Published:Updated:

இந்த 3 நிதிச் சவால்களுக்கு நீங்கள் தயாரா?

நிதிச் சவால்
பிரீமியம் ஸ்டோரி
நிதிச் சவால்

நிதிச் சவால்

இந்த 3 நிதிச் சவால்களுக்கு நீங்கள் தயாரா?

நிதிச் சவால்

Published:Updated:
நிதிச் சவால்
பிரீமியம் ஸ்டோரி
நிதிச் சவால்

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கப் பாது காப்பான வழி... அதை மடித்து உங்கள் பாக்கெட்டில் வைப்பதுதான்’ என்கிறார் அமெரிக்கப் பத்திரிகையாளரும் கருத்துப் படக் கலைஞருமான கின் ஹப்பார்ட்.

த.ராஜன் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

நம்மில் பலரும் செலவு செய்ய விரும்பு கிறோம். பலருக்குச் செலவு செய்யாமல், ஷாப்பிங் செல்லாமல் இருப்பது கடினமாக இருக்கும். இதனால் சிலருக்கு மன அழுத்தமும் உருவாகலாம்.

ஆனால், இனி நீங்கள் படிக்கப்போகும் மூன்று நிதிச் சவால்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை ஒருவர் கட்டுப்படுத்தலாம். இதன்மூலம் ஒருவர் அதிகம் சேமிக்கலாம்; அதிகமாக முதலீடு செய்யலாம்; இதனால் ஒருவர் விரைவாகச் செல்வந்தர் ஆகலாம். மேலும், நிதி இலக்குகளை எளிதாகவும் விரைவாகவும் அடைய முடியும். அந்த மூன்று நிதிச் சவால்கள் என்னென்ன?

இந்த 3 நிதிச் சவால்களுக்கு 
நீங்கள் தயாரா?

1. ஒரு நாள் எதுவும் செலவு செய்யக் கூடாது.

நம்மில் பெரும்பாலானோர் காபி / டீ, மதிய உணவு மற்றும் சிற்றுண்டிக்கு (Snack) தினசரி செலவு செய்கிறோம். பலவிதமான செலவுகளைத் தவிர்க்க முடியாமல் செய்துவரும் நிலையில், செலவே செய்யாமல் ஒரு நாளை எப்படி கழிக்க முடியும் என்றுதானே கேட்கிறீர்கள்?

இந்தச் சவாலை சற்றுத் திட்டமிடுவதன்மூலம் நிறைவேற்ற முடியும். அதாவது, முன்தினமே இரு சக்கர வாகனம் அல்லது காருக்குத் தேவையான பெட்ரோலை அதற்குரிய டேங்கில் நிரம்பிக்கொள்ள வேண்டும். அலுவலகத்துக்கு பஸ், ரயிலின் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே பாஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் காபி / தேநீரை வீட்டிலிருந்து பிளாஸ்கில் எடுத்துச் செல்லலாம். இதேபோல், மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளை வீட்டிலிருந்தே எடுத்து செல்ல வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் தின்பண்டங்களைப் சாப்பிடுவதன்மூலம் உடல்நலத்தைப் பாதுகாப்புடன் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்.

இது நீங்கள் எண்ணிய அளவுக்குக் கடினமல்ல. நீங்கள் இதைப் பயிற்சி செய்ய ஆரம்பித்தவுடன், அது உங்கள் பழக்க, வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிடும். இதன் மூலம் அன்றாடச் செலவுகளைக் கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.

2. ஒரு வாரம் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தக் கூடாது

நாம் அனைவரும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சிறிய மற்றும் பெரிய பொருள்களை வாங்க நிறைய செலவு செய்கிறோம். கிரெடிட் கார்டுகள் தேவையில்லாத பொருள்களை வாங்கவும், நம்மை அதிகமாகச் செலவு செய்யவும் வைக்கிறது. அதாவது, கையில் பணம் இல்லை என்றாலும் பொருள்களை வாங்கும் வசதி மற்றும் சுமார் 45 - 50 நாள்களுக்கு வட்டியில்லாக் கடன் சலுகையால் பலரும் கிரெடிட் கார்டு மூலம் அதிகம் பயன்படாத பொருள் களைக் கூட வாங்கிவிடுகிறார்கள்.

ரொக்கப் பணம் கொடுத்து பொருள்களை வாங்கும்போது மிக அவசியம் எனக் கருதும் பொருள்களுக்கு மட்டுமே செலவு செய்கிறோம். பல சமயங் களில் பொருள்களை வாங்கு வதைத் தள்ளிப்போடுவோம்.

கிரெடிட் கார்டைப் பயன் படுத்தாத ஒரு வாரக் காலத்தில், உங்களின் தேவையில்லாத பல செலவுகளைத் தவிர்க்க முடியும். நீங்கள் எந்தெந்த பொருள்களை மற்றவர்களின் தூண்டுதலால் வாங்குகிறீர்கள், எந்தெந்தப் பொருள்களைத் தேவையின் அடிப்படையில் வாங்குகிறீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

3. ஒரு மாதம் வெளியில் சாப்பிடு வதைத் தவிர்க்கவும்

ஒரு மாதக் காலம் ஹோட் டலில் சாப்பிடாமல் இருப்பது பலருக்கு கடினமாக இருக்கும். இது கடினமானதுதான். ஆனால், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் வழக்கமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கும்போது, நிறைய பணம் மிச்சமாகிறது என்பதை நீங்கள் கூடிய விரை விலேயே புரிந்துகொள்வீர்கள்.

உணவகங்களில் சாப்பிடு வதைத் தவிர்ப்பது மூலம் அதிக பணம் மிச்சமாகும். மேலும், அதிகப்படியான உணவு சாப்பிடு வதைத் தவிர்க்கவும் முடியும். மேலும், குடும்பமாக விசேஷ சந்தர்ப்பங்கள் அல்லது தினங் களில் மட்டும் வெளியே ஹோட்டலில் சாப்பிடுவது, உணவை ரசித்துச் சாப்பிட உதவும். பணத்தின் மதிப்பைக் குடும்பத்துக்கு உணர்த்தும்.

சுமார் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது, அதற்கு வெளி உணவு எதையும் தரமாட்டோம். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு அல்லது தின்பண்டங்களை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுப்போம். பெரியவர்களுக்கும் இதையே பின்பற்றலாம். இதனால், பணம் மிச்சம். கூடவே ஆரோக்கிய மாகவும் இருக்கும்.

வெளியில் சாப்பிடாமல் இருப்பது நீங்கள் நினைப்பது போல் கடினம் அல்ல. பூங்கா அல்லது கடற்கரையில் குடும்ப மாக வீட்டில் சமைத்த உணவை எடுத்துச் சென்று அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவதுதான் நம் முன்னோர்களின் வழக்கமாக இருந்தது. இதனால் பணம் மிச்சமானதுடன், ஆரோக்கியமான உணவும் நமக்குக் கிடைத்தது!

நிறைவாக, இந்த நிதிச் சவால்கள் அனைத்தும், நீங்கள் சாப்பிட அல்லது வாழ்க்கையின் நல்ல விஷயங்களைப் பெறுவதற்குச் செலவு செய்யக் கூடாது என்று அர்த்தமல்ல. சரியான காரணங்களுக்காக நீங்கள் சரியான அளவில் பணத்தை செலவிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம் ஆகும்.

இந்தச் சுயக்கட்டுப்பாடு, கண்டபடி செலவு செய்யும் நுகர்வோர் குணத்துக்கு (Consumerism) எதிராக உங்களை உளவியல் ரீதியாகத் தயார்ப்படுத்தவும், அதிகமாகச் சேமிக்கவும் உதவும்.

இந்தச் செலவுச் சவால்களை நீங்கள் எதிர்கொள்ளத் தொடங்கியவுடன் நீங்கள் நிறைய கற்றுக்கொள்வீர்கள். நிதி திட்டமிடல் செயல்பாட்டில், குறைவாகச் செலவழிப் பதும், அதிகமாகச் சேமிப்பதும் முதல் படியாகும். அதற்கு இந்த மூன்று நிதிச் சவால்களும் உங்களுக்கு உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism