Published:Updated:

காஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்துக்கு; கட்டாய பரிசோதனைக் கட்டணம் உயர்வு!

சமையல் எரிவாயு

காஸ் சிலிண்டர் கட்டாய பரிசோதனை (Mandatory inspection) கட்டணம் என்பது முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என ரூ.75 வசூலிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டு ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் சமையல் எரிவாயு அடுப்புதான் பயன்படுத்துகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி உஜ்வாலா திட்டத்தின் மூலம் அனைவர் வீட்டிலும் சமையல் எரிவாயு அடுப்பு என்ற இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கை களை எடுத்தார். இதனால் விறகு அடுப்பில் சமைத்தவர்கள்கூட சமையல் எரிவாயு அடுப்புக்கு மாற முடிந்தது. இது வளர்ச்சியின் கண்ணோட்டத்தில் மிக முக்கியமான மாற்றமாகப் பார்க்கப் பட்டது.

ஆனால், அதேசமயம் காஸ் சிலிண்டர் விலை கடந்த சில ஆண்டு களில் மட்டும் மளமளவென உயர்ந்தது. ஏற்கெனவே பணவீக்கம் உயர்ந்து விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுவரும் மக்கள் தொடர்ந்து காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தையும் எதிர்கொண்டு வந்தார்கள்.

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

இந்நிலையில் காஸ் சிலிண்டர் பரிசோதனைக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டாய பரிசோதனை (Mandatory inspection) கட்டணம் என்பது முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை என ரூ.75 வசூலிக்கப்பட்டுவந்தது.

இப்போது, இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டு ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, காஸ் சிலிண்டர் பயனாளர்கள் 18 சதவிகித ஜிஎஸ்டியுடன் ரூ.295 செலுத்த வேண்டி இருக்கும்.