Published:Updated:

கோதுமை, மைதா, ரவை விலை குறையுமா? ஆகஸ்ட் 14 முதல் ஏற்றுமதி செய்ய அரசு கட்டுப்பாடு

சித்தரிப்பு படம்

உள்நாட்டு தேவை வெகுவாகப் பாதித்த நிலையில் கோதுமை, மைதா, ரவை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நம்நாடு இப்போது இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.

கோதுமை, மைதா, ரவை விலை குறையுமா? ஆகஸ்ட் 14 முதல் ஏற்றுமதி செய்ய அரசு கட்டுப்பாடு

உள்நாட்டு தேவை வெகுவாகப் பாதித்த நிலையில் கோதுமை, மைதா, ரவை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நம்நாடு இப்போது இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.

Published:Updated:
சித்தரிப்பு படம்

இந்திய உணவு முறையில் பிரதான இடத்தை அரிசியும் கோதுமையும் கொண்டுள்ளன. உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு அரசுக்கு உண்டு. ஆனால் பல நேரங்களில் பல காரணங்களால் உணவுப் பற்றாக்குறை, உணவுப் பொருட்கள் விலை உயர்வு போன்ற நிகழ்வுகள் நாட்டு மக்களைத் திண்டாட செய்கின்றன. அந்த சமயங்கள் அரசு தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அந்த வகையில் தற்போது கோதுமை, மைதா, ரவை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கடந்த சில மாதங்களாக தட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இவ்வாறு தட்டுப்பாடு நிலவுவதாலும் இவற்றின் விலை உயர்ந்து வருவதாலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கோதுமை
கோதுமை

உள்நாட்டு உணவுப் பொருட்கள் தேவையை உறுதி செய்வதற்காக மத்திய அரசு கோதுமை, மைதா, ரவை உள்ளிட்டவற்றுக்கு ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் 14 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி ஏற்றுமதி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டும். முன்பே ஏற்றுமதி செய்ய தயாராக உள்ள ஆர்டர்களை, ஆகஸ்ட் 14க்குள் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்து நட்சத்திர ஏற்றுமதியாளரும், ஏற்றுமதி தொழில் சார்ந்த பயிற்சி வழங்குநருமான கே.எஸ்.கமாலுதினுடன் பேசினோம்.

"உலக அளவில் பல நாடுகள் கோதுமைக்காக உக்ரைனை நம்பியிருக்கின்றன. இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரினால் கோதுமை மற்றும் அதன் பிற உணவு பொருட்கள் வர்த்தகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. எனவே அந்த நாடுகள் கோதுமை தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள இந்தியாவை நோக்கி வரத் தொடங்கின. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்து அதிகமாக ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்கள்.

ஏற்றுமதி
ஏற்றுமதி

அதேசமயம் இங்கு உற்பத்தி குறைவாக இருந்ததால் உள்நாட்டுக்குத் தேவையான கோதுமை, மைதாவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஏற்கெனவே பணவீக்கம், விலை வாசி உயர்வு பிரச்னையாக உள்ள நிலையில் சீரற்ற மழைப்பொழிவின் காரணமாக விவசாயிகள் உற்பத்தி செய்வதும் பாதிக்கப்பட்டது.

உள்நாட்டு தேவை வெகுவாகப் பாதித்த நிலையில் கோதுமை, மைதா, ரவை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நம் நாடு இப்போது இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. இதன் காரணமாகவே அரசு இந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. இது ஏற்றுமதியாளர்களுக்குச் சற்று பிசினஸ் சார்ந்து எதிரானதாக இருந்தாலும் உள்நாட்டு தேவைக்கு மீறிதான் ஏற்றுமதி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நியாய விலைக்கடை
நியாய விலைக்கடை
விகடன்

அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை அரசு நடத்தி வருகிறது. இந்த பொருட்களுக்கு தற்போது உள்ள இறக்குமதி வரியை மேலும் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. அரசு திட்டமிட்டபடி சுமுகமாக எல்லாம் நடந்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது. கோதுமை, மைதா, ரவை உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கலாம்" என்றார்.

மக்கள் அதிகமாக உண்ணக்கூடிய கோதுமை, மைதா, ரவை உள்ளிட்ட பொருட்கள் பற்றாக்குறை இல்லாமல் கிடைக்க செய்வதும், விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைப்பதும் மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.