Published:Updated:

ஐ.டி.பி.ஐ வங்கி தனியார்மயம்; செபியிடம் அரசு வைக்கும் கோரிக்கை என்ன?

ஐடிபிஐ வங்கி

எல்.ஐ.சி நிறுவனத்தின் வசம் 49.24 சதவிகித பங்கும், மத்திய அரசுக்கு 45.48 சதவிகித பங்கும் உள்ளது. இதன்படி அதிக சதவிகிதத்தில் பங்குகளை வைத்துள்ள எல்.ஐ.சி நிறுவனம் ஐடிபிஐ வங்கியின் புரொமோட்டராகவும், அதற்கடுத்த முன்னணி பங்குதாரராக இருக்கும் மத்திய அரசு துணை புரொமோட்டராகவும் உள்ளன.

ஐ.டி.பி.ஐ வங்கி தனியார்மயம்; செபியிடம் அரசு வைக்கும் கோரிக்கை என்ன?

எல்.ஐ.சி நிறுவனத்தின் வசம் 49.24 சதவிகித பங்கும், மத்திய அரசுக்கு 45.48 சதவிகித பங்கும் உள்ளது. இதன்படி அதிக சதவிகிதத்தில் பங்குகளை வைத்துள்ள எல்.ஐ.சி நிறுவனம் ஐடிபிஐ வங்கியின் புரொமோட்டராகவும், அதற்கடுத்த முன்னணி பங்குதாரராக இருக்கும் மத்திய அரசு துணை புரொமோட்டராகவும் உள்ளன.

Published:Updated:
ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசும், எல்.ஐ.சி நிறுவனமும் வைத்துள்ள பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் செபியின் விதிமுறைகள் சிக்கலாக இருப்பதால் ஐடிபிஐ வங்கி விஷயத்தில் தளர்வுகள் செய்ய செபியிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த 2021-ல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து 2021 மே மாதம் ஐடிபிஐ வங்கி பங்குகளை விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஐடிபிஐ
ஐடிபிஐ

தற்போது ஐடிபிஐ வங்கியில் எல்.ஐ.சி நிறுவனமும், மத்திய அரசும் முன்னணி புரொமோட்டர்களாக உள்ளன. எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தின் வசம் 49.24 சதவிகித பங்கும், மத்திய அரசுக்கு 45.48 சதவிகித பங்கும் உள்ளது. 5.28 சதவிகித பங்குகள் மட்டுமே பொது பங்குதாரர்களிடம் உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன்படி அதிக சதவிகிதத்தில் பங்குகளை வைத்துள்ள எல்.ஐ.சி நிறுவனம் ஐடிபிஐ வங்கியின் புரொமோட்டராகவும், அதற்கடுத்த முன்னணி பங்குதாரராக இருக்கும் மத்திய அரசு துணை புரொமோட்டராகவும் உள்ளன.

தற்போது எல்.ஐ.சி மற்றும் மத்திய அரசு இரண்டும் தங்களிடம் உள்ள மொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஒப்புதல்களை ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியவற்றிடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி
LIC

இந்நிலையில் விதிமுறைகளின்படி ஒரு நிறுவனம் பொது விற்பனைக்கு வந்த பின் மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்தது 25 சதவிகித பங்குகளாவது பொது பங்குதாரர்களிடம் இருக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்கம் செய்யப்பட்ட பின் மூன்று ஆண்டுகளுக்கு இந்த விதிமுறைக்கு இணங்க வேண்டியிருக்கும்.

ஐடிபிஐ பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதில் இந்த விதிமுறை சிக்கலாக மாறியுள்ளது. எனவே, ஐடிபிஐ வங்கிக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செபியிடம் அரசு கோரிக்கை வைத்துள்ளது. இவ்வாறு தளர்வு செய்யப்பட்டால் ஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்குவதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பங்கு விற்பனை
பங்கு விற்பனை

இந்த மாத இறுதியில் ஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்கு வதற்கான விருப்ப விண்ணப்பங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட உள்ளன. அதற்குள் அரசின் கோரிக்கைக்கு செபி என்ன பதில் அளிக்கும் என்பதைப் பொறுத்து ஐடிபிஐ வங்கி பங்கு விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு 2010 முதல் 2021 வரையிலான காலத்தில் ரூ.27,000 கோடி முதலீடு செய்துள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் ரூ.25,000 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.