Published:Updated:

இந்த 4 வழிகளைப் பின்பற்றினால் உங்கள் கடன்களை எளிதாக அடைக்கலாம்! - பணம் பண்ணலாம் வாங்க - 46

மேலை நாடுகளில் வங்கிகள், கிரெடிட் கார்டு கம்பெனிகள் போன்ற கடன் நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி எப்படி நம் வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்று வகுப்பே எடுக்கிறார்கள். கடன் தீர்க்க உதவும் கம்பெனிகள் கூட இருக்கின்றன.

சென்ற அத்தியாயங்களில் கடன் தரும் நிறுவனங்கள் பற்றியும், பல வகையான கடன்கள் பற்றியும் பார்த்தோம். ஆனால் நம் நாட்டில் பொருளாதார ஆலோசகர்களிடம் பலரும் கேட்கும் கேள்வி, கடன் சுமையை எப்படிக் குறைப்பது என்பதாகத்தான் இருக்கிறது. மேலை நாடுகளில் வங்கிகள், கிரெடிட் கார்டு கம்பெனிகள் போன்ற கடன் நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி எப்படி நம் வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்று வகுப்பே எடுக்கிறார்கள். கடன் தீர்க்க உதவும் கம்பெனிகள் கூட இருக்கின்றன.

Loan (Representational Image)
Loan (Representational Image)
சில நிமிடங்களில் கடன்கொடுக்கும் `டிஜிட்டல் லெண்டிங்' - ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்ன? - 45

முன்பே கூறியபடி, இந்தியக் குடும்பங்களின் சராசரி கடன் விகிதம் கோவிட்டுக்குப் பின் உயர்ந்துள்ளது. கொரோனா காலத்தில் சம்பளக் குறைப்பையும், வேலை இழப்பையும் பலர் சந்திக்க நேர்ந்தது. வருமானம் குறைந்தது; செலவு குறையவில்லை. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பலரின் மருத்துவச் செலவுகள் அவர்களைக் கடனாளியாக்கியுள்ளது.

பல தரப்பட்ட கடன்களை வாங்கிவிட்ட நிலையில், கடனில் முழுகித் தத்தளிக்கும் பலரும் கேட்கும் கேள்வி: `எப்படி இந்தக் கடன் வலையில் இருந்து தப்புவது?' என்பதே.

இதற்கு நான்கு வழிகளில் முயற்சி செய்யலாம்.

வழி 1: உங்கள் கடன் அனைத்தையும் வட்டி விகிதத்தின் அடிப்படையில் பட்டியலிடுங்கள். அநேகமாக முதலில் வருவது கிரெடிட் கார்டு கடனாகவும், அடுத்து வருவது பர்சனல் லோனாகவும் இருக்கும். கூடியவரை இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழக்கமான இ.எம்.ஐ.யை விட சற்று அதிகம் கட்டினால், நம் பணத்தை வட்டியாக உறிஞ்சும் இவற்றை முதலில் முடிக்கமுடியும். வெற்றிகரமாக இவற்றை முடிக்கும் பட்சத்தில் மற்ற கடன்களைக் கட்டுவதற்கு அதிகம் பணம் இருக்கும்.

Loan (Representational Image)
Loan (Representational Image)
எந்தெந்த கடன்களுக்கு வரி விலக்கு கிடைக்கும் தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 44

வழி 2: சில நிபுணர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மை என்னவென்றால், ஒரு கடனை நாம் கட்டி முடித்தால் கிடைக்கும் உத்வேகம் மற்ற கடன்களையும் அடைக்க உற்சாகம் தரும் என்பதே. இந்த உற்சாகத்தை அடைய, கடன்களை வட்டி விகிதத்தின் அடிப்படையில் பட்டியலிடாமல் கடன் தொகை அடிப்படையில் பட்டியலிடவேண்டும். மிகக் குறைந்த அளவுள்ள கடனை முதலில் கட்டி முடித்து விட்டு அதற்கான இ.எம்.ஐ.தொகையையும் சேர்த்து அடுத்த சிறிய கடனைக் கட்ட வேண்டும். இதன் மூலம் ஒன்றிரண்டு பெரிய கடன்கள் மட்டுமே பின்தங்கும்; கடைசியாக அவற்றின் மீது கவனத்தைக் குவித்து அடைத்துவிட முடியும்.

வழி 3: உங்களுக்கு ஒரு பர்சனல் லோன், ஒரு கிரெடிட் கார்டு லோன், கார் லோன் மற்றும் வீட்டுக் கடன் இருந்தால், வீட்டுக் கடன் தந்திருக்கும் வங்கி / நிறுவனத்திடம் ஒரு டாப் அப் லோன் கேட்டுப் பெறலாம். அதன் மூலம் வீட்டுக்கடன் தவிர மற்ற அனைத்தையும் அடைத்துவிட முடியும். வட்டி விகிதமும் குறையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழி 4: இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதங்கள் குறைந்து வருவதால் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் முறையை உபயோகித்து வேறு நிறுவனத்தில் கடன் பெறுவதன் மூலமும் வட்டியைக் குறைக்க முடியும். நகைக் கடன் அல்லது எஃப்.டி.லோன் கூட மற்ற கடன்களை விடக் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும் என்பதால் அவற்றையும் உபயோகித்து வட்டி விகிதம் அதிகமுள்ள கடன்களை அடைக்கலாம். இப்படி கடன்களை அடைக்கும்போது அவற்றுக்கு ப்ரீபேமென்ட் பெனால்ட்டி (முன்கூட்டிக் கட்டுவதற்கான அபராதம்) உள்ளதா என்று உறுதி செய்து கொள்வது நல்லது.

ஒரு கடனை வாங்கிவிட்ட பின்னர், அதனை சரியான முறையில் அடைக்காவிட்டால், நம் கிரெடிட் ஸ்கோர் குறைந்து பிற்காலத்தில் வீட்டுக்கடன் போன்ற நல்ல விஷயங்களுக்காக கடன் வாங்க எண்ணுகையில் தடையாக வரலாம். ஆகவே கூடியவரை கடன் இ.எம்.ஐ.களை நேரத்தில் கட்டிவிட வேண்டும். இதற்கு வங்கிகள் தரும் ஆட்டோமேடிக் டெபிட் முறையை பயன்படுத்தலாம்.

Loan (Representational Image)
Loan (Representational Image)
இவற்றிற்காக வாங்கினால், பர்சனல் லோன் கூட கெட்ட கடன்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 43

அடுத்து கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்கள்

கொரோனாவின் கடுமை குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, நாம் கட்டவேண்டிய இ.எம்.ஐ.யை விட அதிகம் கட்ட முயல்வது கடனை வேகமாகக் குறைக்க உதவும். இதற்காக நம் முதலீடுகளை சற்று ஒத்திப் போடுவதிலும் தவறில்லை. இந்த இன்டர்நெட் யுகத்தில் கடன் வாங்குவது எளிது; அடைப்பது கடினம். கூடியவரை நம் வருமானத்தை விட அதிகம் செலவழிக்காமல் இருக்க முயல்வது கடன் தொல்லைகளில் இருந்து நம்மைக் காக்கும்.

- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு