Election bannerElection banner
Published:Updated:

எல்லாம் தேர்தலுக்காகவா... வட்டிக் குறைப்பு அறிவிப்பை திடீரென வாபஸ் வாங்கிய மத்திய அரசு!

Finance Minister Nirmala Sitharaman
Finance Minister Nirmala Sitharaman ( Photo: AP )

இந்த அறிவிப்பு நேற்று வெளியானதும், பொதுமக்களிடமிருந்தும் எதிர்க்கட்சியினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இந்த முடிவை திரும்பப் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை அரசு குறைத்திருப்பதால் தற்சமயம் பெரும்பாலான சேமிப்பு திட்டங்களுக்கு குறைவான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் சுற்றறிக்கை நேற்று இரவு வழங்கிய நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அந்த முடிவை நிதியமைச்சகம் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று காலாண்டுகளாக சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்த அரசு, நேற்று திடீரென சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2021-2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் 50 -110 அடிப்படை புள்ளிகள் (100 அடிப்படை புள்ளிகள் / பிபிஎஸ் = 1%) இடையே பெருமளவில் குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

PPF
PPF

அதில் மிக முக்கியமாக பிபிஎஃப் சேமிப்பின் வட்டி விகிதம் 7% க்கும் குறைவாக இருந்தது. இது 1974-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, அதாவது கடந்த 46 ஆண்டுகளின் வட்டி விகிதத்தை விட மிகவும் குறைக்கப்பட்ட நிலையில், அதற்கு பொதுமக்கள் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏப்ரல் 1, 2021 முதல், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) ஆகியவற்றுக்கு முந்தைய 7.1 சதவிகிதத்திலிருந்து 6.4 சதவிகிதமாகவும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) - 6.8 சதவிகிதத்திலிருந்து 5.9 சதவிகிதமாகவும், சுகன்யா சமிர்தி யோஜனா (எஸ்.எஸ்.ஒய்) முந்தைய 7.6 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாகவும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

10 ஆண்டு அரசுப் பத்திரங்களின் (ஜி-செக்) யீல்டு வீழ்ச்சியடைந்ததால் காலாண்டில் இந்த விகிதங்கள் குறைக்கப்படுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்ற முதிர்ச்சியடைந்த அரசாங்க பத்திரங்களின் விளைச்சலைவிட வெவ்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் 25-100 பிபிஎஸ் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஷியாமலா கோபிநாத் குழு இதற்கு முன்பு பரிந்துரைத்திருந்தது.

நேற்று வெளியான அறிவிப்பு
நேற்று வெளியான அறிவிப்பு

இவ்வாறான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இதற்கு பொதுமக்களிடம் இருந்தும் எதிர்க்கட்சியினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சகத்தின் இந்த பின்வாங்கலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் பிரியங்கா காந்தி, ``இந்தத் திடீர் பின்வாங்கலுக்கு காரணம் துறையின் அஜாக்கிரதையா அல்லது தேர்தல்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த முடிவுக்கு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், ``மத்திய அரசின் இந்த வட்டிக் குறைப்பு முடிவு நடுத்தர வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட போர். தவறு செய்தால் அதைச் சொற்ப காரணங்கள் கூறி தட்டிக்கழிக்கக் கூடாது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

- ஶ்ரீதர் சாரதி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு