Published:Updated:

முதல்வர் ஸ்டாலினுடன் ரகுராம் ராஜன் சந்திப்பு; விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்னென்ன?

முதல்வருடன் ரகுராம் ராஜன் சந்திப்பு
News
முதல்வருடன் ரகுராம் ராஜன் சந்திப்பு ( ரகுராம்ராஜன் )

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது கவனம் ஈர்த்த ரகுராம் ராஜனுக்கும், பா.ஜ.க அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு உருவானது. அரசின் பல்வேறு கொள்கைகளில் முரண்பாடான கருத்துகளையும் விமர்சனத்தையும் வைத்தவர்.

தமிழக வளர்ச்சிக்கான பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இன்று முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டதாகும்.

இந்தக் குழு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான ஆலோசனைகளை முதல்வருக்கு வழங்க உருவாக்கப்பட்டது. இக்குழுவில் அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜான் ட்ரீஸ், டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோருடன் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், கொரோனா காரணமாக நேரில் சந்திக்காமல் இணையம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பேசி வந்தவர் தற்போது தமிழகம் வந்துள்ள நிலையில், முதல்வரை, இன்று நேரில் சந்தித்துள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பில் தமிழகத்தின் தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்தும், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ரகுராம் ராஜன் முதல்வருடன் விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்தும், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் விவாதித்துள்ளனர். மாநிலம் குறித்து மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதாரம் 8% - 9% வளர்ச்சி அடைந்தால்தான் போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று சமீபத்தில் கூறியிருந்தது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின்போது தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வருடன் ரகுராம் ராஜன் சந்திப்பு
முதல்வருடன் ரகுராம் ராஜன் சந்திப்பு
ரகுராம்ராஜன்

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது கவனம் ஈர்த்த ரகுராம் ராஜனுக்கும், பா.ஜ.க அரசுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு உருவானது. அரசின் பல்வேறு கொள்கைகளில் முரண்பாடான கருத்துகளையும், விமர்சனத்தையும் வைத்தவர். குறிப்பாக, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அவர் ஆரம்பம் தொட்டு எதிர்த்தார்.

தொடர்ந்துவந்த கருத்துவேறுபாடுகள் காரணமாக அவரை கவர்னராக நீட்டிக்காமல் உர்ஜித் படேலை கவர்னராக நியமித்தது மத்திய அரசு. பின்னாளில் உர்ஜித் படேலும் அரசின் மீதான முரண்பாடுகளால் பதவி விலகினார்.

ரகுராம் ராஜன் தந்த ஆலோசனைப்படி தமிழக அரசு, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்ப்போம்!