Published:Updated:

பட்ஜெட் பிளானிங்... இந்த 5 விஷயங்களைக் கவனியுங்க!

பட்ஜெட் பிளானிங்
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் பிளானிங்

பட்ஜெட் பிளானிங்

பட்ஜெட் பிளானிங்... இந்த 5 விஷயங்களைக் கவனியுங்க!

பட்ஜெட் பிளானிங்

Published:Updated:
பட்ஜெட் பிளானிங்
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் பிளானிங்

ஹேமா சொக்கலிங்கம்

இன்றைக்கு பணவீக்கம் என்பது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏகத்துக்கும் உயர்ந்திருப்பதால், ஒவ்வொரு குடும்பத்தின் செலவும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் வீட்டுக்கான அத்தியாவசிய செலவு 10% வரை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஒவ்வொரு குடும்பத் தலைவர் மற்றும் தலைவியும் பட்ஜெட் போட்டு செலவு செய்வது தவிர்க்க முடியாத விஷயமாக மாறியிருக்கிறது. பட்ஜெட் போடப்போகிறோம் என்றவுடன் காகிதத்தில்/ மொபைல் செயலியில் / எக்ஸலில் வரவு-செலவு விவரங்களைப் பதிவு செய்வதுடன் முடிந்துவிடாது. அதை முறையாகத் திட்ட மிட்டு, சரியான கால அளவுகளில் சீர்செய்ய வேண்டும். அப்போதுதான், நமது பட்ஜெட், நம்முடைய நோக்கத்தை சரியாக நிறைவேற்றும்.

இல்லாவிட்டால், நாம் அமைத்துக்கொண்ட பட்ஜெட்டுக்கும் செய்த செலவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் போய், கடைசியில் ‘பட்ஜெட் போட்டு செலவு செய்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லையே’ என்று புலம்ப வைத்துவிடும்.

சரி, பட்ஜெட் போடுவதற்கு முன்பு, கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்களைப் பற்றி இனி பார்ப்போம்.

பட்ஜெட் பிளானிங்... இந்த 5 விஷயங்களைக் கவனியுங்க!

1. பட்ஜெட் வடிவமைத்தல்: பட்ஜெட்டை வடிவமைக்கத் தொடங்கும்போதே உங்களுக்குப் பல்வேறு விதங்களில் இருந்து வரும் மாதாந்தர வருவாய்களை (மாதச் சம்பளம், வாடகை வருமானம், வட்டி வருமானம் எவ்வளவு என்பதை முதலில் பதிவு செய்ய வேண்டும். அதே போல, நாம் எந்தெந்த விஷயங்களுக்கு செலவு செய்யப்போகிறோம் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். செலவு என்பது வரவைவிடக் குறைவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 - 30% பணத்தைச் சேமிக்கிற மாதிரி நம் பட்ஜெட் இருக்க வேண்டுமே தவிர, வரவைவிட அதிகமாக செலவு செய்வதோ, கடன் வாங்கி செலவு செய்வதோ கூடவே கூடாது!

2. ரெக்கார்ட்ஸ் பைலிங்: ஒவ்வொரு செலவையும் நமக்கு நன்கு பழக்கப்பட்ட வகையில் ஏதாவது ஓர் இடத்தில் தவறாமல் குறித்து வைப்பது அவசியம். செலவு செய்ததற் கான ஆவணங்கள், பில்கள் மற்றும் அக்கவுன்ட் ஸ்டேட்மென்டுகளைச் சேகரித்து வகைப் படுத்தி வைப்பதன்மூலம் மாதக் கடைசியில் நம் செலவுகளை எளிதில் நம்மால் கணக்கிட முடியும்.

3. பட்ஜெட்டை ஆய்வு செய்தல்: முதல் மூன்று மாதங்களுக்கு ஆகும் வரவு செலவுக் கணக்குகளைத் தவறாமல் பதிவு செய்வதன் மூலம், நாம் எதற்காக செலவு செய்கிறோம், எவ்வளவு செய்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். இதன்மூலம் நமது செலவுகளில் எவ்வளவு அத்தியாவசியமான தாக இருக்கிறது, எவ்வளவு அநாவசியமாக இருக்கிறது, எதற்கெல்லாம் அதிகமாகச் செலவு செய்கிறோம் என்பதை நம்மால் சட்டென்று கண்டறிந்து, நம்முடைய செலவு செய்யும் முறையை மாற்றிக்கொள்ள முடியும்.

4. ஸ்மார்ட் பையிங்: நாம் வடிவமைக்கும் பட்ஜெட் மூலம் நம்முடைய செலவுகளை ஸ்மார்ட்டாகச் செய்து முடிக்க வேண்டும் எனில், நமக்குத் தேவையான பொருள்களை குறைந்த விலையில் தேடி வாங்க வேண்டும். பார்த்ததை எல்லாம் அதிக விலை தந்தாவது வாங்க நினைத்தால், பட்ஜெட் போட்டு செலவும் செய்தும் வீண்தான்!

5. மிச்சமான பணத்தை சேகரியுங்கள்: ஒவ்வொரு மாதமும் மிச்சமாகும் பணத்தைத் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். இப்படி சேமிக்கும் பணத்தைக் கொண்டு குடும்பத்துக்குத் தேவையான ஒரு பொருளை வாங்கவோ/குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் கட்டவோ பயன்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism