நடப்பு நிதியாண்டின் 3-ம் காலாண்டு முடிவில் மத்திய அரசின் கடன்கள் ₹ 128.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசின் மொத்தக் கடன்கள், ₹ 125.71 லட்சம் கோடியிலிருந்து நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 2.15 சதவிகிதம் அதிகரித்து ₹ 128.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
2021 செப்டம்பர் மாத இறுதியில் 91.48 சதவிகிதத்திலிருந்து 2021 டிசம்பர் இறுதியிலுள்ள மொத்த நிலுவைக் கடன்களில் 91.60 சதவிகிதம் பொதுக் கடனாக (Public Debt) உள்ளது.
5 ஆண்டுகளுக்கும் குறைவான முதிர்வு காலத்தைக் கொண்ட பத்திரங்கள் ஏறக்குறைய 29.94 சதவிகிதம் உள்ளதென பொது கடன் மேலாண்மை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு 2021-22 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 2.88 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வெளியிட்டது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இந்த மதிப்பு 2.83 லட்சம் கோடியாக இருந்தது. இந்தக் கடன்களில் ரிசர்வ் வங்கியின் பங்கு 2021 செப்டம்பர் இறுதியில் 16.98 சதவிகிதத்தில் இருந்து, 2021 டிசம்பர் இறுதியில் 16.92 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.