Published:Updated:

எல்லோரும் பொய் சொல்கிறார்கள்... ஆனால், கூகுளிடம் உண்மையாக இருக்கிறார்கள்..!

உளவியல் பார்வை
பிரீமியம் ஸ்டோரி
உளவியல் பார்வை

உளவியல் பார்வை

எல்லோரும் பொய் சொல்கிறார்கள்... ஆனால், கூகுளிடம் உண்மையாக இருக்கிறார்கள்..!

உளவியல் பார்வை

Published:Updated:
உளவியல் பார்வை
பிரீமியம் ஸ்டோரி
உளவியல் பார்வை

‘‘இந்த உலகத்தில் எல்லோரும் எல்லோரிடமும் பொய் சொல்கிறார்கள்...” இப்படி ஒருவர் சொன்னால், கொஞ்சம் பகீரென்றுதானே இருக்கிறது. ``நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. புள்ளிவிவரங்களுடன் சொல்கிறேன்’’ என்கிற பீடிகையுடன் நம்முடன் பேச ஆரம்பிக்கிறார் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரையாளரும், தி வார்ட் டன் ஸ்கூலின் வருகைதரும் பேராசிரியரு மான சேத் ஸ்டீஃபென்ஸ் - டேவிடோவிட்ஸ் (Seth Stephens-Davidowitz).

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

இவர், சில ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் `டேட்டா சயின்டிஸ்ட்’ ஆக வேலை பார்த்தவர்; இவர் எழுதிய `எவ்ரிபடி லைஸ் - வாட் தி இன்டர்நெட் கேன் டெல் அஸ் அபெளட் ஹு வீ ரியலி ஆர்’ (Everybody Lies: What The Internet Can Tell Us About Who We Really Are) என்ற புத்தகம் இப்போது புத்தகவாசிகளிடம் படுபிரபலம். இந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டுள்ள சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போம்.

எல்லோரும் பொய் சொல்கிறார்கள்...

‘‘மனிதர்கள் தங்களின் முக்கியமான பல விஷயங்கள் குறித்து உண்மையைச் சொல்வதற்குப் பதில், பொய்யைத்தான் சொல்கிறார்கள். உதாரணமாக, எத்தனை `பெக்’ மது குடித்தேன், எத்தனை முறை ஜிம்முக்குச் செல்கிறேன், புது ஷூ வாங்க எவ்வளவு செலவழித்தேன் எனச் சொல்வது , ஒரு புத்தகத்தைப் படிக்கிறோமோ இல்லையோ ஆனால், அது ஒரு சலிப்பு தட்டக்கூடிய புத்தகம் எனச் சொல்வது (இது திரைப்படத்துக்கும் பொருந்தும்)... இப்படி மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் நண்பர்களிடம், மேலதிகாரிகளிடம், குழந்தைகளிடம், பெற்றோர்களிடம், மருத்துவர் களிடம், மனைவியிடம் என அனைவரிடமும் பொய் சொல்வது மட்டும் இல்லாமல் நமக்கு நாமேயும் பொய் சொல்லிக்கொள்கிறோம்.

மக்களின் கருத்துகளை அறிய நடத்தும் ஆய்வுகளில் பெரும்பாலானவர்கள் தங்களைக் கீழாகவோ, ஒன்றும் தெரியாதவர் களாகவோ காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. இது மனித இயல்பு. ஆய்வு முடிவுகளில் தனிப்பட்ட நபர்களின் பெயர்கள் குறிப்பிடப் படாவிட்டாலும்கூட மக்களின் மனப்போக்கு இப்படித்தான் இருக்கிறது.

1950-ம் ஆண்டு அமெரிக்காவில் டென்வர் நகர மக்களின் மனப்போக்கு குறித்து ஆய்வாளர்கள் அரசுத் தரப்பிலிருந்து தரவுகளைச் சேகரித்தனர். இது எத்தனை சதவிகித மக்கள் வாக்கு அளித்தனர், எவ்வளவு பேர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள், நூலக அட்டை எத்தனை பேரிடம் இருக்கிறது என்பது போன்ற தகவல்களைக் கொண்ட தரவுகள் ஆகும். இந்தத் தரவுகளைச் சேகரித்த பின், நேரடியாக மக்களைச் சந்திந்து இதே தகவல்களைச் சேகரிக்கும்போது அரசுத் தரப்பிலிருந்து பெற்ற தகவல்களுக்கும் நேரடியாக கள ஆய்வு செய்து சேகரித்தத் தகவல்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருந்தது. கடந்த 70 ஆண்டுகளில் இந்தப் போக்கில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆய்வுகளின் முடிவுகள் இப்படியிருக்கும்பட்சத்தில் ஒரு விஷயத்தின் மீது எப்படி முடிவு எடுக்க முடியும் என்பது மிகப் பெரிய கேள்வி.

எல்லோரும் பொய் சொல்கிறார்கள்... ஆனால், கூகுளிடம் உண்மையாக இருக்கிறார்கள்..!

பொருளாதாரப் புத்தகங்களைப் பலரும் படிப்பதில்லை...

இந்நூலின் இறுதிப் பக்கங்களில், இந்த நூலை வாங்குபவர் களில் எத்தனை பேர் முழுமையாக வாசித்து முடிப்பார்கள் என்பதை மற்ற பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நூல்களை வாசித்து முடித்தவர்களின் தரவு அடிப்படையில் நிர்ணயித்திருக்கிறார். அதன்படி, பலர் முதல் 50 பக்கங்களை வாசித்துவிட்டு சில கருத்துகளை மட்டும் மனதில் பதிய வைத்துக்கொண்டு அன்றாட வாழ்க்கையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபல பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி எழுதிய `Capital in the 21st Century’ என்கிற பிரபலமான புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்தவர்கள் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான் என்கிறார். அதேசமயம், டோனா டார்ட் எழுதிய `The Goldfinch’ஐ வாசித்து முடித்தவர்கள் சுமார் 90%. இது குறித்து இவரது முடிவு என்னவெனில், பெரும்பாலான வாசகர்கள் பொருளாதார நிபுணர் களின் நூல்களை முழுமையாக வாசித்து முடிப்பதில்லை என்பதுதான்.

இணையத்திடம் நேர்மை...

மனிதர்களாகிய நாம் என்ன நினைக்கிறோமோ, அதைத்தான் செய்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ள முடியுமா? முடியும் என்கிறார் நூலாசிரியர். சில ஆன்லைன் ஆதாரங்கள் (sources) மக்கள் வேறு எங்கும் அல்லது யாரிடமும் சொல்லத் தயங்குகிற அல்லது ஒப்புக்கொள்ளாத விஷயங்களை ஒப்புக்கொள்ள வைக்கின்றன. கூகுள் தேடுபொறியை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தட்டச்சு செய்யும்பட்சத்தில் அது குறித்த தகவல்களை இந்தத் தேடுபொறி சில விநாடிகளில் கொடுத்து விடும். தகவல் தேடுபவர் தனிமையில் இதைச் செய்வதால் அவர் என்ன செய்கிறார் என யாரும் பார்ப்பதோ, யாருக்கு தெரிவதோ இல்லை. இந்த மாதிரியான சூழ்நிலையில், ``மனிதர்கள் இணையத்திடம் நேர்மையாகவும் உண்மை யாகவும் நடந்துகொள்கிறார் கள்” என்கிறார் புத்தக ஆசிரியர்.

எல்லோரும் பொய் சொல்கிறார்கள்... ஆனால், கூகுளிடம் உண்மையாக இருக்கிறார்கள்..!

இந்தியச் சூழலுக்கும்...

இப்படி பல புள்ளிவிவரங் களுடன் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் சொல்லும் ஒவ்வொரு விஷயமும், நம் இந்தியச் சூழலுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும். தரவுகளின் மூலம் பிரச்னை களுக்கு வழி காண வேண்டு மெனில், முதலில் அவை குறித்து தரமான, செறிவான தகவல்களைத் திரட்டுவது முக்கியம். இதற்கு ஓர் உதாரணம், பெருந்தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை. இந்திய அரசு கூறும் தகவலுக்கும் உலகச் சுகாதார அமைப்பு கூறுவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் சுமார் 10 மடங்காகும்.

தரவுகள் சரியாக இல்லாத பட்சத்தில் தீர்க்கமான முடிவு களை எடுக்க முடியாது, அப்படியே எடுத்தாலும் அவை பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையாது என்பதை நாம் என்றைக்கு சரியாகப் புரிந்து கொள்கிறோமோ, அன்றைக்குத் தான் நம்மால் சரியான முடிவு களை எடுக்க முடியும். தரவு களின் மீது ஈடுபாடு கொண்ட வர்களுக்கும், ஆய்வாளர் களுக்கும், சமூகம் சார்ந்த, நிறுவனம் சார்ந்த முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்!