Published:Updated:

நிதி ஆரோக்கியம்... உங்களின் நிகர மதிப்பைக் கண்டறிவது எப்படி?

நிதி ஆரோக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி ஆரோக்கியம்

நிதி ஆரோக்கியம்

நிதி ஆரோக்கியம்... உங்களின் நிகர மதிப்பைக் கண்டறிவது எப்படி?

நிதி ஆரோக்கியம்

Published:Updated:
நிதி ஆரோக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி ஆரோக்கியம்

ஒருவரின் நிதி ஆரோக்கியத்தை (Financial Wellness) அறிந்துகொள்ள அவரின் நிகர மதிப்பைத் (Net-worth) தெரிந்துகொள்வது முக்கியமாகும். நிகர மதிப்பைக் கணக்கிடும் போது ஒருவர் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வது முக்கியம். பணம், சொத்து, கடன் தொடர்பான விஷயம் எதிலும் பொய் சொல்லக் கூடாது; எந்தத் தகவலை மறைக்கவும் கூடாது.

த.ராஜன், 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன், இணை நிறுவனர்,  https://www.holisticinvestment.in/

ஒருவரின் நிகரச் சொத்து மதிப்பு என்பது 1. சொத்துகள் (Assets) 2. பொறுப்புகள் (Liabilities) ஆகிய இரு முக்கியமான விஷயங் களைப் பொறுத்ததாகும். சொத்துகள் என்பது உங்களுக்குச் சொந்தமான பொருள்கள்  மற்றும் பணம் ஆகும். ஆனால், பொறுப்புகள் என்பது நீங்கள் மற்றவர்களுக்குத் தர வேண்டியவை ஆகும். உங்கள் நிகர மதிப்பைக் கணக்கிடும் போது, உங்களிடம் உள்ள சொத்துகளிலிருந்து பொறுப்புகளைக் கழிக்கவும். அதாவது, நிகர மதிப்பு = சொத்துகள் - பொறுப்புகள்.

பொறுப்புகளைப் பொதுவாக, கடன்கள் என்றுகூட சொல்லலாம். ஒருவரின் நிகர சொத்து மதிப்பை எப்படிக் கணக்கிட வேண்டும் என்பதை இங்கே உள்ள அட்டவணையைக் கவனித்தாலே போதும்.  

நிதி ஆரோக்கியம்... உங்களின் 
நிகர மதிப்பைக் கண்டறிவது எப்படி?

நிகர சொத்து மதிப்பைக் கணக்கிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. நிகர மதிப்பை மதிப்பாய்வு (Review) செய்வது உங்களின் தற்போதைய நிதி ஆரோக்கியத்தை அறிந்துகொள்வதற்காக மட்டுமே - உங்களின் கடந்த கால நிதி முடிவு களின் விளைவு எதையும் தீர்மானிக்க அல்ல என்பதை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

2. ஒருவரின் பொறுப்புகளைவிட நிகர மதிப்பு அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது நிதி ஆரோக்கியத்துக்கு நல்லது.

3. ஆண்டுக்கு இரு முறையாவது நிகர மதிப்பை மதிப்பாய்வு செய்வது அவசியமாகும்.

4. ஒவ்வொரு நிகர மதிப்பு மதிப்பாய்வின் போதும், உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக் கும்படி பார்த்துக்கொண்டால் உங்கள் நிதி நிலை ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம்.

5. நிகர மதிப்பைக் கணக்கிடும்போது அதில் குடும்ப உறுப்பினர்களையும் பங்கேற்க செய்வதன்மூலம் பொறுப்புகளைக் குறைத்து நிகர மதிப்பை எதிர்காலத்தில் அதிகரிக்க முடியும்.  

இந்தக் கணக்கீட்டை அவ்வப்போது செய் வதன்மூலம் நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism