Published:Updated:

நிதி இலக்குகளைச் சரியாக நிறைவேற்ற உதவும் 5 முக்கியமான அம்சங்கள்..!

நிதி இலக்கு
பிரீமியம் ஸ்டோரி
நிதி இலக்கு

நிதி இலக்கு

நிதி இலக்குகளைச் சரியாக நிறைவேற்ற உதவும் 5 முக்கியமான அம்சங்கள்..!

நிதி இலக்கு

Published:Updated:
நிதி இலக்கு
பிரீமியம் ஸ்டோரி
நிதி இலக்கு

சில சினிமா நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் பிரபலமாக இருக்கும் போது நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால், அந்தப் பணத்தைத் தங்கள் எதிர்காலத்துக்கென சரியாக முதலீடு செய்து வைப்பது என்று தெரியாததால், ஏதேதோ செய்துவிட்டு, கடைசி காலத்தில் பணம் இல்லாமல் அவதிப்படுவார்கள்.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

பிரபலங்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மக்கள் தங்களின் வாழ்நாளில் சுமார் 25 - 30 ஆண்டுகள் வேலை அல்லது தொழில் செய் கிறார்கள். கோடிக்கணக்கான தொகையை சம்பாதிக்கிறார்கள். ஆனால், ஓய்வுபெறும் போது, இந்தப் பணத்தில் மிகக் குறைந்த அளவே கைவசம் வைத்திருக்கிறார்கள். காரணம், அவர்கள் நிதி இலக்கை சரியாக நிர்ணயம் செய்யாதது ஆகும்.

‘‘கனவு (Dream) என்பது வெறும் கனவுதான். ஓர் இலக்கு (Goal) என்பது தெளிவான திட்டமும் காலக்கெடுவும் கொண்ட ஒரு கனவு” என்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளர் ஹார்வி மேக்கே (Harvey Mackay). இந்த மேற்கோள், வாழ்நாளில் நிதி இலக்குகளை அடைய விரும்பும் அனைவருக்கும் மிகவும் பொருத்தமானது ஆகும். இலக்குகள் இல்லாமல் முதலீடு செய்வது என்பது, இரவில் முகப்பு விளக்கு (Headlight) இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு சமமாகும். நிதி இலக்குகளை சரியாக அடைய பின்பற்ற வேண்டிய முக்கிய மான ஐந்து அம்சங்களைப் பார்ப்போம்.

1. ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீடு...

ஒரு புத்திசாலி முதலீட்டாளர், தான் செய்யும் முதலீட்டில் எவ்வளவு ரிஸ்க் இருக் கிறது, அதை எப்படிக் குறைப்பது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அவரின் ரிஸ்க் எடுக்கும் திறனையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான முதலீட்டுத் திட்டத்தை அவரால் தேர்வு செய்ய முடியும்.

முதலீட்டில் மிதமான ரிஸ்க் எடுக்கக் கூடியவர் எனில், அவர் முழுமையான ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது. அதற்கு பதில், கடன் ஃபண்டுகள், ஹைபிரிட் ஃபண்டுகள் போன்றவற்றில் அவர் முதலீடு செய்ய வேண்டும். ரிஸ்கே எடுக்க விரும்பாதவர் எனில், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற வற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

மேலும், முதலீட்டாளரின் நடத்தைக்கும் ரிஸ்க்குக்கும் தொடர்பு இருக்கிறது. உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள்) பணத்தை முதலீடு செய்திருக்கிறார்; பங்குச் சந்தையின் இறக்கத்தால் அதன் மதிப்பு குறைகிறது என வைத்துக்கொள்வோம். அப்போது அவர் நிதானமாகச் செயல்பட்டு அந்த முதலீடுகளை விற்காமல் இருந்தால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அவசரப்பட்டு விற்றுவிட்டால் இழப்புதான் ஏற்படும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் ஒருவர் நிதானமாகவும், நீண்ட கால முதலீட்டாளராகவும் இருந்தால் ரிஸ்க் வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு.

நிதி இலக்குகளைச் சரியாக நிறைவேற்ற  உதவும் 5 முக்கியமான அம்சங்கள்..!

2. முதலீட்டுக் கால வரம்பு...

நிதி இலக்கை எத்தனை ஆண்டுகளில் அடைய வேண்டும் என்பதற்கான கால வரம்பை நிர்ணயம் செய்வது அவசியமாகும். உதாரணமாக, இப்போதிலிருந்து 10-வது ஆண்டில் ரூ.50 லட்சத்துக்கு வீடு வாங்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட்டால்தான், மாதம் தோறும் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும்.

மேலும், எவை முக்கியமான இலக்குகள் என்பதைப் பட்டிய லிடுங்கள். அவற்றுக்கான கால வரம்பை நிர்ணயம் செய்து, முதலீடு செய்து வாருங்கள். இப்படிச் செய்யும்போது அதில் குடும்ப உறுப்பினர் களையும் ஈடுபடுத்துங்கள். இதனால் நிதி இலக்கை சரியான நேரத்தில் அடைவது சுலபமாக இருக்கும்.

