Published:Updated:

முதல் சம்பளம் வாங்கியவுடன் அதை நீங்கள் என்ன செய்தீர்கள்?

முதல் சம்பளம்
பிரீமியம் ஸ்டோரி
முதல் சம்பளம்

சோஷியல் மீடியா

முதல் சம்பளம் வாங்கியவுடன் அதை நீங்கள் என்ன செய்தீர்கள்?

சோஷியல் மீடியா

Published:Updated:
முதல் சம்பளம்
பிரீமியம் ஸ்டோரி
முதல் சம்பளம்

''முதல் சம்பளம் வாங்கியவுடன் அதை நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்களும் கலகல பதில்களைப் பகிர்ந்திருந்தார்கள்.

“1991-ல் நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது கிடைத்த முழு ஆண்டு விடுமுறையில் வேலைக்குச் சென்றேன். வாரச் சம்பளம் 100 ரூபாய் வாங்கினேன். அதில் வீட்டுக்கு 80 ரூபாய் கொடுத்துவிட்டு மீதி இருபது ரூபாயில் 10 புரோட்டா சாப்பிட்டு மீதியை வாடகை சைக்கிள் வாங்கி ஓட்டி முடித்தேன்”னு சொல்லிருக்காரு பாபு கணேஷ். ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..!

‘‘என் முதல் மாத முழுச் சம்பளத்திலும் நான் படித்த அரசுப் பள்ளியில் தற்போது படிக்கும் மாற்றுத்திறனாளிகள், தாய் அல்லது தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு இலவசமாகச் சீருடை வழங்கினேன்”னு கமென்ட் பண்ணிருக்காரு சக்தி மணி. சல்யூட் சார்!

முதல் சம்பளம் வாங்கியவுடன்
அதை நீங்கள் என்ன செய்தீர்கள்?

“குலத்தொழிலை அப்பாவுக்குத் துணை யாகச் செய்ததால், சம்பளம் என்று தனியாக வாங்கியதில்லை. அப்பாவின் அன்பைத்தான் ஊதியமாகப் பெற்றேன். அதைச் செலவு செய்யாமல் இன்றும் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்”னு சொல்லிருக்காரு திருமுதுகுன்றம் ரமேஷ்பாபு. அருமை!

“வாங்கிய சம்பளத்தில் 2.5% தர்மம் செய்த பிறகுதான் என் குடும்பத்துக்குச் செலவு செய்வேன். இந்தப் பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை யாரிடமும் ஒரு ரூபாய் கூட கடன் நான் வாங்கியதில்லை”னு சொல்லிருக்காரு முஹமது இப்ராஹிம். பேஷ் பேஷ்!

“2004-ம் ஆண்டு எனது எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் பூந்தமல்லி அருகே உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் சித்தாள் வேலைக்குச் சென்று நாள் ஒன்றுக்கு 45 ரூபாய் என ஒரு மாதம் வேலை செய்து சாப்பாடு, போக்குவரத்து மற்றும் கைச்செலவு போக மீதி 600 ரூபாய் வீட்டில் கொடுத்தேன்’’ என்று சொல்லிருக்காரு முருகன் சின்னத்துரை. முயற்சி திருவினை யாக்கும்!

“என் தாய் - தந்தையருக்குச் சேலை வேஷ்டி எடுத்து, மீதி பணத்தையும் அவர்கள் கையில் கொடுத்துக் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அவற்றை வாங்கி என்னை ஆசீர்வாதம் செய்து 100 ரூபாய் எனக்கு செலவுக்குக் கொடுத்தார்கள். வருடம் 1981. அப்போது என் சம்பளம் 500 ரூபாய்”னு சொல்லிருக்காரு ஆறுமுகம் பாலகிருஷ்ணன். சூப்பர் சார்!

“என்னுடைய முதல் மாதச் சம்பளம் 1,050 ரூபாய்..! அதை அப்பாவிடம் கொடுத்தேன்.அதில் ஒரு ரலே சைக்கிள் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கான மளிகைப் பொருள்கள் வாங்கினோம் (இதெல்லாம் 1989-ல்..!) அடுத்த மாதச் சம்பளத்தில் வீட்டுக்கு ஒயரிங் செய்து மின் இணைப்புக் கொடுத்தோம்”னு சொல்லிருக்காரு கிருஷ்ணசாமி பாஸ்கரன். அடடே! இவ்வளவு பண்ணியிருக்கீங்களா?

“என் முதல் சம்பளம் 1999-ம் வருடம் எனது 15-ம் வயதில் வொர்க்ஷாப்பில் வேலை செய்து (ரூபாய் 400) கிடைத்தது. அதை வாங்கி என் தந்தையிடம் கொடுத்து. அதிலிருந்து பஸ்ஸுக்கு மாதாந்தரக் கட்டணமாக ரூபாய் 100 வாங்கிக் கொண்டேன்”னு சொல்லிருக்காரு தமிழ்! நைஸ் சார்.

‘‘அம்மாவுக்கும் மாமியாருக்கும் புடவை எடுத்துக் கொடுத்தேன். அப்பாவுக்கு வாட்ச் வாங்கினேன்’’ என்று சொல்லியிருக்கிறார் கவிதா சுரேஷ். குட் கேர்ள்!

‘‘பாதி பணத்தை கல்லூரிக்குக் கொடுத்தேன்’’ என்று சொல்லியிருக்கிறார் ஆனந்த் குமார்! அட, அதிசயமா இருக்கே!