Published:Updated:

போட்டிக் களத்தில் பெரிய நிறுவனங்கள்... கரூர் ஸ்ரீராம் மோகனின் `Flyer eats' வெற்றிக் கதை!

ஸ்ரீராம் மோகன்
ஸ்ரீராம் மோகன்

``பெரிய உணவு டெலிவரி பண்ணும் கம்பெனிகள் அப்போதான் மெட்ரோ சிட்டிகளில் கால்பதித்திருந்த நேரம். அதனால், கஸ்டமர்களையும் ஹோட்டல் நிர்வாகங்களையும் கவர, நான் பல விஷயங்களைப் பண்ண வேண்டி இருந்துச்சு”

கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த ஸ்ரீராம் மோகன், உணவு ஆப்ஸ் மூலம் இந்தியாவின் பல நகரங்களில் பிசினஸ் செய்து வருகிறார். தற்போது சிங்கப்பூரில் இருக்கும் அவரிடம், எப்படி இது சாத்தியமானது என்று கேட்டோம். வாட்ஸ்அப் காலில் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், டிப்ளோமா படிப்புக்குப் பின் ரூ.3,500 சம்பளத்தில் புரோக்ராமிங் டெவலப்பராக வேலை பார்த்தது முதல் 2014-ல் சிங்கப்பூரில் உள்ள சுவிஸ் வங்கிக் கிளையில் மேனேஜராக மாதம் ரூ.4 லட்சம் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தது வரை கடந்து வந்த பாதையை விவரித்தார்.

Food delivery
Food delivery

உணவு டெலிவரி ஆப் உருவான கதையைப் பகிர்ந்தவர், ``2016-ல `Flyer eats' என்ற பெயரில், உணவு டெலிவரி பண்ணும் ஸ்டார்ட்அப் கம்பெனியைத் தொடங்கினேன். அதற்கு பிரத்யேகமான ஆப்பை உருவாக்கினேன். கரூர், பொள்ளாச்சி, கேரளாவில் உள்ள பாலக்காடு என்று மூன்று இடங்களில் முதலில் தொடங்கினேன். கரூர்ல முதல்ல நல்லா பிக்கப் ஆகும்னு நினைச்சேன். ஆனா, என் நினைப்புக்கு மாறாக, பாலக்காட்டுல நல்லா பிக்கப்பாகி, ஆரம்பத்துலேயே 50 ஹோட்டல்காரங்க எங்க கம்பெனியில ஒப்பந்தம் போட்டாங்க.

பொள்ளாச்சி, கரூர்ல என் ஆப்பை பிரபலப்படுத்த சிலரை நியமித்து, இலவசமா உணவுகளைக் கொண்டுவந்து தர ஏற்பாடு செஞ்சேன். கஸ்டமர்கள்கிட்டயும், உணவு டெலிவரி பண்றதுல உள்ள குறைகளைச் சொன்னால், உணவுக்கான பணத்தைத் திருப்பித் தந்துடுவோம்னு அறிவிச்சோம்.

பெரிய உணவு டெலிவரி பண்ணும் கம்பெனிகள் அப்போதான் மெட்ரோ சிட்டிகளில் கால்பதித்திருந்த நேரம். அதனால், கஸ்டமர்களையும் ஹோட்டல் நிர்வாகங்களையும் கவர, நான் பல விஷயங்களைப் பண்ண வேண்டி இருந்துச்சு.

மத்த ஸ்டார்ட்அப் கம்பெனிகளெல்லாம், அதிகபட்சம் 8 கிலோ மீட்டர் வரைதான் உணவு டெலிவரி பண்ணினாங்க. நாங்க 20 கிலோ மீட்டர் வரை உணவு டெலிவரி பண்ணினோம். அதற்காக, மாத சம்பளத்துக்கு தனியாக இரண்டு பேரை வேலைக்கு எடுத்தோம். அவங்களுக்கு வண்டி, பெட்ரோல் எல்லாம் நாங்களே தந்தோம். இருந்தாலும், முதல் எட்டு மாசத்துல ரூ.5 லட்சம் வரை நஷ்டம்தான் ஏற்பட்டது. பாலக்காட்டுல மட்டும் கொஞ்சம் லாபம் வந்தது. ஆனா, நான் பின்வாங்கிடல.

அடுத்து, சிறு நகரங்களான மயிலாடுதுறை, தேனி, கம்பம், பரமத்திவேலூர், கேரளாவுல எடப்பால், திருவூர்னு பல பகுதிகளில் கம்பெனியை ஆரம்பிச்சோம். ஆனால், மக்களுக்கு அடிப்படையே புரியலை. `நீங்க எங்க சமைச்சு கொண்டு வருவீங்க?'னு கேட்டாங்க. ஹோட்டல் தரப்புல, `ஏன் நாங்க 20% விலை குறைச்சு தரணும்?'னு கேட்டாங்க. அவங்களுக்கு புரியவைக்க சிரமப்பட்டோம். பல புதுமையான ஆஃபர்களை அறிவிச்சோம்..."

கம்பெனியை விரிவுபடுத்திய உத்திகளை அப்படியே அடுக்கியது மட்டுமன்றி, தான் கடந்து வந்த பயணத்தையும் விரிவாகப் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரீராம் மோகன்.

``என் பிசினஸ் மேலே எனக்கு நம்பிக்கை வந்ததால 2019-ல மாசம் 5.5 லட்சம் ரூபா சம்பளம் கிடைச்சு வந்த சுவிஸ் பேங்க் வேலையை விட்டு விலகிட்டேன்" என்று சொல்லும் அவரது எதிர்காலத் திட்டங்களும் அபாரமானவை.

இவை அனைத்தையும் முழுமையாக நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/3cAeXDK

உலக அளவில் உணவு ஆப்களை இணைக்கும் இளைஞர்! - கரூர் டு சிங்கப்பூர் சாதனை! https://bit.ly/3cAeXDK

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு