Published:Updated:

எந்த நிதி இலக்குக்கு முன்னுரிமை? பக்கா பிராக்டிக்கல் டிப்ஸ்..!

நிதி இலக்கு
பிரீமியம் ஸ்டோரி
நிதி இலக்கு

நிதி இலக்கு

எந்த நிதி இலக்குக்கு முன்னுரிமை? பக்கா பிராக்டிக்கல் டிப்ஸ்..!

நிதி இலக்கு

Published:Updated:
நிதி இலக்கு
பிரீமியம் ஸ்டோரி
நிதி இலக்கு

ஒருவருக்கு ஏகப்பட்ட நிதி இலக்குகள் (Financial Goals) இருக்கலாம். ஆனால், அவர் களின் தற்போதைய சம்பளம், சம்பாத்தியத்தைக் கொண்டு, ஓரிரு நிதி இலக்குகளை மட்டுமே நிறைவேற்ற முடியும். இது அனைவருக்கும் பொருந்தும். அதனால்தான் எந்த நிதி இலக்குகளுக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமாக உள்ளது.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம் இணை நிறுவனர்,  https://www.holisticinvestment.in/

நீங்கள் முதலில் எந்த இலக்குக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறீர்கள், உங்கள் ஓய்வுக்காலமா அல்லது கடன் களிலிருந்து விடுதலையா அல்லது உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் கல்யாணமா?

நிதித் திட்டமிடல்படி, கீழ்க்கண்ட செயல்களின் வரிசையைப் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும். நிறைய பேருக்கு நாங்கள் வழங்கிய ஆலோசனையும் கூட இதுதான். இதைப் பின்பற்றி நிதி வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏகப்பட்ட பேர்.

எந்த நிதி இலக்குக்கு முன்னுரிமை? பக்கா பிராக்டிக்கல் டிப்ஸ்..!

செயல்களின் வரிசை:

1. கடனை அடைக்க அதற்கான நிதியை (Debt Clearance Fund) உருவாக்குங்கள். (கடன் இருக்கும்பட்சத்தில்)

2. நீண்ட கால கடன்களைத் தவிர உங்கள் அனைத்து குறுகிய காலக் கடன்களையும் முதலில் அடைக்கவும்.

3. மூன்று முதல் ஆறு மாதக் குடும்பச் செலவுகளுக்கான அவசரகால நிதியை உருவாக்கவும். (அவசரகால நிதி இல்லாதபட்சத்தில்)

4. சம்பளம் / வருமானத்தில் 15% தொகையை உங்களின் ஓய்வுக்காக முதலீடு செய்யுங்கள்.

5. குழந்தைகளுக்கான உயர்கல்வி நிதியை உருவாக்குங்கள்.

6. வீட்டுக் கடன் போன்ற நீண்ட காலக் கடன்களை நிதானமாக அடையுங்கள்.

மேற்கண்டவற்றை நிறைவேற்ற விரிவான திட்டமிடல் தேவையில்லை. உங்கள் கடன் தீர்வு நிதியை உருவாக்கி குறுகிய கால கடன்களைக் கட்டி முடிக்கவும். அதன் பிறகு, அங்கிருந்து அவசரகால நிதியைச் சேர்க்கத் தொடங்க வேண்டும்.

மேற்கண்ட செயல்திட்டத்தில் நீங்கள் ஏதாவது மாற்றங்களைச் செய்ய விரும்பினால் செய்யலாம்.

எப்போதுமே திட்டத்தைவிட நிதி இலக்கில் கவனம் செலுத்துவது முக்கியமாகும். ஏதாவது, கடன்களுக்கு 20% வட்டி செலுத்தினால், ஓய்வூதிய முதலீட்டை மேற்கொள்வதற்குப் பதில் அந்தக் கடனுக்கு முன்னுரிமை தந்து அதை விரைந்து அடைப்பது மிக முக்கியமாகும்.

முதல் மூன்று செயல்திட்டத்தை அமல்படுத்துவது மூலம் நீங்கள் பின்னர் தேவைப்பட்டால் முதலீட்டில் கணக்கிடப் பட்ட ரிஸ்க்குகளை (Calculated Risks) எடுக்க முடியும். பெரும்பாலும், நமக்குப் பொருத்தமில்லாத இலக்குகளுக் காகத்தான் நாம் அதிக ரிஸ்க்குகளை எடுக்கிறோம்.

உருவாக்கப்பட்ட நிதி இலக்குகளுக்கும் (Made-up financial goals) முக்கியமான நிதி இலக்குகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீங்கள் குறைக்க வேண்டும். அதைச் செய்ய, நான் உங்களுக்கு மூன்று வெவ்வேறு வாழ்க்கை நிலைகளைக் (Scenarios) கொடுக்கப்போகிறேன்.

அந்த நிலையில், நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு அடுத்து வரும் மூன்று கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

கேள்வி 1

பணி ஓய்வுக்காலத்துக்கான தொகுப்பு நிதி, சொந்த வீடு, உங்கள் விருப்பப்படி கார், குழந்தைகளுக்கான உயர் கல்வி, கல்யாணத்துக்குத் தேவையான தொகை போன்ற உங்களின் அனைத்து அடிப்படை நிதி இலக்குகளும் நிறைவேற்றப் பட்டுவிட்டன. நீங்கள் இப்போது நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்கிறீர்கள், மேலும், உங்கள் விருப்பத்துக்கு அதிகமான வாழ்க்கை இலக்குகளுக்கு இன்னும் நிறைய பணம் உள்ளது. நீங்கள் என்ன வகையான புதிய இலக்குகளை அமைப்பீர்கள் என்பதை எழுதுங்கள்..?

1. __________

2. ___________

3. ___________

இந்தக் கேள்விக்குப் பெரும் பாலானோர், ‘குலதெய்வம் கோயில்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்வேன்’, ‘வசதி இல்லாத மாணவர்களுக்கு பாட நூல்கள் வாங்க உதவி செய்வேன்’ எனச் சமூகத்துக்குத் திருப்பி அளிக்கும் நிதி இலக்கு களை நிர்ணயம் செய்கிறார்கள்.

எந்த நிதி இலக்குக்கு முன்னுரிமை? பக்கா பிராக்டிக்கல் டிப்ஸ்..!

கேள்வி 2

நீங்கள் இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று உங்கள் மருத்துவர் கூறுகிறார். உங்கள் வாழ்க்கையின் மீதமுள்ள ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்வீர்கள்? சிறந்த வாழ்க்கையை வாழ முயற்சி செய்வீர்களா? உங்கள் பொறுப்பு கள் அனைத்தையும் நிறைவேற்று வீர்களா?

1. __________

2. ___________

3. ___________

இந்தக் கேள்விக்கு பெரும் பாலானோர், ‘பிள்ளைகளின் உயர் கல்விக்குத் தேவையான தொகையைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன்’, ‘கூடியவரையில் செலவுகளைக் குறைத்து, குடும்பத்துக்கு அதிக தொகுப்பு நிதியை விட்டுச் செல்வேன்’ எனப் பதில் அளித்திருக்கிறார்கள்.

கேள்வி 3

உங்கள் மருத்துவர், நீங்கள் இன்னும் 24 மணிநேரம் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் எனச் சொல்கிறார். இந்த நேரத்தில் உங்கள் இலக்குகள் என்னென்ன? எந்த இலக்குகள், ஆசைகளுக்காக நீங்கள் முன்பு செயல்படவில்லை என்று வருத்தப்படுவீர்கள்?

1. __________

2. ___________

3. ___________

இந்தக் கேள்விக்கு பெரும் பாலானோர், ‘‘நான் எங்கே எல்லாம் முதலீடு செய்திருக்கிறேன், யார் எல்லாம் பணம் தர வேண்டி யுள்ளது, என்னென்ன இன்ஷூ ரன்ஸ் பாலிசிகள் எடுத்திருக் கிறேன், வங்கிக் கணக்குகள் விவரம், சொத்து விவரங்கள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து, யார் யாருக்கு என்ன பொறுப்பு, சொத்தில் யார் யாருக்கு என்ன பங்கு என்பதைக் குறிப்பிட்டு உயில் எழுதி வைத்துவிடுவேன்’’ எனச் சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி 1-ன் நோக்கம், இந்த இலக்குகள் மிக முக்கிய மானவை அல்ல. ஆனால், நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையுடன் உங்களுக்கு என்ன தேவை என்பதை இது உறுதி செய்கிறது.மற்ற இரண்டு கேள்விகளின் நோக்கம், உங்கள் வாழ்க்கையின் சிக்கலான நிலையை உணரும் தருணத்தில் உங்கள் நிதி இலக்குகளை இயல்பாக வெளிப்படுத்துவதாகும்.

இந்த நிலையில், இந்த மூன்று கேள்விகளையும் நீங்கள் மறந்துவிடுங்கள். நீங்கள் ஓராண்டுக்குள் அடைய விரும்பும் 3 - 5 நிதி இலக்குகளைப் பட்டியலிடுங்கள். ஆனால், அதை அடைய குறுகிய காலமே தேவைப்பட வேண்டும். இதற்கான பணத்தை எப்படித் திரட்டுவீர்கள் எனத் திட்டம் போடுங்கள்.

உதாரணமாக, கடனை விரைந்து அடைக்க விரும்பினால், மாதத் தவணைத் தொகையை 10% அதிகரிக்கலாம். இதற்கான திட்டத்தை எப்படி உருவாக்குவது என்பதில் நீங்கள் கவனம் செலுத்தலாம்!

எந்த இலக்கையும் அதன் முன்னேற்றத்தை மதிப்பிடாமல் வேலை செய்வது, நங்கூரமிட்ட படகை ஓட்டுவது போன்ற பலன் இல்லா செயலாகும். எனவே, உங்களுக்குத் தேவை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை உங்கள் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, அடுத்த மூன்று மாதத்துக்கான திட்டத்தை அமைப்பதாகும். அந்த நோக்கத்தின் ஒரு பகுதி, உங்கள் நிதி இலக்குகளை அடிக்கடி நினைவூட்டுவதாகும்.

காலப்போக்கில், உங்கள் முன்னுரிமை நிதி இலக்குகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறுவதைக் காணலாம். எவ்வளவு சிறிதாக இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் உங்கள் முன்னேற்றத்தை மேம்படுத்த வேண்டும். ஒரு படி முன்னேறுவது ஒரே இடத்தில் தேங்கி இருப்பதைவிட சிறந்ததாகும்.

இப்படி முன்னுரிமையான குறுகியகால இலக்குகளை முடித்துவிட்டீர்கள் எனில், உங்களின் நடுத்தரக் கால, நீண்ட கால முன்னுரிமை இலக்குகளை நிறைவேற்ற திட்டம் தீட்டி, அவற்றை சரிவர செயல்படுத்தினால் போதும், அந்தத் திட்டங்கள் சுலபமாக நிறைவேறிவிடும்.

சரியான திட்டமிடலுடன் விடாமுயற்சியும் இருந்தால், யாராக இருந்தாலும் 100% முன்னேற்றம் காண முடியும். இது தனிப்பட்ட வாழ்க்கை முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, நிதி இலக்குகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் சரியாகப் பொருந்தும்.

உங்கள் நிதி இலக்குகள் அனைத்தும் நிறைவேற வேண்டு மெனில், முதலில் திட்டமிடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism