Published:Updated:

ஆண்களைவிட குறைந்த சம்பளம்; அதிக ஆயுள்..? பெண்களின் இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

ஃபைனான்ஷியல் லிட்டரசி கிளப் ( பா.காளிமுத்து )

``நீச்சல் கற்றுக்கொள்கிற மாதிரி, கராத்தே போன்ற தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்கிற மாதிரி, ஃபைனான்ஷியல் லிட்டரசி என்கிற லைஃப் ஸ்கில்லை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்...''

ஆண்களைவிட குறைந்த சம்பளம்; அதிக ஆயுள்..? பெண்களின் இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

``நீச்சல் கற்றுக்கொள்கிற மாதிரி, கராத்தே போன்ற தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்கிற மாதிரி, ஃபைனான்ஷியல் லிட்டரசி என்கிற லைஃப் ஸ்கில்லை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்...''

Published:Updated:
ஃபைனான்ஷியல் லிட்டரசி கிளப் ( பா.காளிமுத்து )

தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு கிளப் இருக்கும். ஆனால், சற்று வித்தியாசமாக சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் ஃபைனான்ஸியல் லிட்டரசி கிளப்பை ஆரம்பித்து, அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு நிதி மேலாண்மைக் கல்வியைக் கற்றுத் தந்து வருகிறார்கள்.

மாணவிகள்
மாணவிகள்
பா.காளிமுத்து

இந்த ஃபைனான்ஷியல் லிட்டரசி கிளப்பின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து அவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை அன்று அந்தக் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கெளரவ அழைப்பாளராக நாணயம் விகடனின் இதழாசிரியர் ஏ.ஆர்.குமாரையும், சிறப்பு பேச்சாளராக நிதி ஆலோசகரான லலிதா ஜெயபாலனையும் அழைத்திருந்தனர்.

இந்த விழாவில் பேசிய நாணயம் விகடனின் இதழாசிரியர், ``ஃபைனான்ஷியல் லிட்டரசி என்பது இன்றைக்கு ஆண், பெண் என எல்லோருக்கும் தேவையாக இருக்கிறது. நீச்சல் கற்றுக்கொள்கிற மாதிரி, கராத்தே போன்ற தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்கிற மாதிரி, ஃபைனான்ஷியல் லிட்டரசி என்கிற லைஃப் ஸ்கில்லை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நீச்சல் தெரியாமல் கரையில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய மாதிரி, நிதி மேலாண்மையை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாமல் தவிப்போம். நிதி மேலாண்மைக் கல்வியைக் கற்றுக்கொள்வதன் மூலம் நம் பணத்தை சரியாக முதலீடு செய்வோம்; கவர்ச்சியான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து இழக்காமல் இருப்போம். இந்த ஃபைனான்ஷியல் லிட்டரசி கிளப்பை எல்லா கல்லூரியிலும் ஆரம்பித்து, நிதி மேலாண்மைக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் தர வேண்டும்’’ என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்து பேசினார் சிறப்புப் பேச்சாளரும், நிதி ஆலோசகருமான லலிதா ஜெயபாலன். ``இன்றைக்கு நிதிச் சுதந்திரம் பற்றி பலரும் பேசுகிறார்கள். நிதி சார்ந்த விஷயத்தில் பெண்கள் சுதந்திரத்தை அடைய வேண்டியது அவசியம். இதற்கு சிறுவயது நிதி மேலாண்மை தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Lalitha Jayabalan
Lalitha Jayabalan
பா.காளிமுத்து

ஆண்களைவிட பெண்கள் குறைந்த ஆண்டுகளே வேலை பார்க்கிறார்கள். ஆண்களைவிட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள். ஆனால், ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான சம்பளம்தான் தருகிறார்கள். ஃபைனான்ஷியல் லிட்டர்சி மூலம் நிதி மேலாண்மை தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொண்டு, சரியான திட்டங்களில் முதலீடு செய்வதன்மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கலாம்.

முதலீடு என்று வருகிறபோது, வெறும் தங்கம், ரியல் எஸ்டேட் என்று போகாமல், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் எனக் கலந்து முதலீடு செய்வது சரியான விஷயமாக இருக்கும். பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல, நம்முடைய உடல்நலமும் மிக முக்கியம். உடல்நலத்தில் பெண்கள் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது’’ என்றார்.

மங்களா பத்மநாபன்
மங்களா பத்மநாபன்
பா.காளிமுத்து

இந்த நிகழ்ச்சியில் இன்டெக்ரேட்டட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் மங்களா பத்மநாபன் கலந்துகொண்டார். பங்குச் சந்தை தொடர்பான பயிற்சியை ஒரு விளையாட்டு போல இந்த கிளப்பில் உள்ள மாணவிகளுக்குக் கற்றுத் தருவது பற்றி அவர் எடுத்துச் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியை எத்திராஜ் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ர.மஹாஶ்ரீ முன்னின்று நடத்தினார். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்க காரணமாக இருந்த பேராசிரியர் புவனேஸ்வரியை மாணவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். இப்படி ஒரு கிளப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர்ந்து வழிகாட்டி வரும் எத்திராஜ் கல்லூரியின் டிர்ஸ்டி ஸ்ரீதரனையும் மாணவிகள் வெகுவாகப் பாராட்டி தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.

இது போன்ற ஃபைனான்ஷியல் லிட்டரசி கிளப்புகள் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் தொடங்கப்பட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே நாணயம் விகடனின் எதிர்பார்ப்பு!