Published:Updated:

‘அஞ்சே மாதத்தில் டபுளாகும் உங்கள் பணம்...’ மறுக்கும் ஜி.எஸ்.டி.எல்... உஷார் மக்களே உஷார்!

உஷார்
பிரீமியம் ஸ்டோரி
உஷார்

உஷார்

‘அஞ்சே மாதத்தில் டபுளாகும் உங்கள் பணம்...’ மறுக்கும் ஜி.எஸ்.டி.எல்... உஷார் மக்களே உஷார்!

உஷார்

Published:Updated:
உஷார்
பிரீமியம் ஸ்டோரி
உஷார்

மோசடி நிதி நிறுவனங்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லாபம் தருகிறோம் என்று ஆசைகாட்டி, மக்களை வளைத்தபடியேதான் இருக்கின்றன மோசடி நிறுவனங்கள். பல லட்சம் பேர், பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஏமாந்தபடியேதான் இருக்கின்றனர்.

இத்தகைய நிறுவனங்கள் குறித்த எச்சரிக்கைக் கட்டுரைகளை நாணயம் விகடன் இதழிலும் மற்றும் விகடன் இணையதளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறோம். அந்த வகையில், கடந்த 18.09.2022 தேதியிட்ட நாணயம் விகடன் இதழில், ‘ஒரு லட்சம் கொடுங்க... அஞ்சே மாசத்துல டபுளா வாங்கிட்டுப் போங்க... பெரம்பலூர் - தொழுதூரில் கொட்டுது ‘பணமழை!’ என்கிற தலைப்பில், ஜி.எஸ்.டி.எல் வைபவ் நிதி லிமிடெட் நிறுவனம் குறித்த கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அந்த நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபடுவதாக வந்த புகார்களை அடுத்து, ‘முதலீடு செய்ய வந்திருக்கிறோம்’ என்று சொல்லிக்கொண்டு, அதன் ஒரு கிளைக்குச் சென்றோம். அங்கு நமக்குக் கிடைத்த அனுபவத்தையும் அதில் பகிர்ந்திருந்தோம்.

இதற்கு ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் அலுவலக மேலாளர், டி.பிரபாகரன், நமக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ‘‘எங்கள் தரப்பைத் தெரிவிக்க உரிய காலஅவகாசம் கொடுக்காமலேயே கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது’’ என்று அதில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார் பிரபாகரன்.

இந்தக் கட்டுரையைப் பதிவிடும் முன்பாக, செப்டம்பர் 3 அன்று மெயில் மூலமாக ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்துக்கு சில கேள்விகளை அனுப்பியிருந்தோம். ‘சில நிமிடங்களில் பதில் அனுப்புகிறோம்’ என்கிற பதிலை மெயிலில் அனுப்பியது ஜி.எஸ்.டி.எல் நிறுவனம். ஆனால், 12-ம் தேதிதான் விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளார் ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் மேலாளர் பிரபாகரன்.

‘அஞ்சே மாதத்தில் டபுளாகும் உங்கள் பணம்...’ மறுக்கும் ஜி.எஸ்.டி.எல்... உஷார் மக்களே உஷார்!

இனி அவரின் கடிதத்திலிருந்து...

‘‘ஜி.எஸ்.டி.எல் வைபவ் நிதி லிமிடெட், மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (Ministry of Corporate Affairs) மூலம் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஆகும். நாங்கள் கிராமப்புற மக்களுக்கான வங்கிச் சேவை, சிறு கடனுதவி சேவைகளை வழங்கி வருகிறோம். பொதுமக்களிடம் இருந்து எவ்விதப் பணமும் வசூலிப்பதில்லை. நிதி லிமிட் சட்ட விதிகள்படி, எங்கள் நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர விருப்பப்படும் நபர்கள், முறையே சேமிப்புக் கணக்குத் தொடங்க முறையான விண்ணப்பமும், ரூபாய் 100-ம் செலுத்திய பின் உறுப்பினர்களாக இணைக்கப்படுகின்றனர். மேலும், ரூ.1,000 செலுத்தி மத்திய அரசு வழங்கியுள்ள வங்கிச் சேவைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு கணக்குத் தொடங்கிக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க கூட்டுறவுச் சங்க நிறுவனம் பாணியிலான நிறுவனம். தற்போது எங்கள் நிறுவனத்தில் 1,221 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மத்திய அரசாங்க வரைமுறைகளின்படி, தனிநபர் சேமிப்புக் கணக்கு, தொடர் சேமிப்புக் கணக்கு, வருடாந்தர வைப்புத் தொகை உள்ளிட்ட சேவைகளை வழங்கிவருகிறோம். உறுப்பினர்கள் செலுத்தும் நிதிக்கு முறையான ஆவணங் களையும் வழங்கியுள்ளோம். பணப் பரிமாற்றங்கள் செய்திட ஆன்லைன் மற்றும் செயலிகள் மூலம் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. வங்கிகளுக்குரிய விதிகளின்படி, வட்டி விகிதம் தவிர, வேறு எந்தக் கூடுதல் தொகையும் வழங்கப்படுவ தில்லை. உறுப்பினரல்லாத நபர்களுக்குக் கடன் எதுவும் வழங்குவதில்லை. எங்கள் நிறுவனம் வேறு நிறுவனங் களுடன் பார்ட்னராக இல்லை. ஏஜென்டுகளை நியமித்து உறுப்பினர்கள் சேர்க்கையும் செய்வதில்லை. எவ்வித இரட்டிப்புப் பணப் பலன் களையும் எங்கள் நிறுவனம் சார்பில் யாருக்கும் வழங்கு வதில்லை.

மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் அனுமதி பெற்று நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான நிதி லிமிட் நிறுவனங்கள், எங்களைப் போலவே இயங்கிவருகின்றன. இத்தகைய நிறுவனங்கள், பங்குச் சந்தைகளை முறைப் படுத்தும் ‘செபி’ அமைப்பிடம் எவ்வித அனுமதியும் பெறத் தேவையில்லை’’ என்றெல்லாம் அந்த மெயிலில் குறிப்பிட் டிருக்கிறார் பிரபாகரன்.

தமிழகப் பெருங்குடி மக்களே, ‘அதிக வட்டி தருவ தாக ஆசைகாட்டி பொது மக்களிடம் இருந்து எவ்விதப் பணமும் வசூலிக்கவில்லை’ என்று அந்த நிறுவனமே தெளிவாகச் சொல்லிவிட்டது. எனவே, இனியும் அந்த ஜி.எஸ்.டி.எல் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, ‘ஐந்தே மாதத்தில் டபுள் ஆகிவிடும்’ என யாரா வது பணம் வசூலித்தால், அதை நம்பாதீர்கள். அத்தகைய நபர்களைக் கையும் களவு மாகப் பிடித்து, வீடியோ எடுத்து பொதுவெளியில் பரவ விடுங்கள். கூடவே, காவல் நிலையத்திலும் புகார் கொடுங்கள்.

‘அஞ்சே மாதத்தில் டபுளாகும் உங்கள் பணம்...’ மறுக்கும் ஜி.எஸ்.டி.எல்... உஷார் மக்களே உஷார்!

ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லி பணம் வசூலித்த நபர்களிடம் யாராவது பணம் கட்டியிருந்தால், அந்த வசூல் பார்ட்டிகளையும் வளைத்துப் பிடித்து உங்கள் பணத்தை வசூலித்துக்கொள்ளுங்கள். அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். மேற்கொண்டும் பணத்தைப் போட்டுவிட்டு, நடுவீதியில் நிற்க வேண்டாம்!

இந்த நிறுவனம், வங்கிச் சேவை தருவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை என்றும் விளக்கம் தந்திருக் கிறது. வங்கிச் சேவை எனும்போது, ரிசர்வ் வங்கி யின் விதிமுறைகளுக்கு உட்பட்ட லாபத்தை மட்டுமே தர முடியும். மிகப் பெரிய லாபம் எல்லாம் தர வாய்ப் பில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் மக்களே!

நிதி லிமிடெட் நிறுவனங் களை நடத்த ரிசர்வ் வங்கி யிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை. மத்திய விவகாரத் துறையில் பதிவு செய்துகொண்டாலே போதும் என்பது உண்மையே. ஆனால், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள விதிமுறை களின்படிதான் வட்டியை நிர்ணயிக்க வேண்டும், வழங்க/வசூலிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நிதி நிறுவனங்கள் அப்படி நியாயமாக நடந்துகொள் வதில்லை. அதிக வட்டி தருவதாக மக்களிடமிருந்து டெபாசிட் வசூலிக்கின்றன. கமாடிட்டி டிரேடிங், கரன்சி, கிரிப்டோ டிரேடிங்கிலும் ஈடுபட்டு, மக்களுக்கு அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி, பணத்தை வசூல் செய்து, பெரும் பணம் சேர்த்துக்கொண்டு ஓடிவிடுகின்றன.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், அதிக வட்டி தருவதாகக் கூறும் நிறுவனம் ஆரம்பத்தில் ஒரு சில மாதங்கள் வரை அதைக் கொடுக்கும். ஒரு கட்டத்தில் பெரும் பணம் சேர்ந்த பிறகு, கம்பி நீட்டிவிடும். மாதந்தோறும் லாபப் பணம் தந்துவந்த நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை, மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை என்று மாற ஆரம்பிக்கும். சமயங்களில் ‘செக் பவுன்ஸ்’-ஆக ஆரம்பிக்கும். இதெல்லாமே அந்த நிறுவனம் வெகு விரைவில் ஓட்டமெடுக்கப்போகிறது என்பதற்கான அறிகுறிகளே. ஆனால், அப்போதும்கூட விழித்துக் கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள்... விழித்துக்கொள்ள விடாதவர்களும் இருக்கிறார்கள்.

‘இப்ப ஏதோ பிரச்னை... அதான் பணம் தரமுடியல போல. அதுக்குள்ள அவசரப்பட்டு போலீஸுக்கோ, மீடியாவுக்கோ போனா மொத்த பணமும் அம்போதான்’ என்று சொல்லி மக்களைக் கட்டிப்போட்டுவிடுகிறார்கள். இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு, மொத்தமாகப் பணத்துடன் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள் மோசடி பேர்வழிகள்.

மக்களே... முதலில் இத்தகைய மோசடி நிறுவனங்களில் பணத் தைப் போடாதீர்கள். ஒருவேளை, பணம் போட்டிருந்தால், உடனடி யாகச் சென்று அதை திரும்பப் பெற்றுவிடுங்கள். ஒருவேளை ஏமாற்றப் பட்டால், சற்றும் தயங் காமல் காவல் நிலையத்தில் புகார் தருவதோடு, மீடியாவிலும் செய்தியைப் பரப்புங்கள். காவல்துறை நடவடிக்கை எடுத்து உங்கள் பணத்தை மீட்டுவிடும் என்பதற்கு நூறு சதவிகித உத்தரவாதம் இல்லாவிட்டாலும், மேற்கொண்டு யாரும் ஏமாறாமல் தடுப்பதற்காவது அது உதவும்!

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நீங்கள் இழக்காமல் இருக்க வேண்டும் எனில், நீங்கள்தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!