கோடைக்காலம் வந்துவிட்டாலே மின்சார தேவை அதிகரிக்கும். காரணம், வெயில் காலத்தில் ஃபேன், ஏசி, ஃப்ரிட்ஜ் இவற்றின் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்பதால்தான்.
இத்தகைய நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மின்சார உற்பத்தி இருக்காது என்று மின் உற்பத்தி நிறுவனங்கள் கூறுகின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கும் காரணங்கள், நிலக்கரி இருப்பு பற்றாக்குறை, மின் விநியோக நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலுவைத் தொகை என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனாலும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுகளுக்கு உள்ளது. மின் வெட்டு அதிகரித்தால் அரசுகளின் மீதான மக்களின் பார்வை மோசமாகிவிடும். எனவே என்ன நெருக்கடி இருந்தாலும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு மின் உற்பத்தி நிலையங்களுக்குச் சென்று சேர வேண்டிய நிலக்கரியை விரைவாக அனுப்ப ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இதற்காகப் பயணிகள் ரயில் சேவை சிலவற்றை ரத்து செய்துள்ளது. நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்கள் விரைவாகச் சென்று சேர்வதற்காகப் பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்துள்ளது. ``இது தற்காலிகமான நடவடிக்கைதான். ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில் சேவை விரைவில் மீண்டும் வழக்கம் போல செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்" என்று இந்திய ரயில்வே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கவ்ரவ் கிருஷ்ண பன்சால் கூறியுள்ளார்.