Published:Updated:

கடன் வலையில் சிக்காமல் இருக்க 8 சுலப வழிமுறைகள்..!

நிதி மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
நிதி மேலாண்மை

நிதி மேலாண்மை

கடன் வலையில் சிக்காமல் இருக்க 8 சுலப வழிமுறைகள்..!

நிதி மேலாண்மை

Published:Updated:
நிதி மேலாண்மை
பிரீமியம் ஸ்டோரி
நிதி மேலாண்மை

இன்றைய நிலையில், பலருக்கும் பெரும் சுமையாக இருப்பது கடன்கள்தான் என்பதை, தினம்தோறும் செய்தித்தாள்களில் வரும் தற்கொலைச் செய்திகளைப் படித்தாலே நமக்குத் தெளிவாகத் தெரியும். சமீபத்தில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் ஒருவர், தன் இரு குழந்தைகளையும் கொன்று, தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் மனம் பதற வைத்தது. இந்தத் தற்கொலைக்கு முக்கியமான காரணம், கடன் சுமைதான்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

ஒருவர் கடன் வலையில் சிக்கி இருக்கிறாரா என்பதை அறிய ஒரு சிறிய சோதனை இருக்கிறது. அதற்கான பார்முலா, கடனுக்கும் வருமானத்துக்குமான விகிதம் = (மொத்தக் கடன் தவணை / நிகர மாத வருமானம்) X 100

உதாரணமாக, ஒருவரின் மொத்தக் கடனுக்கான மாதத் தவணை ரூ.40,000; அவரின் நிகர மாத வருமானம் ரூ.80,000 ஆகும். கடனுக்கும் வருமானத்துக்குமான விகிதம் = (40,000 / 80,000) X 100 = 50%

இங்கே கடனுக்கும் வருமானத்துக்குமான விகிதம் 50 சதவிகிதமாக இருக்கிறது. இது கொஞ்சம் அதிகமான ரிஸ்க் கொண்ட நிலையாகும். ஏனெனில், சம்பாதிப்பதில் பாதி வருமானம் கடன்களைத் திருப்பிக் கட்டவே செலவாகிவிடுகிறது. இந்தக் கடன் வீட்டுக் கடன் என்றால் கூட பரவாயில்லை. இதர கார் கடன், தனிநபர் கடன் எனில், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சதவிகிதம் 30-40-க்குள் இருந்தால், கஷ்டப்பட்டு சமாளிக்கலாம். ஆனால், 20-30 சதவிகிதமாக இருப்பது எப்போதும் நல்லது. நீங்கள் உங்களின் கடனுக்கும் வருமானத்துக்குமான விகிதத்தைக் கணக்கிட்டு, நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.

இனி கடன் வலையில் சிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

1. கட்டுக்குள் கடன் தவணைகள்...

நம்மில் பலர் எந்தக் கடன் கிடைத்தாலும் வாங்கிவிடுகிறார்கள். இதனால், சம்பளம் வாங்கியதும் கடன் தவணைகளை அடைக்கவே பெரும் தொகை செலவாகிவிடுகிறது. அதன்பிறகு, குடும்பச் செலவுக்குப் போதுமான பணம் இருப்பதில்லை. இதைத் தவிர்க்க அளவோடு கடன் வாங்குவது அவசியம்.

வீட்டுக் கடனுக்கான தவணை நிகர வருமானத்தில் 40 சதவிகிதத்துக்குமேல் எக்காரணம் கொண்டும் செல்லக் கூடாது. கார் கடன் தவணை மாத வருமானத்தில் 15 சதவிகிதத் துக்குள்ளும், தனிநபர் கடன் மாத வருமானத்தில் 10 சதவிகிதத் துக்குள்ளும் இருப்பது அவசியம்.

தவிர, ஒரே நேரத்தில் பல கடன்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், அனைத்துக் கடன்களுக்குமான மாதத் தவணை நிகர வருமானத்தில் 50 சதவிகிதத்துக்குமேல் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், கடன் வலையில் சிக்குவது நிச்சயம்.

2. தேவையைவிட அதிகமாகக் கடன் வாங்க வேண்டாம்...

உங்களுக்குத் தேவையானதைவிட அதிகமாகக் கடனை ஒருபோதும் வாங்க வேண்டாம். விளம்பரங்கள், சலுகைகளால் ஈர்க்கப்பட்டு எந்தப் பொருளையும் வாங்க வேண்டாம். ஒரு பொருள் உங்களுக்கு அவசியம் தேவையெனில், அதற்காக படிப்படியாகச் சேமித்து வாங்கவும். அதிலிருக்கும் சந்தோஷமே தனி.

கடன்  வலையில் சிக்காமல் இருக்க 8  சுலப  வழிமுறைகள்..!

3. நீண்டகால கடனைத் தவிர்க்கவும்...

வீட்டுக் கடன் போன்ற குறைந்த வட்டியிலான, சொத்து மதிப்பைப் பெருக்கக் கூடிய அவசியமான கடன்கள் தவிர, மற்ற கடன்களைக் கூடியவரையில் விரைந்து அடைக்கவும்.

மேலும், 15, 20 ஆண்டு களுக்குக் கடன் பெற்றிருந் தாலும், அந்தக் கடனை அத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வட்டியைச் சேமிக்க நாம் எப்போதும் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த முயற்சி செய்ய வேண்டும். நீண்டகால கடனை முன்கூட்டியே கட்டி முடிக்க ஏதாவது அபராதம் விதிக்கப்படலாம். அந்த அபராதமானது கூடுதலாகக் கட்டும் வட்டியைவிட நிச்சயம் குறைவாகவே இருக்கும்.

4. கிரெடிட் கார்டு பாக்கியை உடனே கட்டி முடிக்கவும்...

கிரெடிட் கார்டுமூலம் கிடைக்கும் பணத்தை இலவசப் பணமாக ஒருபோதும் கருத வேண்டாம். மேலும், அதில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கட்டணம் இருக்கிறது. தாமத மாகக் கட்டினால் அதற்கு அபராதக் கட்டணம், அந்தத் தாமதத்துக்கான வட்டி என நாம் கட்ட வேண்டிய தொகை கூடிக்கொண்டே போகும். கிரெடிட் கார்டில் அதிக பாக்கி வைத்திருப்பவர்கள், அந்த கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை முற்றிலு மாக நிறுத்த வேண்டும். அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் முடிந்த வரை அதிக தொகையைக் கட்டி கிரெடிட் கார்டு பாக்கியைக் கட்டி முடிக்க முயற்சி செய்யவும். பாக்கியை முழுவதுமாகக் கட்டிமுடித்த பிறகு, கிரெடிட் கார்டுகளை சரண்டர் செய்து விட்டுப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

5. கிரெடிட் கார்டில் கடன் வேண்டாம்...

பொருள்களைக் கடனில் வாங்கிவிட்டு, பணம் செலுத்து வதற்கு வசதியாக மட்டுமே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டும். பணமாக வாங்க அதைப் பயன்படுத்தக் கூடாது. இதேபோல், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏ.டி.எம் மையத்தில் பணமும் எடுக்கக் கூடாது. கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கினால் அல்லது பணம் எடுத்தால் நிச்சயமாகக் கடன் வலையில் சிக்கிக் கொள்வோம்.

காரணம், இவற்றுக்கான வட்டியானது கடன் வாங்கிய வுடன் / பணம் எடுக்கப் பட்டவுடன் ஆரம்பித்து விடும். மேலும், கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்க மற்றும் பணம் எடுக்க தனிக் கட்டணம் இருக்கிறது. கிரெடிட் கார்டு கடன், ஏ.டி.எம் மூலம் எடுக்கப்பட்ட பணத்துக்கான ஆண்டு வட்டி சுமார் 35% - 40% ஆகும்.

6. கிரெடிட் கார்டு பில் முழுமை யாகக் கட்டுங்கள்...

கிரெடிட் கார்டு மூலம் அடிக்கடி பொருள்களை வாங்கிவிட்டு, குறைந்தபட்சத் தொகை என்கிற மினிமம் பேமென்ட்டைத் தொடர்ந்து கட்டி வந்தால் கடன் வலையில் நிச்சயம் சிக்கிக்கொள்வீர்கள். இதைத் தவிர்க்க ஒவ்வொரு மாதமும் உங்கள் மாதாந்தர கிரெடிட் கார்டு பில்களை முழுமையாகக் கட்டிவிடுவது அவசியமாகும்.

கடன்  வலையில் சிக்காமல் இருக்க 8  சுலப  வழிமுறைகள்..!

7. புதிய கடன் வாங்குவதை நிறுத்துங்கள்...

நம் முன்னோர்கள் எல்லாம் கடன் இல்லாத வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்; இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறார்கள். மாதச் சம்பளம் வாங்கிய நம் பெற்றோர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், மாதச் செலவுக்கு பணம் இல்லாத மாதக்கடைசியில் சிக்கனமாகச் செலவு செய்து சமாளித்திருக்கிறார்கள். அவர்கள் கடன் வாங்கி செலவு செய்யவில்லை. புதிய கடன் உருவாக்கும் அனைத்து நடவடிக்கை களையும் நிறுத்தி, இருக்கிற கடனை அதிகமாக திருப்பிச் செலுத்துங்கள். இதனால், விரைவிலேயே கடன் அடைபட்டு, சேமிப்பு அதிகரித்து உங்கள் வாழ்க்கைமுறையே மாறிவிடும்.

8. டெபிட் கார்டு மட்டும் பயன்படுத்தவும்...

கிரெடிட் கார்டுக்குப் பதிலாகப் டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள். இது உங்கள் செலவழிக்கும் ரிஸ்க்கைக் குறைக்கும். மேலும், வரவுக்குள் மட்டுமே செலவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வருமானம் எவ்வளவு, அதற்குள் உங்கள் செலவு அடங்குகிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களால் பணம் செலுத்தக்கூடிய பொருள்களை மட்டுமே வாங்குங்கள். உங்கள் செலவுகள் அனைத்தையும் தெளிவாக எழுதி வையுங்கள். நீங்கள் திட்டமிட்டபடி செலவு செய்ய இது மிகவும் உதவியாக இருக்கும்.

கடன் வலையில் சிக்கி நீங்களும் உங்கள் குடும்பத் தினரும் கஷ்டப்படாமல் இருக்க மேற்சொன்ன விஷயங்கள் அனைத்தும் நிச்சயம் பயன்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism