Published:Updated:

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா... இந்த எட்டு தவறுகளை எப்பவுமே செய்யாதீங்க!

கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டுகளைப் பொறுத்தவரை சரியான தேதியில் தவணையைச் செலுத்தமுடியாமல் போனால், அதிக அளவில் வட்டி செலுத்த வேண்டி யிருக்கும்.

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா... இந்த எட்டு தவறுகளை எப்பவுமே செய்யாதீங்க!

கிரெடிட் கார்டுகளைப் பொறுத்தவரை சரியான தேதியில் தவணையைச் செலுத்தமுடியாமல் போனால், அதிக அளவில் வட்டி செலுத்த வேண்டி யிருக்கும்.

Published:Updated:
கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
கிரெடிட் கார்டு

கொரோனா பரவல் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், நடுத்தர குடும்பங்களின் பொருளாதார நிலை இன்னும் அதளபாதாளத்தில்தான் இருக்கிறது. நிதித் தேவைகளை சமாளிக்க பெரும்பாலான மக்கள் அதிகமாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. குறிப்பாக, இளைய தலைமுறையினர்... என்கிறது புள்ளிவிவரம்.

இது ஒரு பக்கமிருக்க, இந்த கிரெடிட் கார்டுகளை சரியாகப் புரிந்துகொள்ளாமல் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். கிரெடிட் கார்டு பயன் படுத்துபவர்கள் செய்யும் தவறுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும், டெபிட் கார்டுகளில் இருந்து பணத்தை எடுத்துச் செலவு செய்வதுபோல, கிரெடிட் கார்டுகள் மூலமாகவும் அதிக பணத்தை செலவு செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறவர் என்றால், பின்வரும் தவறுகளைச் செய்யும்பட்சத்தில், உடனே திருத்திக்கொள்ளுங்கள்.

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா... இந்த எட்டு தவறுகளை எப்பவுமே செய்யாதீங்க!

தவறு 1 - பொது இடங்களில் கிரெடிட் கார்டு!

உங்களுடைய கிரெடிட் கார்டு விவரங்களை வெளியிடுவதில் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். வங்கி சார்ந்த விவரம் எதுவாக இருந்தாலும், அதை வெளியிடக் கூடாது என்பதுதான் பொதுவான விதி. ஆனால், நம்மில் பலர் தெரிந்தோ, தெரியாமலோ கிரெடிட் கார்டு விவரங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். மற்ற கார்டு விவரங்களைப் போல, கிரெடிட் கார்டு விவரங்களையும் பாதுகாப்பது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா... இந்த எட்டு தவறுகளை எப்பவுமே செய்யாதீங்க!

தவறு 2 - கிரெடிட் கார்டு அழைப்புகள்!

பெட்ரோல் பங்க், ரெஸ்டாரன்ட் போன்ற பொது இடங்களில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போதுதான், அது சார்ந்த விவரங்கள் அதிக அளவில் களவாடப்படுகின்றன. அதனால், பொது இடங்களில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது முன்னெச் சரிக்கையுடன் நடந்துகொள்வது முக்கியம். வங்கி களிலிருந்து யாரும் கார்டு விவரங்களைக் கேட்டு போன் செய்ய மாட்டார்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனெனில், சமீப காலமாக கிரெடிட் கார்டு களைக் குறிவைத்து வரும் போன் அழைப்புகள் அதிகரித்திருக்கின்றன.

தவறு 3 - தவணைக் காலம்!

கடன் கொடுத்தவர், உரிய நேரத்தில் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பு. கிரெடிட் கார்டு விஷயத் திலும் அப்படித்தான். தவணைத் தொகைக்கான தேதியை, ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனமும் மெயில் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் மூலமாகவும் அல்லது போன் அழைப்பின் மூலமாகவும் உரியவர் களுக்குத் தெரியப்படுத்தும். கெடுகாலத்துக்குள் தவறவிடாமல், பணத்தைச் செலுத்துவது நல்லது. அப்படியில்லாமல், தவணைத்தொகை செலுத்து வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் எனில், நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் தவறு செய்கிறீர்கள் என கொள்ளலாம்.

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா... இந்த எட்டு தவறுகளை எப்பவுமே செய்யாதீங்க!
Denis

தவறு 4 - கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுப்பது!

அவசரத் தேவைக்காக ஒருபோதும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்காதீர்கள். இன்று, பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை மொபைல் வாலட்களுக்கும் அல்லது மற்றொரு வங்கிக் கணக்குக்கும் பரிமாற்றம் செய்வதை ஊக்கப் படுத்துகின்றன. ஏனெனில், கிரெடிட் கார்டிலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் தொகைக்கு வட்டி விகிதம் அதிகம். இது தெரியாமல் பலரும் அவசரப் பணத் தேவைக்காக கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள். அதைத் தவிர்ப்பது நல்லது...

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா... இந்த எட்டு தவறுகளை எப்பவுமே செய்யாதீங்க!

தவறு 5 - கிரெடிட் கார்டு லிமிட்!

உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கிரெடிட் லிமிட் முழுவதையும் பயன்படுத்தும்போது, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கார்டை பயன்படுத்த இயலாமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா... இந்த எட்டு தவறுகளை எப்பவுமே செய்யாதீங்க!

தவறு 6 - ரிவார்டு பாயின்ட்களுக்காக கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யும் செலவுகள் ஒவ்வொன்றுக்கும் ரிவார்டு பாயின்ட்டுகளை வழங்குவது வங்கிகளின் வழக்கமான செயல். அந்த ரிவார்டு பாயின்டுகளைப் பெறுவதற்காகவே கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள், கார்டு பயன் படுத்தும் தகுதியை இழக்கிறீர்கள். ஏனெனில், 5,000 பாயின்டுகளில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள், சில ஆண்டுகளில் 7,000 பாயின்ட் இருந்தால்தான் கிடைக்கும் என்றாகிவிடும். இந்த உத்தியானது உங்களுடைய கிரெடிட் கார்டு பயன் பாட்டை அதிகப்படுத்தத்தானே தவிர, சலுகைகள் வழங்குவதற்காக அல்ல.

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா... இந்த எட்டு தவறுகளை எப்பவுமே செய்யாதீங்க!

தவறு 7 - ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள்!

கிரெடிட் கார்டுகளை வாங்கச் சொல்லி தினமும் பல அழைப்புகள் வருகின்றன. கிரெடிட் கார்டு வேண்டாம் என்று சொன்னாலும், அதில் இருக்கும் ஆஃபர்களை எடுத்துச் சொல்லி மக்களை வாங்கத் தூண்டுகிறார்கள். இந்த மாய வலையில் சிக்கும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்து, பிறகு கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள். கிரெடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவராக இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டாம்.

தவறு 8 - கடன் வாங்கி கிரெடிட் கார்டு தவணையை அடைப்பது!

கிரெடிட் கார்டுகளைப் பொறுத்தவரை சரியான தேதியில் தவணையைச் செலுத்தமுடியாமல் போனால், அதிக அளவில் வட்டி செலுத்த வேண்டி யிருக்கும். இந்த அதிக வட்டிப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தவணையைக் கட்ட, கடன் வாங்கியாவது செலுத்துகிற பழக்கம் பலரிடமும் இருக்கிறது. இந்தப் போக்கு தவறானது.

கடன் கட்ட கடன் என்கிற பழக்கம் அதிகரிக்கும் போது, அது நிதி வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தவணையைச் சரியாகச் செலுத்த முடியாமல் போனால், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, கிரெடிட் கார்டுகளை சரண்டர் செய்வதுதான் நல்லது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism