Published:Updated:

ஃபின்டெக் ஸ்டார்ட்அப்கள்... மூன்றாவது இடத்தில் கலக்கும் இந்தியா!

 ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

ஃபின்டெக் ஸ்டார்ட்அப்கள்... மூன்றாவது இடத்தில் கலக்கும் இந்தியா!

ஸ்டார்ட்அப்

Published:Updated:
 ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

நிதித் துறையில் பாரம்பர்யமாக இருக்கும் பல நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சவால்களை அளிப்பதாக இருக்கின்றன ஃபின்டெக் நிறுவனங்கள். முன்பெல்லாம் பணம் போடுவதாக இருந்தாலும் சரி, பணம் எடுப்பதாக இருந்தாலும் சரி, வங்கிக்குச் செல்வதை நாம் வழக்கமாகக்கொண்டிருந்தோம். ஆனால், இன்றைக்கு..? நாம் வங்கிக்குச் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. காரணம், ஃபின்டெக் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய உதவுவதால், பணத்தை எளிதில் அனுப்பவும் பெறவும் முடிகிறது.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவுமே இன்றைக்கு ஃபின்டெக் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. உலக அளவில் ஆடென் (Adyen) முதல் ஸெப்ஸ் (Zepz) வரை பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபின்டெக் நிறுவனங்கள் நிதித்துறையில் தனது புத்தாக்கத் தொழில்நுட்ப சேவைகளின் மூலம் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. இது பற்றி ஃபின்டெக்மேகசின் டாட்காம் என்கிற இணைய இதழ் சமீபத்தில் 2022-ம் ஆண்டில் உலக அளவில் டாப் 100 ஃபின்டெக் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது. ஃபின்டெக் நிறுவனங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளன.

* உலகின் தலையாய 100 ஃபின்டெக் நிறுவனங்களின் சந்தை மூலதனம் (Market capitalization) சுமார் 1.83 ட்ரில்லியன் டாலர். (பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனங் களின் சந்தை மூலதனத்தைக் கணக்கிடுவது எளிது. ஆனால், சந்தையில் பட்டியிலிடப்படாத நிறுவனங்களின் சந்தை மூலதனத்தை எதன் அடிப்படையில் ஃபின்டெக்மேகசின் டாட்காம் குழுவினர் கணக்கிட்டார்கள் என்பதற்கான விவரம் எதுவும் அறிக்கையில் தரப்படவில்லை).

* இரண்டு பில்லியன் டாலருக்குக் குறைவான சந்தை மூலதனம் உள்ள நிறுவனங்கள் இந்த `டாப் 100’ பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த நிறுவனங்களின் மதிப்பீடுகளும் மிக விரைவாக மாறுவது ஆச்சர்யமான ஒன்றாகும். உதாரண மாக, இங்கிலாந்தைச் சேர்ந்த `செக் அவுட் டாட்காம்’ என்கிற நிறுவனத்தின் மதிப்பு 2021-ம் ஆண்டு டிசம்பரில் 15 பில்லியன் டாலராக இருந்தது; ஆனால், ஜனவரியில் இதன் மதிப்பீடு 40 பில்லியன் டாலருக்கு அதிகரித்திருக்கிறது.

* ஃபின்டெக் துறை சார்ந்த 100 நிறுவனங்களில் சுமார் 49 நிறுவனங்களை அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் நிறுவனம் 1998-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அமெரிக் காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பேபால் (PayPal) நிறுவனம் ஆகும். இது உலகத்திலேயே அதிக மதிப்பீடு (220 பில்லியன் டாலர்) கொண்ட டிஜிட்டல் பேமென்ட் தளமாகும். இதன் நிறுவனர்கள் யார் என்று பார்த்தால், பீட்டார் தேல், லூக் நோசெக், மேக்ஸ் லெவ்சின், எலான் மஸ்க், யூ பான் ஆகியோர். இதிலிருந்து வெளிவந்து டெஸ்லா கார் நிறுவனத்தைத் தொடங்கிய எலான் மஸ்க் இன்றைக்கு பேபால் நிறுவனத்தை விட மிகப் பெரிதாக வளர்ந்திருக் கிறார். பேபால் நிறுவனத்தைத் தொடங்கிய அனைவருமே இன்றைக்கு பில்லியனர்களாக இருக்கிறார்கள்.

ஃபின்டெக் ஸ்டார்ட்அப்கள்... மூன்றாவது இடத்தில் கலக்கும் இந்தியா!

பேபால் நிறுவனத்திலிருந்து விலகி, புகழ்பெற்று விளங்கக் கூடிய இன்னொருவர் லிங்க்ட்-இன் (LinkedIn) நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் ரீட் ஹோஃப்மன். இந்த நிறுவனம் இன்றைக்கு 200 நாடுகளில் இயங்கி வருகிறது.

பேபால் நிறுவனம் பணம் செலுத்தும் செயல்பாடுகளை எளிதாக்கும் சேவையோடு ஆன்லைன் இன்வாய்சிங், கிரெடிட் கார்டுகளை மூலம் பணம் பெறுவது, முதலில் பொருள்களை வாங்கிவிட்டு, பிற்பாடு பணம் செலுத்துவது (BNPL), கிரிப்டோகரன்சி முதலீடு போன்ற சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 20 ஆண்டு களுக்கு மேல் ஆனபின்பும் புதிய போட்டியாளர்கள் உருவாக்கும் சவால்களை எதிர்த்து சிறப்பாக வெற்றி கண்டு வருகிறது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது மிகப் பெரிய ஃபின்டெக் நிறுவனம் கனடாவைச் சேர்ந்த `ஷாப்பிஃபை’ (Shopify) ஆகும். இது ஒரு `இ-காமர்ஸ்’ தளமாகும். இந்தத் தளத்தில் எந்தவொரு வணிகரும் தங்களுக்கான ஆன்லைன் ஸ்டோரை உருவாக்கிக்கொள்ள முடியும். இந்தத் தளத்தை சுமார் 1.75 மில்லியன் வணிகர்கள் உபயோகித்து வருகிறார்கள். 2006-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 2013-ம் ஆண்டு ஷாப்பிஃபை பேமென்ட்ஸ் என்கிற சேவையையும் வழங்க ஆரம்பித்தது. இதன் மூலம் வணிகர்கள் கார்டு மூலம் செலுத்தும் பேமென்டை ஏற்றுக்கொள்ள முடியும். 2016-ம் ஆண்டு ‘ஷாப்பிஃபை கேப்பிடல்’ என்கிற சேவையையும் அறிமுகப்படுத்தியது.

அமெரிக்காவுக்கு அடுத்து இங்கிலாந்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களும், சீனாவின் 7 நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் அடங்கும்.

இந்திய ஃபின்டெக் துறையின் சந்தை மதிப்பு சுமார் 31 பில்லியன் டாலர் என ‘BLInC Insights’ என்கிற நிறுவனம் தெரிவிக்கிறது. இன்றைய நிலையில், இந்தத் துறையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா இருப்பதாகவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் கூட்டு வளர்ச்சி சுமார் 22% இருக்கும் எனவும் இந்த அறிக்கைக் கூறுகிறது.

இந்தியாவில் இன்றைக்கு சுமார் 6,400 ஃபின்டெக் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் 28% நிறுவனங்கள் முதலீடு சார்ந்ததாகவும், 27% பணம் செலுத்தும் சேவை சார்ந்ததாகவும், 16% கடன் வழங்குவது சார்ந்ததாகவும், 9% வங்கிக் கட்டமைப்பு சார்ந்ததாகவும் மீதமுள்ள 20% நிறுவனங்கள் நிதி சார்ந்த மற்ற சேவைகளையும் வழங்கி வருகின்றன.

இந்தத் துறையில் Razor Pay, CRED, Pinelabs, Policy Bazar உள்ளடங்கிய 10 யுனிகார்ன்கள் (ரூ.7,500 கோடிக்கு மேல் மதிப்புகொண்ட நிறுவனங்கள்) உள்ளன. தவிர, கூடியவிரைவில் யுனிகார்ன் நிலையை அடையவிருக்கும் `சூனிகார்ன்’ (soonicorns) நிறுவனங்களாக நவி, லெண்டிங்கார்ட், Mswipe போன்ற 53 நிறுவனங்களும் உள்ளன. மினிகார்ன் (Minicorns) என்கிற வகையில் 170 நிறுவனங்கள் உள்ளன. 2016-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் பெற்ற முதலீட்டின் மதிப்பு சுமார் 16.5 பில்லியன் டாலர் ஆகும்.

உலக அளவில் இந்தத்துறை வருடத்துக்கு 23% என்கிற அளவில் வளர்ந்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் ஃபின்டெக் நிதிச் சேவை நிறுவனங்களின் ஊடுருவல் மிகவும் குறைவாகும். இந்திய மக்களில் இன்னும் 15% பேரிடம்கூட வங்கிக் கணக்கு இல்லை. அமெரிக்காவில் இது 60% ஆகும். அது போல, 20% சிறு நடுத்தர அளவிலான வணிகர்களுக்கு மட்டுமே கடன் வசதி பெறும் வாய்ப்பு இருக்கிறது. காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றின் ஊடுருவலும் மிகவும் குறைவு. எனவே, இந்தியாவில் இணையத்தை உபயோகிப் பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு பார்த்தால், இந்தத் துறை சார்ந்த பொருள்களுக்கும் சேவை களுக்கும் மிகப் பெரிய வாய்ப்பு இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

எதிர்காலத்தில் இந்தத் துறை மிகப் பெரிய அளவில் வளர்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதை அறிந்த தமிழக அரசும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபின்டெக் கொள்கையை வெளியிட் டிருக்கிறது. இந்தத் துறையில் தமிழகம் சாதிக்க நிறையவே இருக்கிறது!