Published:Updated:

இறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா?

தங்கம் விலை
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் விலை

தங்கம்

இறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா?

தங்கம்

Published:Updated:
தங்கம் விலை
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் விலை

சென்ற வார இறுதியில் மத்திய அரசு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு வரி விதிப்பைக் கூட்டியது. இதன் விளைவாக, இந்திய சந்தையில் விலை அதிகரித்து வர்த்தகமானது. ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு ரூ.100 உயர்ந்து காணப்பட்டது. அன்றைய தினம் (ஜூன் 30-ம் தேதி) ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,300–க்கு வர்த்தக மானதைப் பார்க்க முடிந்தது. தங்க நகைப் பிரியர்களுக்கு இது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகவே இருந்தது.

அதே சமயம், சர்வதேச சந்தையில், கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், அதற்கு முந்திய தினத்தின் முடிவிலிருந்து 30 டாலர்கள் சரிந்து, 1,784 டாலர்களைத் தொட்டது. வர்த் தகத்தின் முடிவில், மீண்டும் அதே நிலைக்குத் (1,812 டாலர்கள்) திரும்பியது.

ஷியாம் சுந்தர், 
கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

வரி உயர்வுக்கு என்ன காரணம்?

இன்றைய நிலையில், உலகப் பொருளாதார அரங்கில் வர்த்தகச் சூழ்நிலையானது மிகவும் நிச்சயமற்றதாகக் காணப்படுகிறது. கோவிட்-19-க்குப் பிறகு ரஷ்யா- உக்ரைன் போர்ப் பதற்றம் விலையேற்றத்துக்குக் காரணமாக அமைந்தது.

அடுத்து, வளர்ந்த நாடுகளின் பணவீக்கம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதை அடுத்து, தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 1,800 டாலருக்குக் குறையாமல் (ஓரிரு வர்த்தக தினங்கள் தவிர) வர்த்தகத்தை மேற்கொண்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை, வேறு சில காரணிகளும் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்திய மக்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றனர். நம் நாடானது ஆண்டு ஒன்றுக்கு சுமார் 700 - 800 டன்கள் வரை இறக்குமதி செய்கிறது. சீனாவுக்கு, அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில், அதிக அளவில் தங்கத்தை நுகரும் நாடாக இருக்கிறது. இது இந்திய அரசாங்கத்துக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஏனென்றால், இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, அமெரிக்க டாலரைக் கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால், நமது அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறைகிறது. வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க டாலர் வலுவான நிலையில் காணப்படுவதை அடுத்து, இந்திய ரூபாயின் மதிப்பு இறக்கம் காண நேரிடுகிறது. இதனால், அதிக டாலரைக் கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. இதைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

அதாவது, நுகர்வோரின் தேவையைக் குறைக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நமது இறக்குமதிச் செலவினங்களைக் குறைத்தால் மட்டுமே, இந்திய ரூபாயின் வீழ்ச்சியை ஓரளவுக்குத் தடுக்க முடியும் என்பதால், இந்த வரி விதிப்பை அரசாங்கம் அதிகரித்துள்ளது.

மேலும், தங்க முதலீட்டின் மூலம் நீங்கள் எந்த வருமானத் தையும் சம்பாதிக்க முடியாது (Dead investment) என்பதால், பொருளாதாரச் சுழற்சியில் பங்கெடுக்காமல் முதலீடுகள் முடக்கமடைகின்றன என்கிற பார்வை இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. முதலீட்டு நோக்கத்தில் முதலீடு செய்பவர் களை ஊக்கப்படுத்தாமல், மறைமுகமாகத் தவிர்க்க அரசாங்கம் மேற்கொள்கிற நடவடிக்கை இது என்றுகூட இந்த இறக்குமதி வரி உயர்வைப் பற்றிச் சொல்கிறார்கள்.

இறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா?

அதிகரிக்கும் தங்க இறக்குமதி...

இந்தியாவின் தங்க இறக்கு மதி 2021 மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2022 மே மாதத்தில் 9 மடங்கு ( மதிப்பின் அடிப்படையில்) அதிகரித்து உள்ளது. அதாவது, 7.7 பில்லி யன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

2021-ம் ஆண்டு இந்தியாவின் தங்க இறக்குமதி 1050 மெட்ரிக் டன்களாகக் காணப்பட்டது. இவ்வாறு, இறக்குமதி அதிகரிப் பதால் ஏற்றுமதிக்கும் இறக்கு மதிக்குமான இடைவெளி அதிகரிக்கிறது.

நம் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையானது, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் கணிசமாக உயர்ந் துள்ளது. 2022 ஏப்ரல் மாதத்தில், 21.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் காணப்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை, மே மாதத்தில் 44.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்ததை அடுத்து, அரசாங்கம் துரிதமாக இறக்கு மதி வரி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.

மேலும், கடந்த வெள்ளி யன்று கரன்சி வர்த்தகத்தில், இந்திய ரூபாயின் மதிப்பானது, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.79-க்கும் கீழாக இறக்கம் கண்டது. இந்தச் சரிவைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் செயல்பட்டுள்ளது.

இதே நிலை நீடிக்குமா?

பொதுவாக, இந்தியாவில் தங்க முதலீட்டுக்கு நிபுணர்களின் ஆலோசனைகள் இல்லாமலேயே முதலீடு செய்யும் பழக்கம் இருக்கிறது. முதலீட்டுக்கான வழிகளும் அதிகம் இருக் கின்றன. இதில், ஆபரணத் தங்கத்தை விரும் பாதவர்கள் கோல்டு இ.டி.எஃப் மீது கணிசமான முதலீடுகளை மாற்று முதலீடாகப் பார்க் கிறார்கள். சென்ற ஏப்ரல் மாதத்தில் மட்டும் 38 மெட்ரிக் டன்கள் என்ற அளவுக்கு கோல்டு இ.டி.எஃப் மீது முதலீடுகள் செய்யப் பட்டுள்ளன. அதே போல, மத்திய அரசாங்கம் வெளியிடும் தங்கப் பத்திரங்களை வாங்குவதும் அதிகரித்து வருகிறது.

இறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா?

தங்கம் விலை அதிகரிக்குமா?

தற்போதைய வரி விதிப்பால், தங்கம் விலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம், விலை அதிகரிப்பதால், தங்கத் துக்கான தேவையும், சில மாதங்களுக்கு சற்று குறையவே வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கலாம். ஆனால், வருகிற மாதங்கள் அனைத்தும் பண்டிகை நிறைந்த காலமாகும். தவிர, இந்தக் காலத்தில் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடக்கும் என்பதால், தங்கத் துக்கான வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். பருவ மழை சிறப்பாக இருக்கும் பட்சத்தில், தங்கத்துக்கான இந்திய சராசரி நுகர்வில் மாற்றம் இருக்க வாய்ப்புக்கள் குறைவுதான்.

சர்வதேச நிகழ்வுகளில், குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் வட்டி விகிதங்களைத் தொடர்ந்து உயர்த்தக்கூடும் என்பதால், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில், தேக்கநிலை ஏற்படலாம் என்ற கருத்துகள் அடிபடுகின்றன. அத்தகைய நிலை ஏற்படு மாயின், தங்கம் புதிய உச்சங்களைத் தொடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை வருகிற காலங்களில் வெளியிடப்படும் அமெரிக்கப் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்த வாய்ப்பு உண்டு!