Published:Updated:

`வரிவசூல் போதுமானதாக இல்லை; ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் மேலும் தாமதம்!'- நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ( vikatan )

நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வருவாய் வளர்ச்சி 18 சதவிகிதமாக இருக்குமென்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், கணிப்பைவிட மிகவும் குறைவாகவே வசூலாகியிருப்பதால் மாநிலங்களுக்குத் தரப்படும் இழப்பீட்டைத் தாமதப்படுத்துவதாகத் தெரிகிறது.

ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி வசூல் போதுமானதாக இல்லாததால் மாநிலங்களுக்கு அளிக்கப்படவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை தாமதப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி
ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி
vikatan

மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை சுமார் 70,000 கோடியாக உள்ளது. தமிழகத்துக்கு மட்டுமே மொத்தம் 7,214 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீடு வரவேண்டியிருப்பதாகக் கடந்த ஜனவரியில் சட்டசபையில் ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த நிதி கிடைப்பது தாமதமாவதால் தமிழக அரசின் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இம்மாதத் தொடக்கத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல்செய்து உரை நிகழ்த்திய நிதி அமைச்சர், ஜி.எஸ்.டி வரியை எளிமைப்படுத்தப்போவதாக மட்டும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான், ஜி.எஸ்.டி வருவாய் குறைந்துள்ளதால், மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய 14% இழப்பீடும் தாமதமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வருவாய் வளர்ச்சி 18 சதவிகிதமாக இருக்குமென்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், கணிப்பைவிட மிகவும் குறைவாகவே வசூலாகியிருப்பதால் மாநிலங்களுக்குத் தரப்படும் இழப்பீட்டைத் தாமதப்படுத்துவதாகத் தெரிகிறது.

ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி
ஜி.எஸ்.டி இழப்பீட்டு வரி
vikatan

ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் மாநிலங்களை ஆளுகின்ற கட்சிகளின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அப்படி எந்தப் பாகுபாடும் பார்க்கப்படவில்லை என்றும், அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு ஒரே பார்வையில் அணுகுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு