Published:Updated:

`நிறுத்தப்பட்ட 80 சதவிகித சேவைகள்!' -கடும் நிதி நெருக்கடியில் உலகளாவிய விமான நிறுவனங்கள் #corona

விமான சேவை
விமான சேவை

இந்திய விமான சேவை நிறுவனங்கள், தங்களின் இழப்புகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கிக்கூறியிருக்கின்றன.

கொரோனா பரவத் தொடங்கியதும் விமானப் போக்குவரத்துத் துறைதான் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடும் விமான சேவையை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தத்தொடங்கின. அப்படி நிறுத்தப்பட்ட விமான சேவை, ஒன்றரை மாதங்களைக் கடந்தபின்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், உலக அளவில் 80% விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலை மேலும் தொடருமென்றே தெரிகிறது.

விமான சேவை
விமான சேவை

இன்னும் சில மாதங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டாலும் பயணிகள் முழு அளவில் பயணிப்பார்களா என்பது கேள்விக்குறியே. பயணிகள், பணியாளர்களுக்குக் கொரோனா பாதுகாப்புக்கான நடவடிக்கை, பணியாளர்களுக்கான ஊதியம், விமானங்களின் பராமரிப்புச்செலவுகள், உலக நாடுகளில் விமான சேவைக்கு இருக்கும் தடைகள், தடை நீக்கங்கள், கட்டுப்பாடுகள் போன்றவை விமான சேவை நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாக முன்நிற்கின்றன.

பெங்களூரு டு டெல்லி விமானம்; ஆக்ராவுக்கு ரயில்! -தப்பிய கூகுள் ஊழியரின் மனைவிக்கு  கொரோனா பாசிட்டிவ்

மிகப்பெரிய வருமான இழப்பைச் சந்தித்துவரும் விமான சேவை நிறுவனங்கள், ஆள்குறைப்பு நடவடிக்கைகள், சம்பளத்தைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளின்மூலம் செலவுகளைக் குறைக்க முயன்றுவருகின்றன. அதற்கும் மேலாக, அந்தந்த நாட்டு அரசாங்கங்களை எதிர்நோக்கியுள்ளன.

அமெரிக்க அரசு, அந்நாட்டு விமான சேவை நிறுவனங்களின் நிதிச்சிக்கல்களைச் சமாளிப்பதற்காக 25 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்திய விமான சேவை நிறுவனங்கள், தங்களின் இழப்புகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கிக் கூறியிருக்கின்றன. இவர்களின் தேவையைப் பூர்த்திசெய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்துவருகிறது.

மோடி ட்ரம்ப்
மோடி ட்ரம்ப்
vikatan

ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பு!

பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள், தங்களின் பயண நேரம், பயணிக்கும் நகரங்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு மாற்றியமைத்து வருகின்றன. தினசரி பயணிக்கும் விமானங்கள், தங்களது சேவையை வாராந்திர பயணத்திட்டமாக மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றன.

அதேபோல, கொரோனாவுக்குப் பின்னர் விமான சேவையில் மனிதர்களின் பயன்பாடுகள் குறைக்கப்பட்டு, ஆன்லைன் பயன்பாடும், ரோபாட்டுகளின் பயன்பாடும் அதிகரிக்குமென்று தெரிகிறது. இதன்மூலம், ஒருவரையொருவர் தொடுவதற்கான, நெருங்குவதற்கான வாய்ப்புகளைக் குறைத்துக்கொண்டு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவுள்ளன. எனவே, கொரோனாவுக்குப்பின் மிகப்பெரிய மாற்றங்களை விமானப்போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளக்கூடும்.

அடுத்த கட்டுரைக்கு