Published:Updated:

நகைக்கடன் vs நகை விற்பனை; இரண்டில் எது நமக்கு நல்லது தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 18

கொரோனா காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்டதில் நமக்கு பெரிதும் கை கொடுத்தது, அவ்வப்போது ஆசையாக வாங்கி வைத்த கால் சவரன் அரை சவரன் நகைகள்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

40,000 வருடங்களுக்கு முந்தைய குகை ஓவியங்களில் தங்கம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று மனிதர்களின் மூவாசைகளில் ஒன்றான தங்கத்தை அழகுக்காக உபயோகித்தோம்; ஆபரணமாக அணிந்தோம்; பண்டமாற்றாக, கரன்சியாக பலப்பல உருவங்கள் எடுத்து மனிதனுடன் பயணித்த தங்கம் இன்று ஒரு முதலீட்டு முறையாக - ஒருவரின் மொத்த முதலீட்டில் 5% முதல் 10% வரை இருக்க வேண்டிய பொருளாகப் பார்க்கப்படுகிறது.

இவ்வுலகில் உள்ள தங்கத்தில் 20 சதவிகிதம் (சுமார் 25,000 டன்) இந்தியாவின் வீடுகளிலும் கோயில்களிலும் தூங்குகிறது. இது அமெரிக்காவில் உள்ளதைப்போல் இரண்டு மடங்கு. ஆனாலும், நம் தங்க தாகம் தீராததால் வருடா வருடம் 600 டன் முதல் 1,000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்கிறோம். காரணம் - தங்கம் என்பது பெண் குழந்தைகளுக்கு சீதனமாகக் கொடுக்க வேண்டிய பொருள் என்னும் நமது எண்ணம்.

தங்கம்
தங்கம்
காம்பௌண்ட் எஃபெக்ட்: ஐன்ஸ்டீன் இதை ஏன் 8-வது அதிசயம்னு சொன்னார்? - பணம் பண்ணலாம் வாங்க - 14

அது இன்று மாறி, கல்வியும் வேலையுமே அவர்கள் உயர்வுக்கு வழி என்ற விழிப்புணர்வு வந்தபின் தங்கத்தின் மீதான நம் மோகம் குறைந்துள்ளது. 2011-ம் வருடத்துக்குப் பிறகு, நேர்ந்த பங்குச் சந்தையின் ஏற்றமும் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைய காரணமாகிவிட்டது. ஆனால் போர், பயங்கரவாதம் போன்ற நேரங்களில் சந்தை விழும்; தங்கம் எழும். இப்படி பங்குச் சந்தை இறங்கும் போதெல்லாம் தங்கத்தின் விலை ஏறுவதால் அது ஒரு நல்ல மாற்று முதலீடாக உருவெடுத்திருக்கிறது.

இந்தியர்கள் பொதுவாக தங்கத்தை விற்பதைவிட அதன் மீது கடன் வாங்குவதையே பெரிதும் விரும்புகின்றனர். கொரோனா காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்டதில் நமக்கு பெரிதும் கை கொடுத்தது, அவ்வப்போது ஆசையாக வாங்கி வைத்த கால் சவரன் அரை சவரன் நகைகள்தான். ஆனால், பெரும்பாலானவர்கள் தங்கள் தங்கத்தை விற்கவில்லை; தங்களிடம் இருக்கும் தங்கத்தின் மீது கடன் பெறவே முற்பட்டனர்.

வேறு எல்லாத் தொழில்களும் பாதிக்கப்பட்டாலும், தங்க அடமானக் கடன் தரும் தொழில் மட்டும் ஜரூராக நடைபெற்றது; நடைபெற்றும் வருகிறது.

தங்கம்...
தங்கம்...

இது சாதாரண மக்களின் சேமிப்பை எந்த அளவு பாதிக்கிறது, தேவை ஏற்படும்போது தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது சரியா அல்லது விற்பதுதான் சரியா என்பது பற்றி பலவிதக் கருத்துகள் நிலவுகின்றன.

மக்கள் தங்கத்தை அடகு வைப்பதற்கு, என்றாவது ஒரு நாள் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கைதான் காரணம். இந்த நம்பிக்கைக்கு வலுவான அடித்தளமாக போதுமான வருமானம் இருப்பவர்கள் நகையை அடகு வைக்கலாம். இப்போதைக்கு தினசரி வாழ்வை நடத்துவதற்கே வருமானம் போதாமல் இருப்பவர்கள் இன்னும் கடன் சுமையை ஏற்றிக்கொள்வதைத் தவிர்த்து, தங்கத்தை விற்றுவிட்டு ஒரு நல்ல நேரமும் வருமானமும் வரும்வரை காத்திருந்து மீண்டும் வாங்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிசம்பர் 1, 2016-ல் சிபிடிடி (CBDT) அறிவிப்பின்படி ஒரு இந்தியர் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், அதற்கு முறையான கணக்குகள் இருக்க வேண்டும். நம்மில் பலரிடமும் பாரம்பர்யமாக வந்த நகைகள் இருக்கும்; ஆனால், அதற்கு கணக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால் கீழ்க்கண்ட அளவு வரையிலான தங்கத்துக்கு விலக்கு உள்ளது:

  • திருமணமான பெண் 500 கிராம் வரையும் (சுமார் 62 சவரன்)

  • திருமணமாகாத பெண் 250 கிராம் வரையும் (சுமார் 31 சவரன்)

  • ஆண் 100 கிராம் வரையும் (சுமார் 12 சவரன்)

தங்கத்துக்கு கணக்குக் காட்டத் தேவையில்லை.

இதற்கு மேல் தங்கம் இருக்கும் பட்சத்தில், அதை வாங்கிய ரசீது, அந்த வருடத்தின் வருமான வரித் தாக்கல் நகல் போன்றவற்றைக் காட்ட வேண்டும். பாரம்பர்யமாக வந்த தங்கம் என்றால் உயில், செட்டில்மென்ட் பத்திரம், தானப் பத்திரம் போன்ற சான்றுகளைக் காட்ட வேண்டும்.

Gold (Representational Image)
Gold (Representational Image)
Photo by vaibhav nagare on Unsplash
Gold Loan: அடகுக்கடைகளில் நகைக்கடன் பெறப்போகிறீர்களா? இவற்றை நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்!

ஆகவே, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் முதலில் தங்களிடம் ஏற்கெனவே இருக்கும் தங்கத்தின் அளவை கணக்கெடுத்து பின் செயல்படுவது நல்லது. தங்கம் வாங்கிய ரசீதுகளை பத்திரப்படுத்தி வைப்பது அவசியம். நாம் வாங்கும் தங்கத்தின் அளவு நம் வருமானத்துக்கு உட்பட்டதாக இருப்பதும் மிக அவசியம்.

தங்கத்தை ஆபரணமாக மாற்றும்போது செய்கூலி, சேதாரம் என்று 20 சதவிகித செலவு; வாங்கிய பின்னும் அதைப் பத்திரமாகப் பாதுகாக்க லாக்கர் செலவு - இவை தவிர, அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியாத நிலை - போன்ற காரணங்களால் இன்று முதலீட்டாளர்கள், தங்க நகைகள் வாங்குவதைவிட பேப்பர் கோல்ட் வாங்குவதை விரும்புகிறார்கள். இது பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு