Published:Updated:

ஆருத்ரா நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள் பணத்தை திரும்ப வாங்க வழி என்ன?

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

ஆருத்ரா நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தவர்கள் பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான புகார்களை முறையிடுவதற்காக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் சிங்காரவேலர் மாளிகையின் 4ம் தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் செயல்படுகிறது.

ஆருத்ரா நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள் பணத்தை திரும்ப வாங்க வழி என்ன?

ஆருத்ரா நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தவர்கள் பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான புகார்களை முறையிடுவதற்காக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் சிங்காரவேலர் மாளிகையின் 4ம் தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் செயல்படுகிறது.

Published:Updated:
ஆருத்ரா கோல்டு நிறுவனம்

ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 36,000 ரூபாய் வரை வட்டி தருவதாக, ஆருத்ரா கோல்டு நிறுவனம் கவர்ச்சிகர அறிவிப்பு வெளியிட்டு மக்களை ஈர்த்தது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி, மக்கள் டெபாசிட் செய்ய ஆரம்பித்தனர்.

ஆனால் ஆரூத்ரா நிறுவனத்தின் இந்த திட்டம் போலியானது என்று எழுந்த சந்தேகத்தை அடுத்து, இந்நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். சோதனையை அடுத்து ஆருத்ரா நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆருத்ரா நிறுவனம்
ஆருத்ரா நிறுவனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து, ஆருத்ரா நிறுவனத்தில் டெபாசிட் செய்தவர்கள் பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான புகார்களை முறையிடுவதற்காக, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் சிங்காரவேலர் மாளிகை 4ம் தளத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் செயல்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரும் ஜூலை 18, 19 தேதிகளில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், 20ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், 21ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், 26ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், காலை 10 மணி முதல், மாலை 5.45 மணி வரை சென்னை கண்ணப்பர் திடல், ராஜா முத்தையா சாலை, வார்டு எண்.58-ல் உள்ள மாநகராட்சி சமுதாயக்கூடத்தில் தங்களுடைய மனுக்களை அளிக்கலாம். அப்போது, ஆருத்ரா நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் வர வேண்டும்.

Money
Money

பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் குறிப்பிட்ட தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த தேதியில் வந்து தங்களுடைய மனுக்களை வழங்கி ஆரூத்ராவில் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை மாவட்ட வருவாய் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம்.

இதுபோன்ற மோசடி போலி திட்டங்களில் பணத்தைப் போட்டுவிட்டு பின்னர் அதைத் திரும்ப வாங்க போராடும் மக்கள் இனியேனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.