3. முதலீட்டை சீக்கிரமாக ஆரம்பியுங்கள்...

முதலீட்டை எவ்வளவு சீக்கிரமாகத் தொடங்கு கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நிதி இலக்கை அடைய முடியும். மேலும், குறைவான முதலீட்டுத் தொகை இருந்தால் போதும். முதலீட்டைச் சீக்கிரமாக ஆரம்பிக்கும்போது, தொகுப்பு நிதியும் மிக அதிகமாகச் சேர்ந்திருக்கும்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் பங்குச் சந்தை யின் இறக்கத்தால் மூலதன இழப்பு மற்றும் லாபக் குறைவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

முதலீட்டை சீக்கிரமாக ஆரம்பிக்கும்போது, இந்த இழப்பு மற்றும் லாபக் குறைவு சரி செய்யப்பட அதிக வாய்ப் பிருக்கிறது. லாபக் குறைவு என்பது பங்குச் சந்தையின் இறக்கத்தால் அதிகமாக இருந்த லாபம் குறைந்து போவதாகும். இது காகித லாப இழப்பு என்பதால், இது பற்றி முதலீட்டளர்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. முதலீட்டை சம்பாதிக்க ஆரம்பிக்க விரைவாக ஆரம்பித்தாலே போதும்.

4. முதலீடு தானாக ஆக வழி செய்யுங்கள்...

நிதி இலக்குகளை சரியாக நிறைவேற்ற அவற்றைத் தானியங்கியாக (Automation) ஆக்குவது மிக முக்கியமாகும். ஆட்டோமேஷன் முதலீடு களுக்கு சிறந்த உதாரணங் களாக வங்கி மற்றும் தபால் அலுவலகத் தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit - RD), மியூச்சுவல் ஃபண்ட் திட்ட சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan -SIP), சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (STP), சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான் (SWP) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த முறைகளில் முதலீட்டை மேற்கொள்ளும் போது மாதம்தோறும் குறிப்பிட்டத் தொகை முதலீடு செய்யப்படுவதால் / மாற்றப்படுவதால் / எடுக்கப் படுவதால் நிதி இலக்கை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது. தனிநபர் ஒருவர் இவற்றை எல்லாம் தனியாக செய்வது சாத்தியமில்லை. எனவே, ஒரு நிதி ஆலோசகரின் வழிகாட்டுதல் மூலம் செய்வது எளிதாக இருக்கும்.

நிதி இலக்குகளைச் சரியாக நிறைவேற்ற  உதவும் 5 முக்கியமான அம்சங்கள்..!

5. நிதி இலக்கு நிர்ணயம்...

பெரும்பாலானவர்கள் முதலீட்டை ஆரம்பிக்கும் போது, அந்த முதலீட்டுக்கான இலக்கு எதையும் நிர்ணயம் செய்வதில்லை. இதனால், அந்த முதலீடு தொடர்ந்து செய்யப்படுவதில்லை என்பதுடன், அதனால், எந்தப் பலனும் இல்லை. அதாவது, அந்தப் பணம் கண்டபடி வீண் செலவாகிவிடுகிறது. எனவே, எந்த முதலீடாக இருந்தாலும் அதற்கு ஓர் இலக்கு அல்லது தேவையை நிர்ணயம் செய்வது மிக முக்கியம்.

பொதுவாக, குழந்தையின் திருமணம், கல்வி, ஓய்வூதியத்துக்காக சம்பளத்தில் / வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகித தொகையைச் சேமிக்க வேண்டும் என்கிற நிதி இலக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்

நிதி இலக்குகள் நபருக்கு நபர் மாறுபடும். பெரும்பாலும், அவை நம்மைச் சார்ந்திருப்பவர்கள் மற்றும் முன்உதாரணம் இல்லாத நிகழ்வுகளுடன் தொடர்புடையவை ஆகும். முன்உதாரணம் இல்லாத நிகழ்வு என்பது யாரும் எதிர்பார்க்காமல் வருவதுடன், அது போன்ற நிகழ்வு இதற்குமுன் நடக்காதது ஆகும். இதற்கு சமீபத்திய உதாரணம், கோவிட் 19 பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கம், அதனால் ஏற் பட்ட சம்பளக் குறைப்பு / வேலை இழப்பு ஆகிய வற்றைக் குறிப்பிடலாம்.

அவசரகால நிதி என்ற ஓர் நிதி இலக்கு இது போன்ற நிகழ்வுகளை எளிதில் சுலபமாக சமாளித் திருக்க முடியும். எனவே, அவசரகால நிதியைச் சேர்ந்து வைத்திருக்கும்பட்சத்தில் நிதிச் சிக்கலில் எந்த நிலையிலும் மாட்ட வேண்டியிருக்காது; கடன் வாங்கவும் வேண்டியிருக்காது.

நிதி இலக்குகளை சுலபமாக நிறைவேற்ற உதவும் முக்கியமான அம்சங்களை உங்களிடம் சொல்லி விட்டோம். இதன் பலனை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டியது நீங்கள்தான்!