Published:Updated:

IT returns: கால அவகாசம் நீட்டிப்பு, புது இணையதளம்; வருமான வரித்தாக்கலில் நடக்கும் மாற்றங்கள் என்ன?

tax
tax

புதிய இணையதளத்துக்கு மாறும் பணிகளுக்காக தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை மூடப்படும்.

வழக்கமான வருமான வரி தாக்கல் செய்வதற்கு, தனிநபர்களுக்கு ஜூலை 31-ம் தேதியும், நிறுவனங்களுக்கு அக்டோபர் 31-ம் தேதியும் கடைசி நாளாக இருக்கும்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, மிக வேகமாக பரவிவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு தொழில்துறையினர்கள் மற்றும் சம்பளதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

 Income tax
Income tax

அதன்படி, தனிநபர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்தற்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதி வரையும், நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம்-16 அளிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிதி நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனை அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரையும், வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 31-ம் தேதி வரையும், திருத்தப்பட்ட வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

income tax department
income tax department

தற்போது மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ள நிலையில், இதற்கு பதிலாக www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித்துறை தொடங்குகிறது. ஜூன் 7-ம் தேதி இந்த இணைதளம் பயன்பாட்டுக்கு வருகிறது. இது, பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. புதிய இணையதளத்துக்கு மாறும் பணிகளுக்காக தற்போது உள்ள இணையதளம் ஜூன் 1-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை மூடப்படும். அந்த நாட்களில் அந்த இணையதளத்தை வரி செலுத்துபவர்களோ, வருமான வரித்துறை ஊழியர்களோ பயன்படுத்த முடியாது.

அடுத்த கட்டுரைக்கு