Published:Updated:

அதிர்ஷ்டப் பணம்... சரியாகக் கையாள்வது எப்படி..?

பண நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
பண நிர்வாகம்

பண நிர்வாகம்

அதிர்ஷ்டப் பணம்... சரியாகக் கையாள்வது எப்படி..?

பண நிர்வாகம்

Published:Updated:
பண நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
பண நிர்வாகம்

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் முதன்முறையாக ரூ.5 கோடி வென்றவர் சுஷில் குமார். ஐ.ஏ.எஸ் அதிகாரி யாக ஆகப்போவதாகக் கூறி மகிழ்ச்சியாகப் பரிசுப் பணத்துடன் வீடு சென்ற அவர், அதன் பின்பு தான் பட்ட பாடுகளை ஃபேஸ்புக்கில் விவரித்துள்ளார். குடி, போதை மாத்திரைகள், வெற்றி அடையாத பிசினஸ்கள், விவாகரத்து... என்று மெல்ல மெல்ல ஏழ்மையில் மூழ்கியதாக அவர் கூறுகிறார். மேலைநாடுகளிலும், லாட்டரியில் பணம் வென்றவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாகவே பழைய ஏழ்மை நிலைக்குத் திரும்பிவிடுவதாகச் செய்திகள் வருகின்றன.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

சுஷில் குமாருக்கு மட்டுமல்ல, நமக்கும்கூட நாம் எதிர்பாராத முறையில் அதிக அளவிலான பணம் வரக்கூடும். இதை அதிர்ஷ்டப் பணம் (Windfall gains) என்கிறார்கள். இது லாட்டரி மூலம் வரலாம்; வாரிசுரிமையாக வரலாம்; நாம் வியாபாரம் செய்யும் பொருளுக்குத் திடீரென தேவை அதிகரிப்பதால் வரலாம்; அதிக பணத்துக்கு இன்ஷூர் செய்யப்பட்ட உறவினர் இறந்துபோவதால் வரலாம்; பல வருடங்களாக கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு சாதகமாக முடிவதால் வரலாம். ரியல் எஸ்டேட் தலைதூக்க ஆரம்பித்திருப்பதால், பலரும் பழைய சொத்துகளை விற்பதாலும் வரலாம்.

அட, அவ்வளவு ஏன், ஒவ்வொரு நிதி ஆண்டும் முடிந்த பின் பல நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வரும். இன்னும் சிலருக்கு தீபாவளி நேரத்தில் கிடைக்கும். சிலருக்கு டாக்ஸ் ரீஃபண்ட் வரக்கூடும். மாதந்தோறும் வரும் சம்பளத்தைக் கவனமாக செலவழிக்கும் நாம், இதுபோன்ற அபூர்வ வரவுகளை செலவழிக்கும்போது ‘இதுவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்தான்’ என்று நினைப்பதே இல்லை.

அதிர்ஷ்டப் பணம்... சரியாகக் கையாள்வது எப்படி..?

“பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்துக்குத் தரும் மரியாதையை இந்த அதிர்ஷ்ட வரவுகளுக்கு நாம் தருவதில்லை” என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.

அதீத அதிர்ஷ்டப் பணத்தைக் கையாளும்போது ஒருவிதமான அலட்சியம் நமக்கு வந்துவிடுகிறது. சிலர், கையில் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகத் தாங்கள் பார்த்துவரும் நல்ல வேலையை விட்டுவிடுகிறார்கள்; தேவைக்கு அகதிகமாகப் பெரிய வீட்டை வாங்க முற்படு கிறார்கள். இன்னும் சிலர் ஆடம்பர கார்கள் வாங்குவதில் பெருமை கொள்கிறார்கள். அதற்கான பெட்ரோல் செலவு, இன்ஷூரன்ஸ், வருடாந்தர ரிப்பேர் போன்ற அடுத்தடுத்த செலவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. இதனால் மற்ற முக்கியச் செலவுகளுக்குக் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

“அநாவசியமாகச் செலவழிக்காமல், முதலீடு செய்ய முற்படுவோரும் தேடிவந்த அதிர்ஷ்ட தேவதையைத் தக்க வைத்துக்கொள்ளும் வழிகள் பற்றித் தீர்க்கமாக யோசிப்ப தில்லை.

ரிஸ்க் பற்றி கவலை கொள் ளாமல் ஏனோதானோ என்று முடிவெடுக்கிறார்கள். நிலம், வீடு, தங்கம், கடன், பங்கு என்று பிரித்து முதலீடு செய்யாமல் ஒரே முதலீட்டில் அத்தனை பணத்தையும் போட்டுவிடு கிறார்கள்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது சிறுகச் சிறுக முதலீடு செய்வது நல்லது என்பதை உணராமல், ஒரே தவணையில் முழுப் பணத்தையும் இறக்குபவர்கள் உண்டு. இது போன்ற தவறுகளால் அதி வேகமாக அவர்கள் பணத்தை இழக்க நேர்கிறது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலில் செய்யவேண்டியது...

சரி, அபூர்வமாக வரும் அதிர்ஷ்டப் பணத்தைக் கையாள்வது எப்படி எனப் பார்ப்போம்.

எந்தக் காரணத்துக்காகப் பணம் வந்திருந்தாலும், அது அதிகளவில் இருந்தால், முதலில் அதை ஒரு வங்கி எஃப்.டி அல்லது ஒரு லிக்விட் ஃபண்டில் சில மாதங்கள் விட்டு வைக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து சரியான முடிவுகளை எடுக்க அவகாசம் தரும். அத்துடன் இது போன்ற விஷயங் களைக் கையாளவல்ல நிபுணரைத் தேர்ந்தெடுத்து அவர் யோசனைகளைக் கேட்டு நடப்பதும் நன்மை தரும்.

வருமான வரி...

நமக்கு வரும் அதிர்ஷ்டப் பணத்துக்கு வரி உண்டு எனில், அதைக் கட்ட முன்னுரிமை தரவேண்டும். லாட்டரியில் வந்த பணத்துக்கு 31.20% வரி உண்டு. அதைக் கழித்தபின் வரும் மீதிப் பணம்தான் கைக்கு வரும். ஆனால், சொத்துகள் விற்று வந்த பணம் எனில், அதில் கேப்பிட்டல் கெயின் எவ்வளவு, அதற்கான வரி எவ்வளவு என்பதை நாம்தான் கணக்கிட்டு நிதி ஆண்டு முடிவதற்குள் கட்ட வேண்டும்.

அவசரகால நிதி...

ஆறு மாத செலவுகளுக்குத் தேவையான பணம் அவசரகால நிதியாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதைச் சரிவரப் புரிந்துகொள்ளாதவர்கள்கூட இந்த கொரோனா காலத்தில் அவசரகால நிதியின் அருமையை உணர்ந்திருப்பார்கள். இதுவரை இந்த நிதியை ஏற்பாடு செய்யாதவர்கள், இப்போது வந்த அதிர்ஷ்டப் பணத்தில் ஒருபகுதியை அவசரகால நிதியாக வங்கிகளில் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் போட்டு வைப்பது நல்லது.

கடன்களைக் கட்டுதல்...

அதிர்ஷ்டப் பணம் வரும் நேரங்களில் முதலில் நமக்கு இருக்கும் கடன்களைக் கட்டிமுடிக்க வேண்டும். அதுவும் வட்டி விகிதம் அதிகம் இருக்கக்கூடிய கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் போன்றவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

கட்ட வேண்டிய கடன் பட்டியலில் வீட்டுக்கடன், கல்விக்கடன் போன்றவற்றைச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இந்தக் கடன்களுக்கு வரிச்சலுகைகள் உண்டு. கையில் அளவுக்கு அதிக மாகப் பணம் இருந்தால், வீட்டுக்கடனை ஓரளவு திருப்பிச் செலுத்தி மாதாந்தரத் தவணைத் தொகை யைக் குறைக்க வழி தேடலாம். இப்படி கடன்களைக் குறைப்பது மாதாந்தர வருமானம் உயர வழி வகுக்கும்.

மற்ற இலக்குகள்...

கடன், வரி போன்றவற்றைக் கட்டியபின்னும் பணம் மீதி இருந்தால், நமது மற்ற இலக்குகள் பற்றி யோசிக்கலாம். குழந்தைகளின் உயர்கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுக்கால நிதி போன்ற இலக்குகளை விரைவில் அடைய இந்தப் பணம் உதவும். இலக்குகளின் கால நிர்ணயத்தைப் பொறுத்து மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் எனில் கடன் சொத்திலும், ஐந்து ஆண்டுகளுக்குமேல் எனில், சந்தை சார்ந்த முதலீடுகளிலும் பணத்தைப் போட்டு வைக்கலாம்.

பணத்தை மகிழ்ச்சிக்காக செலவழித்தல்...

அதிர்ஷ்டப் பணம் என்பது எப்போ தாவதுதான் வரும். சிலருக்கு அது வராமலேயேகூடப் போகலாம். ஆகவே அது வரும்போது குடும்ப உறுப்பினர் களின் நெடுநாள் ஆசைகளைப் பட்டியல் போட்டு, அவற்றை நிறைவேற்றி வாழ்க்கையை வண்ணமய மாக்குவது அவசியம்.

திடீரென வரும் பணத்தைத் தாம்தூம் என்று செலவு செய்யாமல், நிதானமாக யோசித்து செலவு செய்தால், நூறை நிச்சயமாக ஆயிரம் ஆக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism