Published:Updated:

`2020-ல் உள்நாட்டு உற்பத்தி 6.7-லிருந்து 5.8 சதவிகிதமாகக் குறையும்' - மூடிஸ் கணிப்பு!

உள்நாட்டு உற்பத்தி
உள்நாட்டு உற்பத்தி

2019 நிதிநிலை அறிக்கையின் படி உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதமாக அரசாங்கம் நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தரச் சான்றிதழ் நிறுவனமான மூடிஸ் (Moody's), 2020-க்கான இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6.6 சதவிகிதத்திலிருந்து 5.4 சதவிகிதமாகக் குறையும் என்றும் 2021-ம் ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி 6-லிருந்து 5.8 சதவிகிதமாகக் குறையும் என்றும் கணித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால், தற்போது உலகப் பொருளாதார வளர்ச்சி வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தாக்கம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் அளவும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் அளவும் குறைந்துள்ளது.

`அதிகரிக்கும் உயிரிழப்புகள்; சார்ஸை விஞ்சிய கொரோனா! - அச்சத்தில் சீனா #Corona

தற்போதைய நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 2019 நிதிநிலை அறிக்கையின் படி உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதமாக அரசாங்கம் நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் சீனாவின் உள்நாட்டு உற்பத்தியில் 2020-ல் 5.2 சதவிகிதமாகவும் 2021-ல் 5.7 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜி20 நாடுகளில் ஆண்டுக்கு 2.4 சதவிகிதம் என்கிற அளவில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு