Published:Updated:

`நிறுவனங்களுக்கான நடப்பு மூலதன கடன்களைவிட 10% அதிகம் வழங்குங்கள்!' - வங்கிகளுக்கு அரசு உத்தரவு

பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி

அனுமதிக்கப்பட்ட நடப்பு மூலதன கடன்களைவிட பத்து சதவிகிதம் அதிகம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், வழங்கப்படும் கடன் தொகை நபருக்கு 200 கோடி ரூபாயை மிஞ்சக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால், உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, இந்தியா சுமார் 348 மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னலாடை முதல் ஆட்டோமோபைல் வரை, அனைத்துத் துறைகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துவருகின்றன. பெரும் இழப்பைத் தடுக்க, கடன் திருப்பிச் செலுத்தும் கால நீட்டிப்பு, வரிக் குறைப்பு மற்றும் நிதி ஊக்கத்தொகை போன்ற கோரிக்கைகளை சிஐஐ மற்றும் அஸோச்சம், மத்திய அரசிடம் வைத்திருந்தது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சில சலுகைகளை வழங்கியிருக்கிறார். கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவசரகால கடன் வழங்க, பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நடப்பு மூலதன கடன்களை (working capital loans) விட பத்து சதவிகிதம் அதிகம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், வழங்கப்படும் கடன் தொகை நபருக்கு 200 கோடி ரூபாயை மிஞ்சக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் 8,000 எழுத்தர் நிலைப் பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஏற்கெனவே இந்த அவசரகால கடன் வசதியை வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கியுள்ளது. இதை விரைவில் மற்ற வங்கிகளும் செயல்படுத்தும் என்று வங்கித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு