Published:Updated:

திரண்டது, ரூ.1,43,79,224... கைகோத்த வாசகர்கள், கவலைமறந்த முத்தன்பள்ளம்!

வீடு வழங்குதல்....
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு வழங்குதல்....

நிதி உதவி

இயற்கையால் பாதிக்கப்பட்டு மருகி நின்ற மக்களின் கனவை நனவாக்கினால், அங்கே பொங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துக்கு அளவேது! தமிழகத்தையே புரட்டிப் போட்ட மழை, வெள்ளத்துக்கு நடுவே, அத்தகையதொரு மகிழ்ச்சி வெள்ளத்தைக் கண்டு நாமும் மகிழ்ந்தோம் முத்தன்பள்ளம் கிராமத்தில்!

நவம்பர் 2018-ல் கஜா புயலின் கொடூர தாக்குதலால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல் (கொடைக்கானல்) ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்புகளை எதிர்கொண்டன.

திரண்டது, ரூ.1,43,79,224... கைகோத்த வாசகர்கள், கவலைமறந்த முத்தன்பள்ளம்!

விகடன், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொண்டே, வாசகர்களிடமும் நிதி கோரியது. விகடன் குழுமத்தின் பங்காக 10 லட்சம் ரூபாய் சேர்க்கப்பட, தன் சார்பிலும் தன் சகோதரர் சூர்யா சார்பிலும் 20 லட்ச ரூபாயை விகடன் அலுவலகத்துக்கே வந்து வழங்கினார், நடிகர் கார்த்தி. கடமையை உணர்ந்த வாசகர்களும், விகடன் குழும ஊழியர்களும் பங்களிக்க, மொத்தம் ரூ.1,43,79,224 நிதி திரண்டது!

அத்தியாவசியப் பொருள்கள், இலங்கை தமிழர் அகதி முகாம்களில் வீடுகள் சீரமைப்பு, தோட்டங்களில் மறுசீரமைப்பு எனத் தொடர்ந்தன உதவிகள். நிறைவாக, குடிசை இழந்த மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டமும் தொடங்கியது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம், முதலியார்தோப்பு, வேட்டைக்காரணிருப்பு பகுதிகளில் 10 வீடுகள் கட்டப்பட்டு, 6.12.19 அன்று ஒப்படைக்கப்பட்டன. அப்போதே, புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முத்தன்பள்ளம் கிராமத்திலும் வீடுகள் கட்டும்பணி தொடங்கப்பட்டது.

கடந்த நவம்பர் 18-ம் தேதி, 13 குடும்பங்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. மூன்று வீடு களின் பணிகள் தொடர்கின்றன. திருவாரூர் மாவட்டம், பூசலாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜேந்திரனின் குடிசையும் கஜா புயலால் சேதமடைய, அவருக்கும் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது.

அனைத்தையும் சாத்தியப்படுத்திய வாசகர்களின் சமூக அக்கறைக்கு வணக்கங்கள்!