Published:Updated:

ரூ.1,200 கோடி மோசடி... கிரிப்டோகரன்சி முதலீட்டில் எச்சரிக்கை!

மோசடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோசடி

மோசடி

'மோரிஸ் காயின் கிரிப்டோகரன்சி’ என்ற பெயரில் முதலீட்டாளர்களை ஏமாற்றிய கேரளத் தொழிலதிபரான கே.நிஷாத் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக மத்திய பணமோசடி தடுப்பு ஏஜென்சி கடந்த வாரம் ஓர் அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த அதிரடி நடவடிக்கை யால் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலத்தைச் சேர்ந்த முதலீட் டாளர்களிடமிருந்து ரூ.1,200 கோடி மோசடி செய்யப்பட்டிருக்கும் திடுக்கிடும் உண்மை வெளியாகியிருக்கிறது.

‘மோரிஸ் காயின் ஸ்கேம்’ என்று சொல்லப்படும் இந்த மோசடியின் பின்னணி என்ன?

ரூ.1,265 கோடி மோசடி...

“கே.நிஷாத் என்பவர் எங்களை ஏமாற்றிவிட்டர்’’ என, மலப்புரம், கண்ணூர் மற்றும் கேரளாவின் பிற மாவட்டங் களிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் புகார் கொடுக்க, கேரளா காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரிக்கத் தொடங்கியது. இந்த விசாரணையின் அடிப்படையில், கே.நிஷாத் மற்றும் அவரின் பிசினஸ் பார்ட்னர்கள் சிலரும் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து லாபத்தைத் தருவதாகக் கூறி, கிட்டத்தட்ட 900 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 1,265 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருக்கும் உண்மை தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, கே.நிஷாத்துக்குச் சொந்தமான சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

லாங் ரிச் குளோபல், லாங் ரிச் டெக்னாலஜிஸ் மற்றும் மோரிஸ் டிரேடிங் சொல்யூஷன்ஸ் என்கிற பெயரில் நிறுவனங்களை ஆரம்பித்து, இந்த நிறுவனங்களின் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ‘மோரிஸ் காயின் கிரிப்டோ கரன்சி’ என்கிற பெயரில் இந்தக் கும்பல் பணத்தை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில் மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு ரூ.1,265 கோடி என்று கணக்கிடப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள், இந்த நிறுவனத்துக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் போராடி வரும் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூற்றின்படி, கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 11 லட்சம் முதலீட்டாளர்கள் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள முதலீட்டாளர்கள் சுமார் ரூ.3,000 கோடிக்கு மேல் இழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ரூ.1,200 கோடி மோசடி... கிரிப்டோகரன்சி முதலீட்டில் எச்சரிக்கை!

கொரோனாவால் உச்சம்...

கிரிப்டோகரன்சி வர்த்தகம் நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்தாலும், மக்கள் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால், அதில் பணம் போடாமல் ஒதுங்கியே இருந்தார்கள். ஆனால், கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து, உலக அளவில் பலரும் கிரிப்டோ கரன்சியில் பணம் போட ஆரம்பித்தார்கள். லட்சங்களில், கோடிகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் கிரிப்டோகரன்சி களின் மதிப்பு வேகமாக உயரத் தொடங்கியது. பிரபலமான பிட்காயின் விலை அபரிமிதமான ஏற்றத்தைச் சந்தித்தது ஒருபுறம் எனில், டோஜ்காயின் போன்ற புதிய கிரிப்டோக்களின் மதிப்பு கடந்த ஆண்டு மட்டுமே 8,300% வரை உயர்ந்தது.

புதிய கிரிப்டோகாயின்களில் விலை ஏற்றம், பிட்காயினின் விலை ஏற்றத்தைவிட அதிகமாக இருந்தது. நாளடைவில் பல கிரிப்டோகரன்சிகளின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்தாலும், அதன் மீதான முதலீட்டு மோகம் அப்படியே உள்ளது.

இந்தியாவில் 1.5 கோடி பேர்...

இந்தியாவில் எத்தனை பேர் கிரிப்டோக்களை வைத்திருக் கிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ‘CoinSwitch Kuber’ என்கிற நிறுவனம் 1.5 கோடிக்கும் அதிகமான கிரிப்டோ முதலீட் டாளர்கள் இந்தியாவில் இருக்கலாம் எனச் சொல்லி யிருக்கிறது.

கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில்தான் பிட்பாக்கெட் அடிப்பதும் அதிகம் நடக்கும். அதே போலத்தான், இந்தியாவில் அதிகமான மக்கள் அனைத்து வகையான கிரிப்டோக்களிலும் வர்த்தகம் செய்வதால், ஹேக்கர் களும், மோசடி பேர்வழிகளும் களமிறங்கி இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கே.நிஷாத் போல ஏராளமானவர்கள் ‘கிரிப்டோ மூலம் எக்கச்சக்க லாபம் சம்பாதித்துத் தருகிறேன்’ என மக்களை ஏமாற்றிப் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

சட்டவிரோத வாலட்டுகள்...

பிளாக்செயின் ஆராய்ச்சி நிறுவனமான ‘Chainalysis’ அறிக்கையின்படி, உலக அளவில் சட்டவிரோத வாலட் முகவரிகள் வைத்திருக் கும் கிரிப்டோகரன்சிகளின் மொத்த மதிப்பு கடந்த 2021-ம் ஆண்டு 79% உயர்ந்து, 14 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது 2020-ம் ஆண்டில் 7.8 பில்லியன் டாலராக இருந்திருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் பல்வேறு கிரிப்டோ மோசடிகளால் உலக அளவில் 2.8 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீட்டாளர்கள் இழந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

கட்டுப்பாடு ஏன் இன்னும் இல்லை..?

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைக் கட்டுப் படுத்தும் மசோதாவை சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த மசோதா கொண்டுவரப்படாமல், அடுத்த கூட்டத்தொடரில் கொண்டு வர மத்திய அரசாங்கம் முடிவெடுத்தது. கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகள் தடுக்கப் பட வேண்டுமெனில், தெளிவான சட்ட விதிமுறைகள் உருவாக்கி, செயல்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அதிகம் தெரிய வராத இதில் நிறைய லாபம் பார்த்துவிடலாம் என்கிற ஆசையைத் தூண்டி, மோசம் செய்பவர்களைத் தண்டிக்க சட்டவிதிகள் இல்லையெனில், இது மாதிரி மோசடி நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.

இது ரிஸ்க் மிகுந்த விஷயம் என்பதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அதிக லாபம் கிடைக்கும் என்கிற ஆசையில் இதில் பணம் போடுவது, பணத்தை இழப்பதற்கான வாய்ப்பாக அமையும் என்பதை மறக்கக் கூடாது!