பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பொருளாதார புத்திசாலிகளாக பிள்ளைகளை வளர்ப்பது எப்படி..?

 நிதி நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதி நிர்வாகம்

நிதி நிர்வாகம்

“ஒருவர் நீண்ட காலத்துக்கு முன்பு ஒரு மரத்தை நட்டதால் இன்று ஒருவர் அதன் நிழலில் அமர்ந்திருக்கிறார்” என்று உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட் சொல்லியிருப்பது, நம் பிள்ளைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். அதாவது, நம் பிள்ளைகளின்முன் நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ, அவர்களுக்கு பொருளாதாரம் மற்றும் நிதி (Economics and Finance) பற்றி சொல்லித் தருகிறோமோ, அதன் படிதான் அவர்களின் பிற்கால வாழ்க்கையும் அமையும்.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி படிக்க வைப்பதுடன், ஒரு நல்ல பெற் றோரின் கடமை முடிந்துவிடவில்லை. பிள்ளை களுக்கு வாழ்வின் சில அம்சங்களின் மதிப்பைப் பற்றி பெற்றோர்கள் கற்பிப்பது அவசியம்.

இந்தியா போன்ற உலகின் வளரும் நாடு களில் நுகர்வுக் கலாசாரம் முந்திக்கொண்டு இருப்பதால், பல இளைஞர்கள் சம்பாதிக்க ஆரம்பித்ததும் கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன் மாதத் தவணைகளை சுலபமாக பயன் படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இதனால், அவர்கள் தேவையில்லாத கடன் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.

தேவைக்கும் விருப்பத்துக்கும் (Need & Want) இடையே உள்ள வித்தியாசத்தை நாம் நம் பிள்ளைகளுக்கு உணர வைப்பது, அவர்களை வாழ்நாள் முழுவதும் பொருளாதாரம் மற்றும் நிதி ரீதியாகப் புத்திசாலியாக மாற்றும். தேவை என்பது அவசியமானதாகும்; அது இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது சிரமாக இருக்கும். விருப்பம் என்பது ஆசைப்படுவதாகும்; அது இல்லை என்றாலும், வாழ்க்கையை சுலபமாக ஓட்ட முடியும் என்பதைப் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

பிள்ளைகளைப் பொருளாதார ரீதியாக புத்திசாலிகளாக மாற்றுவதற்கு பெற்றோர்கள் எப்படி உதவலாம் என்பதைப் பார்ப்போம்.

பொருளாதார புத்திசாலிகளாக பிள்ளைகளை வளர்ப்பது எப்படி..?

எளிய வாழ்க்கை எல்லாம் தருமே...

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நிதி மேலாண்மைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். ‘குழந்தைகள்தானே! இவர்களுக்கு என்ன புரியப்போகிறது’ என்று நினைக்காமல், அவர்களையும் மதித்து பண விஷயங்களைச் சொல்லித் தர வேண்டும். குறிப்பாக, எளிமையான வாழ்க்கையைக் குறைந்தபட்ச விருப்பங்களுடன் வாழ முடியும் என்பதை குழந்தைகளுக்கு அனுபவபூர்வமாகச் சொல்லித் தர வேண்டும். அப்படி சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள் நிதிரீதியாக சிறப்பாகச் செயல்படுவார்கள்.

எளிய வாழ்க்கையைப் பின்பற்றுபவர்கள்தான் எப்போதும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களைத்தான் மற்றவர்கள் பாராட்டுகிறார்கள். ஆடம்பர வாழ்க்கைக்காக யாரையும் யாரும் பாராட்டுவதில்லை. எளிய வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, மன அமைதி எல்லாவற்றையும் தரும் என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். நாம் ஒரு முன்மாதிரியாகச் செயல்பட்டாலே நம் பிள்ளைகளும் நிதி ரீதியாக சரியாக இருப்பார்கள்.

நிதி முன்னுரிமைகளை அமைத்தல்...

‘ஆடம்பரமான மற்றும் நவ நாகரிகமான தேவைகளைவிட உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்க்கையின் அடிப்படைத் தேவை மிகவும் இன்றியமையாதவை’ என்பதை நம் பிள்ளைகளின் மனதில் பதிய வைப்பது நல்ல பெற்றோரின் கடமையாகும். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. எனவே, சரியான நிதிப் பழக்கத்தை சிறு வயதிலேயே சொல்லித் தருவது நல்லது.

பிள்ளைகளிடம் நிதி முன்னுரிமைகளை (Financial Priorities) உருவாக்க அவர்களின் வயதுக்கு ஏற்ற வரவு செலவுத் திட்டத்தை (Budget) சொல்லிக் கொடுப்பதன் மூலம் தொடங் கலாம்.

நம் பிள்ளைகளிடம் பட்ஜெட் போடும் பழக்கத்தை வளர்ப்பது, அவர்களுடன் இணைந்து பெற்றோரும் பட்ஜெட் போடுவது என அவர்களுக்கு சுலபமாக பட்ஜெட் போட சொல்லிக் கொடுக்கலாம்.

இப்படி பிள்ளைகளுடன் பெற்றோர் இணைந்து செயல் படுவது உண்மையில் அவர் களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதுடன், நிதி சம்பந்த மான விஷயத்தை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள்.

இலக்கு சார்ந்தது...

சினிமாவுக்குப் போக, பீட்சா வாங்க, பார்பி பொம்மை வாங்க என சிறிய மதிப்புள்ள பொருள்களை வாங்குவற்கு அவர்களைப் பணம் சேர்க்க வைக்க வேண்டும். இதற்கான பணத்தை சிறிது சிறிதாக குறிப்பிட்ட காலத்தில் உண்டி யலில் சேர்க்கப் பழக்க வேண்டும்.

பிறகு, பிள்ளைகளின் உயர் கல்வி, கல்யாணம், சொந்த வீடு வாங்க, கார் வாங்க, புதிய ஃபர்னிச்சர் வாங்க திட்ட மிடும்போதும், அதற்காக பணத்தை ஒதுக்கி முதலீடு செய்யும்போதும், அவற்றுக் கான நடைமுறையில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பழக்கம் அவர்களுக்கு எனத் தனியே குடும்பம் உருவாகும்போது தொடர உதவும்.

பொருளாதார புத்திசாலிகளாக பிள்ளைகளை வளர்ப்பது எப்படி..?

விருதுகள் மற்றும் பாராட்டுகள்...

பிள்ளைகளை அவர்களின் சிறிய தேவைகளை நிறை வேற்ற சேமிக்க பழக்கும் அதே நேரத்தில், அது நிறை வேறும்போது அவர்களைப் பாராட்டத் தயங்கக் கூடாது. அவர்களுக்கு சிறிய பரிசு களைக் கொடுத்து ஊக்கப் படுத்துவது அவசியமாகும். மேலும். மற்ற உறவினர்கள், நண்பர்கள் முன்னால் என் பிள்ளைகள் இந்தப் பொருளை அவர்களின் சேமிப்பில் வாங்கியிருக் கிறார்கள் எனப் பெருமை யாகச் சொல்வது அவர்களை மேலும் சேமிக்கத் தூண்டு வதாக இருக்கும். மேலும், சேமிப்பு என்பது எப்படி அவசரகாலத்தில் உதவும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

உழைத்தால்தான் பணம்...

உழைத்தால்தான் பணம் வரும் என்பதை சிறு வயதிலேயே அவர்களின் மனதில் பதிய வையுங்கள். வீட்டுவேலை, காரை சுத்தப் படுத்தல், தோட்ட வேலை போன்றவற்றை செய்யச் சொல்லி, அதற்குப் பணமும் கொடுங்கள். அந்தப் பணத்தைக்கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுங்கள்.

வங்கிக்கு அழைத்துச் செல்லுங்கள்...

புதிய வங்கிக் கணக்குத் தொடங்குவது, வங்கிக் கிளையில் பணம் செலுத்துவது எனப் பல்வேறு விஷயங்களை அவர்களை உடன் அழைத்துச் சென்று கற்றுக்கொடுங்கள். வங்கியில் முதலீடு செய்யும் பணத்துக்கு வட்டி எப்படி சேர்கிறது என்பதை விளக்கிச் சொல்லுங்கள்.

பிள்ளைகளின் வயது சுமார் பத்தைக் கடக்கும் போது, நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் சிறிய அளவில் பணத்தை முதலீடு செய்து அதன் ஏற்றத்தை விளக்கிச் சொல்லுங்கள், நீண்ட காலத்தில் அவற்றில் பணம் எப்படி வளர்கிறது என்பதை விளக்கிச் சொன்னால், அவர்களால் முதலீட்டை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

நிதிக் கல்வி...

நிதிக் கல்வி தொடர்பான நூல்களை வாங்கி பிள்ளைகளுக்குப் படிக்க கொடுங்கள். ‘பணக்கார தந்தை, ஏழை தந்தை’ (Rich Dad Poor Dad), ‘பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன்’ (The Richest Man in the Babylon) உள்ளிட்ட நிதி, முதலீடு தொடர்பான புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்.

இவை தவிர, செபியும் ஆர்.பி.ஐ-யும் எளிமை யான நடையில் நிதிக் கல்வி தொடர்பாக பல புத்தகங்களை வெளி யிட்டுள்ளன. அவற்றை யும் குழந்தைகளுக்கு வாங்கித் தந்து, படிக்கச் சொல்லலாம்.

பண விஷயத்தில், பிள்ளைகளுக்குப் பெற்றோர் முன்மாதிரியாக (Role-model) இருக்கும்பட்சத்தில், பிள்ளைகள் அவர்களின் நிதி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றிக்கொள்வார்கள். குழந்தைகளுக்காக கோடிக்கணக்கில் சொத்து சேர்ப்பதைவிட, கோடி ரூபாயை எப்படி சம்பாதிப்பது என்று கற்றுத் தருவது பெற்றோரின் கடமை!