Published:Updated:

கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்பைத் தவிர்க்கும் பணத் திட்டம்!

பணத் திட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
பணத் திட்டம்!

பணத் திட்டம்

கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்பைத் தவிர்க்கும் பணத் திட்டம்!

பணத் திட்டம்

Published:Updated:
பணத் திட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
பணத் திட்டம்!

இன்றைக்குப் பல குடும்பங்களில் கணவன் மனைவி அடிக்கடி சண்டை போடுவதற்கு முக்கியமான காரணம், வரவு செலவுக் கணக்குதான். கன்ஸாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டி 700 குடும்பங்களை ஆராய்ந்து, 90% பெண்களும், 85% ஆண்களும் கல்யாணம் முடிந்த பின் பணம் பற்றிய கவலையில் மூழ்குவதாகத் தெரிவித்திருக்கிறது. ஃபிடலிட்டி இன்வெஸ்ட்மென்ட் சர்வே இன்னொருபடி மேலே போய், திருமணமான தம்பதியரிடையே மனக்கசப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் பணம் முக்கியமான இடத்தைப் பெற்று வருவதாகக் கூறுகிறது.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

ஏன் இந்த மாற்றம்?

ஒரு குடும்பத்தில் அதிகம் செலவழிப்பது யார் என்பது பற்றியும், சேமிப்பு பற்றிக் கவலைப்படாதவர் யார் என்பது பற்றியும் தம்பதியர் ஒருவரையொருவர் குற்றம் சொல்வதற்கு முதல் காரணம், இருவரின் குடும்பப் பின்னணி வேறு; பணம் பற்றிய சிந்தனையும் வேறு என்பதே. பணம் தொடர்பான மனம் திறந்த பேச்சுவார்த்தை களும், வெளிப்படையான நடவடிக்கைகளும் நம் குடும்பங்களில் குறைவு. ஆண்கள் மட்டுமே பொருளாதாரத்தைக் கையாண்ட வரை கேள்வி எதுவும் எழவில்லை. ஆனால், பெண்கள் அதிக அளவில் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், இருவரும் சுமுகமாகக் குடும்பத்தின் வரவு செலவுகளையும் சேமிப்புகளையும் கையாள்வது முக்கியம்.

வேலையில் சேர்ந்து இரண்டு, மூன்று வருடங்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை அனுபவித்த இருவர் சேர்ந்து வாழத் தொடங்கும்போது, திடீரென்று தங்கள் சுதந்திரத்தில் அடுத்தவர் குறுக்கிடுவதை அனுமதிப்பது கஷ்டம்தான். ஆனால், குடும்பக் கப்பல் கவிழ்ந்துவிடாமல் காப்பாற்ற இருவரின் வருமானத்தையும், செலவையும் சேமிப்பையும் இணைப்பதா, எப்படி இணைப்பது என்ற திட்டமிடலும் செயலாக்கமும் அவசியம் தேவை. இதற்கு மூன்று தீர்வுகளைச் சொல்லலாம். அந்தத் தீர்வுகளைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

கணவன் மனைவிக்கு இடையே
மனக்கசப்பைத் தவிர்க்கும் பணத் திட்டம்!

தீர்வு ஒன்று: வரவு, செலவு, சேமிப்பைத் தனித்தனியே வைத்திருப்பது...

கணவன் மனைவி இருவருக்கும் சரியான புரிந்துகொள்ளல் இருக்கும்பட்சத்தில் முதல் தீர்வை நடைமுறைப்படுத்துவது எளிது. இதன்மூலம் யார் எந்தச் செலவை மேற் கொள்வது என்று திட்டமிட்டுச் செயல்பட இயலும். இருவரின் பொருளாதார சுதந்திரமும் பாதிப்படைவதில்லை. அவரவர் குணாதிசயத் துக்கு ஏற்ற முதலீடுகளை மேற்கொள்ளலாம். செலவு, கடன், சேமிப்பு பற்றிய ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்களும் நடக்கலாம்.

“இந்தக் குடும்பத்தில் சம்பாதிக்க மட்டும் நான் வேண்டும். என் நியாயமான செலவு களுக்குக்கூட அடுத்தவர் அனுமதியை எதிர்பார்க்க வேண்டியுள்ளது” என்பது போன்ற குறைகள் தலைதூக்குவதில்லை. ஒருவரது பெயரில் அடுத்தவர் கடன் வாங்குவது, ஒருவர் சம்பாதித்த பணத்தை அனுபவிக்க விடாமல் அடுத்தவர் அதைச் செலவழிப்பது போன்ற அடாவடிகள் நடப்பதில்லை.

தீர்வு இரண்டு: வரவு, செலவு, சேமிப்பை இணைத்து, மன ஒற்றுமையுடன் நடப்பது...

இரு நபர்கள் இணைந்து ஒரு குடும்பம் என்றாகும்போது பொருளாதாரமும் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கண்டிப்பாக இருக்கும். அதில் எந்தத் தவறும் இல்லை. இரண்டாம் வழியைப் பலரும் தேர்ந்தெடுக்க இதுவே காரணம்.

இருவரின் வருமானத்தையும் சேர்த்து, ஒரு ஜாயின்ட் அக்கவுன்டில் போட்டு, அதில் 70% செலவு, 20% சேமிப்பு, மனைவியின் விருப்ப செலவுக்கு 5%, கணவரின் விருப்ப செலவுக்கு 5% என்றுகூட தீர்மானிக்கலாம். மனைவி வரவு, செலவுகளைக் கவனித்தால், கணவர் சேமிப்பு, முதலீடு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். அல்லது முதலீட்டு முறைகளில் மனைவி சிறப்பாகச் செயல்படுபவராக இருந்தால், அவர் முதலீட்டையும், கணவர் வரவு, செலவுகளையும் கவனிக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட பெரிய செலவுகளை இருவரும் சேர்ந்து முடிவு செய்யலாம்.

ஆனால், இந்த இணைப்பை சரியான புரிந்துகொள்ளலுடன் மெதுவாகச் செயல்படுத்த வேண்டும். இருவரில் ஒருவர் அதிகம் செலவு செய்பவராக இருக்கும்பட்சத்தில் அவசர மாகப் பொருளாதாரத்தை இணைப்பது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உதாரணமாக, ஒருவரது கிரெடிட் ஹிஸ்டரி பாதிப்படைந்திருந்தால், அவருடன் இணைந்து கடன் வாங்கும் நபருக்கும் ரேட்டிங் குறையும். இதனால் எதிர் காலத்தில் நல்ல கடன்களைக் குறைந்த வட்டியில் வாங்கும் தகுதியைக் குடும்பம் இழக்கும் அபாயம் உண்டு. ஆகவே, ஒருவரது கிரெடிட் ரேட்டிங் பாதிப்படைந்திருந்தால், அதைச் சரிசெய்த பின்னரே மற்றவர் அவருடன் சேர்ந்து கடன் வாங்குவது பற்றி எண்ண முடியும்.

தீர்வு மூன்று: சிலவற்றை மட்டும் பகுதிகளை இணைத்து, சிலவற்றை இணைக்காமல் செயலாற்றுவது...

இதில் கணவன், மனைவி இருவருக்கும் தனித்தனி வங்கி அக்கவுன்ட் மற்றும் இருவரும் ஜாயின்டாக ஒரு அக்கவுன்ட் என்று வைத்துக்கொள்ளலாம். மொத்த செலவைத் தீர்மானித்து இருவரும் தங்கள் பங்காக ஒரு தொகையை ஜாயின்ட் அக்கவுன்ட்டில் போட்டுவிட்டு, தங்கள் தனி அக்கவுன்ட்டில் இருந்து சேமிப்பு, விருப்ப செலவு ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இவர்களுடைய கடன் அக்கவுன்ட்டுகளும், ஓய்வுக்கால சேமிப்பும்கூட தனித்தனி யாகவே இருக்கும். வீடு வாங்குதல் போன்ற பெரிய விஷயங் களில் மட்டும் இருவரும் சேர்ந்து அவரவர் வருமானத்துக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். அதை விற்கும்போதும் அதே விகிதத்தில் வரவைப் பிரித்துக்கொள்ளலாம்.

எந்த வழி?

இவற்றில் எந்தத் தீர்வைத் தேர்ந்தெடுத்தாலும், கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் சில உண்டு. அதில் முக்கியமானது, ஒளிவு மறைவற்ற நடவடிக்கைகள். உலகில் 12% நபர்கள் வீட்டுக்குத் தெரியாமல் கடன் வாங்கும் பழக்கம் உள்ள வர்களாக இருக்கிறார்களாம். இது நம்பிக்கையை சிதைத்து விடும். இதைத் தவிர்க்க பொருளா தாரம் பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம். இருவரில் ஒருவர் அதீத செலவுகள் செய்பவராக இருந்தாலும் மொத்தக் குடும்பமுமே பாதிக்கப் படும் என்பதால், எந்தப் பெரிய செலவையும் இருவரும் சேர்ந்தே முடிவு செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

மாதம் ஒரு முறை வரவு, செலவு பற்றிய பட்ஜெட் கூட்ட மும், வருடம் ஒருமுறை குழந்தை களின் கல்வி, திருமணம், ஓய்வுக் காலம் போன்றவற்றுக்கான முதலீடுகள் பற்றிய பரிசீலனை களும் உள்ள குடும்பங்கள் பொருளாதார நிர்வாகத்தில் சிறந்து விளங்குவது மட்டுமன்றி, வீட்டில் வளரும் குழந்தைகள் மனதிலும் இந்த நல்ல பழக்கங்களை விதைக்கின்றன. காதல், கல்யாணம் என்ப தெல்லாம் இருவரும் நிம்மதி யாகச் சேர்ந்து வாழத்தான். இந்த உறவில் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. இருவரும் பேசி பிரச்னையைத் தீர்ப்பதே சரி!