Published:Updated:

நிரந்தரப் பணக்காரராக இருக்க வைக்கும் சூட்சுமங்கள்..! எல்லோருக்கும் உதவும் ரகசியங்கள்...

B E C O M I N G R I C H

பிரீமியம் ஸ்டோரி

பி.வி.சுப்ரமணியம், நிதி ஆலோசகர், Subramoney.com

என் வாழ்க்கையின் பெரும் பகுதியை, பெரும் பணக்காரர் களோடு செலவழித்திருக்கிறேன். இதன் மூலம் அவர்கள் பணக்காரர்களாக இருப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர முடிந்தது.

பி.வி.சுப்ரமணியம் 
நிதி ஆலோசகர், 
Subramoney.com
பி.வி.சுப்ரமணியம் நிதி ஆலோசகர், Subramoney.com

1. சொத்துகளுக்கு அடிமை அல்ல...

பணக்காரர்களாக இருப்பது குறித்து எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லை. அவர்களுடைய சொத்து மதிப்புக்கும் வாழ்க்கைக்கும் நீண்ட இடைவெளி உண்டு. அவர்களுடைய சொத்துக்கு அவர்கள் அடிமை ஆகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்கிறார்கள்.

2. தீவிர மற்றும் பன்முக முதலீடு...

பணக்காரர்கள் தங்களுடைய முதலீட்டு பங்களிப்பை முடிந்தவரை பெரிய அளவில் வைத்துக் கொள்கிறார்கள். 20 முறை 500 பங்குகளைப் பிரித்து பல்வேறு காலகட்டத்தில் வாங்குவார்கள். வாராந்தர அடிப்படையில் நிதி ஆதாரத்தைப் பொறுத்து, சீராக முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், முதலீட்டில் பன்முகத்தைக் (Diversification) கடைப்பிடிக்கிறார்கள். உதாரணமாக, மியூச்சுவல் ஃபண்டு களில் பிரித்து முதலீடு செய்வதைப் போல. செறிவூட்டப்பட்ட (Concentration’) முதலீடு மூலமாக செல்வம் பெருகிறது. கூடவே, பரலாக்க நோக்கில் செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் செல்வம் பாதுகாக்கப்படுகிறது.

நிரந்தரப் பணக்காரராக இருக்க வைக்கும் சூட்சுமங்கள்..! எல்லோருக்கும் உதவும் ரகசியங்கள்...

3. குறைவாகச் செலவழிக்கிறார்கள்...

கொஞ்சமாகப் பணம் வைத்திருப் பவர்களைவிடவும் செல்வந்தர்கள் அவர்களுடைய வருமானத்தில் சிறிய பகுதியைத்தான் செலவு செய் கிறார்கள். பெரும்பகுதியைச் சேமித்து முதலீடு செய்கிறார்கள். சார்லி முங்கர், முதலில் முதலீடு செய்தது போக மிச்சத்தைத்தான் செலவு செய்ய வேண்டும் என்கிறார். செல்வந்தர்கள் சேமிப்பதில்லை மாறாக, முதலீடு செய்கிறார்கள். இந்தப் போக்கைத்தான் பணக்கார ராக விரும்பும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். முதலீடு செய்ய வேண்டும் என்ற மனப்பான்மைதான் முக்கியமே தவிர, எவ்வளவு முதலீடு என்பதல்ல.

பெரும்பாலான பணக்காரர்கள் தங்களுடைய தொழிலில்தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். ரியல் எஸ்டேட், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் செய்வதைவிடவும் முதலீட்டின் மீது அதிக வருமானத்தைத் தொழில்கள் தருகின்றன. பணக்காரர் ஆவதற்கு செல்வத்தைப் பெருக்கக் கூடிய தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும். அதைப் போர்ட் ஃபோலியோ மூலமும் செயல்படுத்தலாம். தொழிலில் முதலீடு செய்வதிலும் ரிஸ்க் இருக்கிறது. பல தொழில்கள் மூன்றாம் தலை முறையைத் தாண்டி நிலைத் திருப்பதில்லை. ரிஸ்க்கைக் குறைக்க பலதரப்பட்ட லாபகரமான தொழில் களில் முதலீடு செய்கிறார்கள். ரிஸ்க்கைக் குறைப்பதற்காக இ.டி.எஃப், இண்டெக்ஸ் ஃபண்டு களில் தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் முதலீட்டைத் தொடங்குகிறோம் என்பதும் நெருக் கடியான, பதற்றமான சூழலிலும் முதலீட்டைத் தொடர்வதும் அவசியம்.

4. வலுவான நிதி அடித்தளம்...

ஒரு வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்கி (உதாரணமாக, ரூ.50 லட்சம்), தொடர்ந்து கணிசமான வருமானமும் ஈட்டும் பணக்காரர்கள் எந்தச் சூழலுக்கும் பதற்றம் அடைவதில்லை. இது நெருக்கடியான தருணங்களில் உதவியாக இருக்கும். பல சமயங்களில் பங்குச் சந்தை எதிர்மறை போக்குக்கு உள்ளாகலாம். முதலீடு செய்த நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் ஏமாற்றமளிக்கலாம். ஆனால், சந்தை அதிலிருந்து மீண்டு வரும்வரை பொறுமையாக இருந்தால் தான் பணக்காரர் ஆக முடியும்!

தமிழில்: திவ்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு