமிப்பு மக்களை பெருமளவில் கவர்ந்ததால், பெரும்பாலானவர்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் தங்கள் பணத்தை சேமிக்க தொடங்கினர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமானது ஒவ்வொரு காலாண்டும் அரசால் நிர்ணயிக்கப்படும். இந்நிலையில் 2022-23 நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 2022 முதல் ஜூன் 2022) சிறுசேமிப்பு வட்டி விகிதங்கள் குறித்த அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. அதில் `சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை' என்று தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும். 15 வருட பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டியும், தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் 6.8 சதவீத வட்டியும், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டியும் வழங்கப்படும்.

வட்டி விகிதம்
வட்டி விகிதம்

5 ஆண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கு 7.4 சதவீத வட்டி தொடர்ந்து நீடிக்கும். 5 ஆண்டு தொடர் வைப்பு கணக்குகளுக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படும். 1 முதல் 5 ஆண்டுகளுக்கான முதலீட்டு கணக்குகளுக்கு 5.5 சதவீதம் முதல் 6.7 சதவீத வட்டியும் கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism