Published:Updated:

பணச் சுதந்திரம் தரும் ஃபயர்... நீங்கள் தயாராக இருக்கிறீர்களா..?

நிதித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
நிதித் திட்டம்

நிதித் திட்டம்

பணச் சுதந்திரம் தரும் ஃபயர்... நீங்கள் தயாராக இருக்கிறீர்களா..?

நிதித் திட்டம்

Published:Updated:
நிதித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
நிதித் திட்டம்

இந்தியாவில் ஓய்வு பெற்றவர்களில் பத்தில் ஏழு பேர் ஓய்வுக்கால செலவுகளுக்கு தங்கள் பிள்ளைகளையே சார்ந்திருக் கிறார்கள். 67% சீனியர் சிட்டிசன்கள் ஓய்வுக் காலத்திலும் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

ஆனால், 40-களில் இருக்கும் நடுத்தர வயதினர் பலரும் கூடிய சீக்கிரமே பொருளா தார சுதந்திரத்தை எட்டி, வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்பதை ஒரு தாரக மந்திரமாகவே பேசி வருவதைக் காண் கிறோம். காரணம், அமெரிக்காவில் உருவாகிய F.I.R.E. (Financially Independent; Retire Early) என்ற கருத்தாக்கத்தின் தாக்கம்.

அது என்ன ஃபயர்..?

இந்தக் கருத்தாக்கத்தை விரும்புபவர்கள் 60 வயது வரை வேலை என்பதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். 40-களில் பணி ஓய்வு பெற்று, அந்த நாள்களைத் தாங்கள் விரும்பும் வகை யில் செலவிட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். முன்கூட்டியே திட்டமிட்டு பணம் சேர்த்து வெகு சீக்கிரமே பொருளாதார சுதந்திரத்தை அடைவதே ‘முழு நேர வேலை’ என்னும் விலங்கில் இருந்து விடுதலை தரும் என்பதை உணர்ந்தவர்கள்.

“தாங்கள் விரும்பும் வேலையைச் செய்ய பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது” என்பது இவர்கள் கொள்கை என்ப தால், வீட்டுக் கடன், கார் கடன் போன்ற நீண்ட காலக் கடன் வலைகளில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து வெளிவர அடுத்த 30 வருடங்கள் போராட இவர்கள் தயாரில்லை.

தங்கள் ஆசை நிறைவேற முக்கியத் தூண் களாக இவர்கள் கருதுவது: எளிய வாழ்வு, அதிக அளவு சேமிப்பு மற்றும் காலம் முழு வதற்கும் துணை வரக்கூடிய முதலீடுகள்.

இவர்களுக்கு வேதப் பாடமாக இருப்பது, 1992-ல் வெளிவந்த ‘யுவர் மணி ஆர் யுவர் லைஃப்’ (Your Money Or Your Life) என்கிற புத்தகம். இதை எழுதிய விக்கி ராபினுக்கும், ஜோ டாமிங்குவஸ்ஸுக்கும் பொருளாதார சுதந்திரம் என்பது கனவல்ல; அதுவே வாழ்வு. தானே பொருள் சேர்த்து, அதில் ஒரு பகுதியைத் திட்டமிட்டு செலவிட்டு, தனக்குப் பிடித்த முறையில் நேரத்தைப் பயன்படுத்தி, எளிய வாழ்வு வாழ்வதுதான் முழுமையான வாழ்க்கை. ‘நைன் டு ஃபைவ்’ ஓட்ட சாட்டமெல்லாம் வாழ்க்கையே அல்ல என்ற இவர்களின் கொள்கை மெள்ள மெள்ள சூடு பிடித்து, இன்று பலரும் உச்சரிக்கும் F.I.R.E. என்ற இயக்கமாகவே மாறியுள்ளது.

முதலில், நல்ல சம்பளம், சேமிப்பு போன்றவற்றை நிறைவாகப் பெற்றிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் இதில் ஈர்ப்புற்றார்கள். பிறகோ பயண விரும்பிகள், யூடியூபர்கள், பிளாக் (Blog) எழுதுபவர்கள் போன்ற பலரும் நீண்ட கால முழு நேர வேலை, அதன்பின் பணிஓய்வு போன்ற பழைமை எண்ணங்களை உதறிவிட்டு, F.I.R.E தரும் புதிய பாதையை நாட ஆரம்பித்துள்ளார்கள். இன்று நிலவும் பார்ட் டைம் வேலைகளும், கிக் (gig) எகானமியும் இதற்குத் துணை நிற்கின்றன. இவற்றில் ஓரளவுக்குப் பணமும் கிடைக்கிறது; குடும்பத்தினருடன் செல விடவும், தாங்கள் விரும்பிய தைச் செய்யவும் நேரமும் கிடைக்கிறது. இப்படி ஃபயர் இயக்கத்தால் ஈர்க்கப்படும் இளம் தலைமுறையினர் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

பணச் சுதந்திரம் தரும் ஃபயர்...
நீங்கள் தயாராக இருக்கிறீர்களா..?

முழுமையான ஓய்வா அல்லது பார்ட் டைம் வேலையா?

பணிஓய்வு எனில், ஒரேயடி யாக சோம்பி இருப்பது என்று அர்த்தமல்ல; ஒரு வேலையை பொருளாதார காரணங்களுக் காகச் செய்யாமல், விருப்பப் பட்டு செய்வது. ஆகவே, என்ன மாதிரியான வேலை தனக்குப் பிடிக்கும், அதற்காக எவ்வளவு நேரம் செலவிட முடியும், அதிலிருந்து வருமானம் வர வழியில்லாவிட்டாலும், கையிருப்பு கரையாமல் இருக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல் ஃபயரில் இறங்குவது உசிதமல்ல.

கடன்களை அடைத்தல் முக்கியம்...

பணி ஓய்வுக்குப் பின் வரும் பேசிவ் வருமானத்தில் கடன் கட்டுவதற்குப் பணம் ஒதுக்குவது கடினம்; ஆகவே, பணி ஓய்வுக்கு முன்பு உங்கள் கடன்களை முழுவதுமாக அடைக்கும் வழிகளைத் தேட வேண்டும்.

செலவுக் குறைப்பு...

வேலைக்குச் சேர்ந்து 15 முதல் 20 வருடங்களுக்குள் பணி ஓய்வு பெற விரும்புவதால், இந்தக் காலகட்டத்தில் மிக மிகக் குறைந்த செலவில் வாழ வேண்டியிருக்கும். அப்போது தான் கடைசி வரை நம்முடன் வரக்கூடிய அளவுக்கு ஒரு மொத்தத் தொகையை சேமிக்க இயலும். ஆகவே, இந்த 15 வருடங்களும் செலவைக் குறைத்து சேமிப் புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

தேவைக் கணிப்பு...

அடுத்து, தங்களுக்கு இப்போது ஆகும் வருடாந் தரச் செலவைத் துல்லியமாகக் கணக்கிடுவது மட்டுமன்றி, இனி வரக்கூடிய பெரிய செலவுகளையும் நினைவில் கொண்டு, பணிஓய்வின் பின் தங்களுக்குத் தேவைப்படும் தொகையைக் கண்டடைய வேண்டும். பல இணையதளங்களில் ரிடையர்மென்ட் கால்குலேட்டர்கள் காணக் கிடைக்கின்றன. அவற்றின் படி, இன்றைய வருடாந்தர செலவைப் போல் 30 மடங்கு மொத்தத் தொகையாக சேமித்தால்தான் அதிலிருந்து கிடைக்கும் பேசிவ் வருமானம், பணி ஓய்வின் போது பொருளாதார சுதந் திரம் கிடைக்க உதவும்.

30 வயதாகும் ஒருவருக்கு இன்று ஆகும் மாதாந்தரச் செலவு ரூ.55,000 எனில், 45 வயதில் அவர் பணி ஓய்வு பெற எண்ணும்போது பண வீக்கத்தின் லீலையால் அவருக்கு மாதம் ரூ1.35 லட்சம் தேவைப்படும். அதை பேசிவ் வருமானமாக அவர் பெற வேண்டும் எனில், சுமார் ரூ.5 கோடி கையிருப்பு இருக்க வேண்டும். இதை வெறும் சேமிப்பின் மூலம் பெறுவது கடினம். ஆகவே, இவர்கள் வேலையில் சேர்ந்த உடனேயே, தங்கள் முதலீடு களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முதலீட்டுத் தேர்வு...

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள், நேஷனல் பென்ஷன் ஸ்கீம், வங்கி வைப்பு நிதிகள் போன்று பேசிவ் வருமானம் தரக்கூடிய வழிகளில், திட்டமிட்டு முதலீடு செய்து வர வேண்டும். சேர்த்த தொகையை, அவ்வப்போது தேவைப்படும் பணம், சில வருடங்களுக்குப் பின் தேவைப்படும் பணம், காலம் முழுவதும் உடன் வர வேண்டிய பணம் என்று மூன்று வகைகளாகப் பிரித்து, அதற்குத் தகுந்தவாறு முதலீடு செய்வது நல்லது. செலவுகளுக்காகப் பணத்தை வெளியே எடுக்கும்போதும் கட்டுப்பாடு இருப்பது அவசியம்.

பணச் சுதந்திரம் தரும் ஃபயர்...
நீங்கள் தயாராக இருக்கிறீர்களா..?

நமக்குப் பொருந்துமா?

தங்களின் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும், பணி ஓய்வு பெற்று, விருப்பம் போல் வாழும் பலரின் கதைகள் வலைதளங்களில் காணக் கிடைக்கின்றன. ஓயாத வேலை, உயர் அதிகாரிகளின் சிடுசிடுப்பு, குடும்பத்தினரைக் கவனிக்க இயலாத நிலை, தான் செய்ய ஆசைப்படும் விஷயங்களை நினைத்துப் பார்க்கவும் நேரமின்மை போன்றவை, நடுவயதினர் பலரையும் இந்த ஃபயரை நோக்கித் தள்ளுகிறது. ஆனால், மேலை நாட்டினருக்குப் பொருந்தும் சில விஷயங்கள் நமக்குப் பொருந்துமா என்று பார்க்க வேண்டும். அவர்களுக்குப் பல அனுகூலங்கள் உள்ளன. அவற்றில் சில...

1.சோஷியல் செக்யூரிட்டி எனப்படும் பென்ஷன் திட்டங்கள்.

2. வயதான பெற்றோர், குழந்தைகள் மேற்படிப்பு மற்றும் திருமணம் போன்ற வற்றுக்குப் பொறுப்பேற்கத் தேவையில்லாத சூழல்.

3. வீட்டுக்கான தேவை இன்றி, ஒரு வாகனத்தில் கூட வருடக்கணக்கில் குடித்தனம் செய்வது.

4. பொருளாதார அறிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட சேமிப்புத் திட்டங்கள்.

இதுபோன்ற அனுகூலங்கள் இல்லாத நிலையிலும், “இருப்பது ஒரு வாழ்க்கை; அதில் சில வருடங்களை யாவது நம் விருப்பம் போல் வாழ வேண்டும்” என்று ஆசைப்படுவதில் தவறில்லை. அதற்கு உதவக்கூடிய பொருளாதார சுதந்திரத்தை அடைய வாழ்த்துகள்!