Published:Updated:

இந்தியாவை நோக்கித் திரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

பங்குச் சந்தை

கடந்த 16 மாத காலத்தில் ரூ.4.38 லட்சம் கோடி இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி இருக்கிறார்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள். அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.1,300 கோடி அளவுக்கு இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிருக்கிறார்கள்...

இந்தியாவை நோக்கித் திரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

கடந்த 16 மாத காலத்தில் ரூ.4.38 லட்சம் கோடி இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி இருக்கிறார்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள். அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.1,300 கோடி அளவுக்கு இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறிருக்கிறார்கள்...

Published:Updated:
பங்குச் சந்தை

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஜூலை வரை பங்குச் சந்தை பெருமளவில் இறக்கம் கண்டதற்கு முக்கியமான காரணம், ரஷ்ய - உக்ரைன் போர் மட்டுமல்ல. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் பங்குச் சந்தையில் இருந்து பெருமளவில் வெளியேறியதுதான் காரணம்.

கடந்த 16 மாத காலத்தில் ரூ.4.38 லட்சம் கோடி இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறி இருக்கிறார்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள். அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.1,300 கோடி அளவுக்கு இந்திய நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

கவலையில் முதலீட்டாளர்கள்
கவலையில் முதலீட்டாளர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வெளியேற்றத்துக்கு முக்கியமான காரணம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள் அதனுடைய நிதியைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த ஆரம்பித்ததுதான். பெரும்பாலான மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த ஆரம்பித்ததும் உலக அளவில் பொருளாதாரத் தேக்கம் வந்துவிடுமோ என்று பயந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா உட்பட வளர்ந்து வரும் சந்தைகளிலிருந்து தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற ஆரம்பித்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை விற்றாலும் நிதித்துறை சார்ந்த பங்குகள் இவர்களால் அதிகமாக விற்கப்பட்டிருக்கிறது. அதிகமாக விற்கப்பட்ட 10 நிறுவனப் பங்குகளில் ஐந்து நிறுவனங்கள் எவை என்று பார்த்தால், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் மஹேந்திரா பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி - நிதித்துறை சார்ந்தவை ஆகும். இவர்கள் விற்ற ரூ.4.38 லட்சம் கோடியில் இந்த நிறுவனப் பங்குகளின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.2.08 லட்சம் கோடியாகும்.

முதலீடு
முதலீடு

என்னது, ரூ.4.38 லட்சம் கோடியா என அதிர்ச்சி அடைய வேண்டாம். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டில் சுமார் 5% மட்டுமே. இவர்கள் விற்றதுகூட உலக அளவில் இருக்கும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டுதானே தவிர, இந்தியப் பொருளாதார வளர்ச்சிமீது ஏற்பட்ட சந்தேகத்தால் அல்ல என்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்.

தொழிலாளர்கள் சேம நிதியிலிருந்து மாதம்தோறும் சுமார் ரூ.2,700 கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறது.

இவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை இந்திய நிறுவன முதலீட்டு நிறுவனங்கள் ஓரளவுக்கு நிரப்பியிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் சுமார் ரூ.3.68 லட்சம் கோடிக்கு பங்குகளை வாங்கியிருக்கின்றன. இதில் கணிசமான அளவு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற தொகையாகும். 2021-22-ம் ஆண்டு மட்டும் எஸ்.ஐ.பி முதலீட்டாளர்கள் ஏறக்குறைய ரூ.1.24 லட்சம் கோடி அளவுக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். உலகச் சந்தையைப்போல் இல்லாமல் இந்தியச் சந்தை மீள்வதற்கு இது பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இது மட்டுமல்லாமல், தொழிலாளர்கள் சேம நிதியிலிருந்து மாதம்தோறும் சுமார் ரூ.2,700 கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறது.

இந்தியப் 
பங்குச் சந்தை!
இந்தியப் பங்குச் சந்தை!

இனிவரும் நாள்களில் அமெரிக்கப் பொருளாதாரம் எப்படியிருக்கப் போகிறது என்பதைப் பொறுத்துதான் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நடவடிக்கை இருக்கும். `அமெரிக்கப் பொருளாதாரம் பணவீக்கத்தின் பிடியிலிருந்து மீண்டெழும் பட்சத்தில் டாலர் பரிவர்த்தனை மதிப்பில் மாற்றம் ஏற்படும். இதனால் வட்டி விகிதத்தைக் குறைக்க அமெரிக்க பெட் நடவடிக்கை எடுக்கக்கூடும். இந்தக் காரணங்களுடன், வேறு சில காரணங்களாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்யத் தூண்டும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையை விட்டு வெளியேறியது முக்கியமான ஒன்றுதான். அதனால் பங்குச் சந்தைகள் சுமார் 20% வரை இறக்கம் கண்டன. ஆனால், இந்த இறக்கத்தை முதலீடு செய்வதற்கு நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட முதலீட்டாளர்கள் இப்போது நல்ல லாபம் அடைந்திருப்பார்கள். ஏனெனில், சந்தை இறக்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களே பிற்பாடு நல்ல லாபம் அடைகிறார்கள். இதற்குக் கொஞ்சம் பொறுமையும், மன தைரியமும் வேண்டும். ஆனால், முதலீடு செய்து வாங்கி வைத்திருக்கும் பங்கு தரமானதாக இருக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்
mutual fund

பங்குச் சந்தை சில்லறை முதலீட்டாளர்களைப் பொறுத்தவரையில், எந்தப் பங்கில் முதலீடு செய்வது எனக் குழப்பத்துடன் இருப்பவர்களுக்கு எப்போதும் ஆபத்பாந்தவனாக இருப்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்தான். இதில் முதலீடு செய்யும்போது எந்த நிறுவனத்தில், எந்தத் துறை சார்ந்த பங்கில் முதலீடு செய்வது என்பதை சிறு முதலீட்டாளர்கள் சார்பாக மியூச்சுவல் ஃபண்டை நிர்வகிப்பவர்கள் எடுப்பதால், மூளையைக் கசக்கிக்கொள்ளத் தேவையில்லை.

இந்தியாவைவிட்டுப் போன வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவை நோக்கித் திரும்பத் தொடங்கிவிட்டார்கள். இதனால்தான் கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை புள்ளிகள் ஏற்றத்தின் போக்கில் இருக்கிறது. விரைவிலேயே, அந்நிய முதலீடு என்கிற சுனாமி மீண்டும் இந்தியாவைத் தாக்கும் என எதிர்பார்ப்போம்.