Published:Updated:

அரசு ஊழியர்களுக்கு பென்ஷன்... குறைக்கவோ, உயர்த்தவோ என்னென்ன காரணங்கள்..?

பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
பென்ஷன்

பென்ஷன்

அரசு ஊழியர்களுக்கு பென்ஷன்... குறைக்கவோ, உயர்த்தவோ என்னென்ன காரணங்கள்..?

பென்ஷன்

Published:Updated:
பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
பென்ஷன்

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று பென்ஷன் பெறுவோருக்கு ஒவ்வொரு ரூபாயும் ஒரு பொற்காசுதான். காரணம், வருமானத்தை எதிர்பார்க்க முடியாத, செலவைத் தவிர்க்க முடியாத காலம் அது. பணி ஓய்வு பெறுவது வாழ்வில் ஒரு முறை நிகழ்வு என்பதால், பென்ஷன் பற்றி பலருக்கும் சந்தேகங்கள் எழுவது சகஜம். அவற்றுள் சிலவற்றுக்கான விளக்கங்களைப் பார்க்கலாம்.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

பணிக்காலம்...

பென்ஷன் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக்காலம் 10 வருடம் ஆகும். அதற்குமேல் எத்தனை வருடப் பணியோ, அதற்கேற்ப பென்ஷன் அதிகமாகக் கிடைக்கும். ஆனாலும் அதிகபட்சம் 30 வருடப் பணிக்கே பென்ஷன் கணக்கீடு செய்யப்படுகிறது. அதாவது, கடைசி ஊதியத்துடன், பணிக்காலமும் பென்ஷன் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படும்.

பென்ஷன் குறைப்பு...

வயது முதிர்வில் ஓய்வுபெறுவது (Superannuation), விருப்ப ஓய்வு (Retiring Pension) பெறுவது உள்ளிட்ட ஐந்து வகை ஓய்வுகளுக்கும் கணக்கீட்டின்படி, என்ன தொகை வருகிறதோ, அந்தத் தொகை மாதாந்தர பென்ஷனாகத் தரப்படும். ஆனால், கட்டாய ஓய்வு என்பது தண்டனையின் அடிப்படையில் ஆனது என்பதால், பென்ஷன் குறைக்கப்படும். அதாவது, கணக்கீட்டின்படியான பென்ஷன் எவ்வளவோ, அதில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படுவ தற்கான வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக, கட்டாய ஓய்வு பெற்ற ஒருவரின் பணிக்காலம் (Length of service) 30 வருடம் என வைத்துக்கொள்வோம். அவர் பெற்ற கடைசி ஊதியம் ரூ.60,000 எனில், கணக்கீட்டின்படி இவர் பெற வேண்டிய பென்ஷன் தொகை ரூ.30,000 ஆகும். அதாவது, 30 வருடப் பணிக்கு கடைசி ஊதியத்தில் சரிபாதி (50%). ஆனால், இவர் கட்டாய ஓய்வு பெறும்பட்சத்தில் இவருக்கான பென்ஷன் தொகை 20,000 ரூபாயாகத்தான் இருக்கும் என்பதுடன் இது நிரந்தரக் குறைப்பாகவும் இருக்கும்.

குறிப்பிட்ட காலத்துக்குக் குறைப்பு...

ஒரு சிலர், வயது முதிர்வு வரை உழைத்து ஓய்வு பெற்றிருக்கலாம். இவர்கள் தங்களது பணிக்காலத்தில் அரசுக்கு ஏதேனும் இழப்பை ஏற்படுத்தியிருந்தால், அந்த இழப்பின் அளவுக்கேற்றபடி குறிப்பிட்ட காலத்துக்கு பென்ஷன் தொகை குறைக்கப்படலாம். உதாரணமாக, இவருக்குக் கணக்கீட்டின்படியான பென்ஷன் ரூ.30,000 எனில், இந்த 30,000 ரூபாயில் ரூ.5,000 இரண்டு வருட காலத்துக்குக் குறைக்கப்படலாம். இரண்டு வருடம் முடிந்ததும் அவர் முழுமையான பென்ஷனை அதாவது, 30,000 ரூபாயை அவர் பென்ஷனாகப் பெறத் தொடங்கிவிடுவார். இது, குறிப்பிட்ட காலத்துக்கான பென்ஷன் குறைப்பாகும். அதாவது, தற்காலிகக் குறைப்புதான். மேற்கண்ட இரண்டு வகை பென்ஷன் குறைப்பும், மாநிலக் கணக்காயர் பென்ஷன் ஏற்பளித்து, ஆணை (Pension Payment) அனுப்பும்போதே குறைக்கப்பட்டு விடும். அதாவது, மாநிலக் கணக்காயராலேயே (பரிந்துரையின் பேரில்) பென்ஷன் குறைக்கப்பட்டிருக்கும்.

அரசு ஊழியர்களுக்கு பென்ஷன்...
குறைக்கவோ, உயர்த்தவோ என்னென்ன காரணங்கள்..?

ஓய்வுபெற்ற பிறகு...

ஓர் அரசு ஊழியர் ஓய்வுபெற்று பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கும்போது, மதம், இனம், பிறப்பிடம், வசிப்பிடம், மொழி, ஜாதி அடிப்படையில் விவாதம், வெறுப்பு, பகையை உண்டாக்கும் எந்த ஓர் அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. இந்த விதியை மீறும்பட்சத்தில் பகுதியாகவோ, முழுமையாகவோ பென்ஷன் குறைக்கப்படலாம், நிறுத்தப்பட லாம். இது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கோ, நிரந்தரமாகவோ இருக்கலாம். மேலும், ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுக்குள் சொந்தமாகவோ, வணிக ரீதியாகவோ, இந்தியாவுக்கு வெளியிலான ஓர் அரசிலோ வேலைவாய்ப்பு பெறுவதாக இருப்பின், அரசின் முன்அனுமதி பெற வேண்டும். அப்படிப் பெற தவறும்பட்சத்தில் பென்ஷன் பகுதியாகவோ, முழுமை யாகவோ குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படலாம்.

இது மட்டுமன்றி, பென்ஷன்தாரர் ஒருவர் கடுமையான குற்றம் செய்து கைது செய்யப் பட்டிருந்தாலும், மோசமான நடத்தையாளர் என்று தெரிய வந்தாலும் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ பென்ஷன் நிறுத்தப்படலாம். இது தற்காலிக நடவடிக்கையாகவும் இருக்கலாம். நிரந்தர ஒன்றாக வும் இருக்கலாம். எதிர்கால நன்னடத்தை என்பது பென்ஷ னைத் தொடர்ந்து பெற அவசியம்.

பென்ஷன் கம்யூடேஷன் குறைப்பு...

ரூ.30,000 பென்ஷனுடன் ஓய்வு பெறுபவர், தனது பென்ஷனில் மூன்றில் ஒரு பங்கான 10,000 ரூபாயை ‘கம்யூட்’ (compute) செய்து, 9,82,920 ரூபாயை மொத்தத் தொகையாகப் பெறலாம். ஒருவர் எப்போது இந்த மொத்தத் தொகையைப் பெறுகிறாரோ, அந்தத் தேதி முதல் இவரது பென்ஷன் ரூ.20,000-ஆகக் குறைந்துவிடும். ஒருவேளை, கம்யூடேசன் ஆர்டர் தேதியிலிருந்து மூன்று மாதத்துக்குள் தொகை பெறா விட்டாலும், மூன்று மாதத் துக்குப் பிறகு, பென்ஷன் ரூ.10,000 குறைந்துவிடும். (பென்ஷன் ரூ.20,000-ஆகக் குறைந்தாலும், அகவிலைப்படி 30,000 ரூபாய்க்கே கணக்கிடப் படும்).

ஃபேமிலி பென்ஷன் குறைப்பு...

ஃபேமிலி பென்ஷன் கணக்கீடு இரண்டு வகையில் உள்ளது. அதாவது, ஏழு வருடங் களுக்குக் குறையாமல் பணி செய்து இறந்துபோனால், அந்த ஊழியரின் குடும்பத்துக்கு, ஊழியர் வாங்கிய கடைசி சம்பளத்தில் 50% குடும்ப ஓய்வூ தியமாக அடுத்த 10 ஆண்டு களுக்குத் தரப்படும். 10 ஆண்டுக்குப் பின், இந்த 50% குடும்ப ஓய்வூதியம் 30 சத விகிதமாகக் குறைக்கப்படும். இந்த 10 ஆண்டு எப்படிக் கணக்கிடப்படுகிறது எனில், ஊழியர் இறந்துபோன மறுநாள் முதல் 10 ஆண்டுக்கு அல்லது இறந்துபோன ஊழியர் என்றைக்கு 65 வயது நிறைவடைகிறாரோ, அது வரை 50% குடும்ப ஓய்வூதியம் தரப்படும்.

கம்யூடேசனுக்குப் பிறகு அதிகரிக்கும் பென்ஷன் தொகை...

30,000 ரூபாயில் கம்யூ டேஷன் அடிப்படையில் மொத்தத் தொகையைப் பெற்றவருக்கு பென்ஷன் தொகையில் ரூ.10,000 குறைக்கப்படும் என்று ஏற்கெனவே பார்த்தோம். அந்த 10,000 ரூபாய் 15 ஆண்டு களுக்குப் பிறகு, மீண்டும் பென்ஷனில் வந்து சேர்ந்து விடும். அடிப்படை பென்ஷன் மறுபடியும் ரூ.30,000 ஆகிவிடும். மேற்கண்ட 15 ஆண்டு என்பது என்றைக்கு கம்யூடேசன் தொகை பெற்றாரோ, அந்தத் தேதி யிலிருந்து கணக்கிடப்படும். (முன்னதாக என்றைக்கு பணி ஓய்வு பெற்றாரோ, அன்றிலிருந்து 15 வருடம் கணக்கிடப்பட்டது).

நிறுத்திவைக்கப்பட்ட பதவி உயர்வு...

ஓய்வுபெற்ற ஊழியர் பணி யில் இருக்கும்போது அவர்மீது தொடரப்பட்ட குற்றச்சாட்டு விசாரணை நிலுவையில் இருந்த காரணத்தால் (அல்லது பிற காரணங்களாலும்) பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அல்லது ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், ஓய்வுபெற்ற ஊழியர் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, சம்பள உயர்வுக்கான பணப்பலனைப் பெற்று இருந்திருக்க மாட்டார். மேற்கண்ட குற்றச்சாட்டு முடிவுக்கு வந்த பிறகு, நிறுத்திவைக்கப்பட்ட பணப் பயனுடன்கூடிய பென்ஷன் தொகை திருத்தி அமைக்கப்பட்டு பென்ஷன் அதிகரிக்கும். எந்தத் தேதி முதல் பதவி உயர்வு முதலானவை தரப்பட்டிருக்க வேண்டுமோ, அந்தத் தேதி முதல் சம்பள நிலுவை மற்றும் பென்ஷன் நிலுவை கிடைத்துவிடும்.

80 வயதுக்கு மேல்...

60 வயதில் (அல்லது அதற்கு முன்பே) ஓய்வு பெற்று பென்ஷன் பெற்றுவரும் பென்ஷன்தாரர், தனது 80 வயதை நிறைவு செய்ததும் தனது அடிப்படை பென்ஷனில் 20% கூடுதலாகவும், 85 வயதுக்குப் பிறகு 30% கூடுதலாகவும், 90 வயதை நிறைவு செய்ததும் 40% கூடுதலாகவும், 95 வயதினர் 50% கூடுதலாகவும் பென்ஷன் பெறுவார். அதாவது, 95 வயதினர் அடிப்படை பென்ஷன் ரூ.60,000 எனில், அவர் ரூ.30,000 அதிகரிப்புடன் ரூ.90,000 பென்ஷனாகப் பெறுவார். 100 வயது நிறைவு செய்தால், அவரது பென்ஷன் 100% அதிகரிக்கும். இது ஃபேமிலி பென்ஷன் பெறுவோருக்கும் பொருந்தும்.

50 ஆண்டுகளுக்கு...

ஒருவர் 2003-ல் தன் 21 வயதில் அரசுப் பணியில் சேர்த்திருந்தால், அவரின் தற்போதைய வயது 40-ஆக இருக்கும். அவர் இன்னும் 20 வருடம் கழித்து பணி ஓய்வு பெறுவார். ஓய்வுக்கால வாழ்க்கை 30 வருடம் என்ற கணக்கின்படி பழைய பென்ஷன் இன்னும் 50 வருடங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்தபடி 7,15,641 பேர் பழைய பென்ஷன் மற்றும் ஃபேமிலி பென்ஷன் பெற்று வருகின்றனர். கடந்த மே 2022 வரை ஓய்வுபெறும் வயது 60 என இருந்த நிலையில் அதற்குப் பிறகு, மேலும் பல ஆயிரம் பேர் கடந்த நான்கு மாதத்தில் பழைய பென்ஷன் திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றிருக்கக்கூடும். எனவே, பென்ஷன் எப்படிக் கிடைக்கிறது என்பதை பென்ஷன்தாரர்கள் அனைவரும் அவசியம் புரிந்து கொள்வது நல்லது!

வெளிநாட்டில் இருக்கும் காலத்துக்கு அகவிலைப்படி கிடைக்காது..!

பென்ஷன்மாநிலக் கணக்காயரிடம் இருந்து வரப் பெறும் பென்ஷன் ஆணையில் அடிப்படை பென்ஷன் மட்டுமே குறிப்பிட்டிருக்கும். பென்ஷன் பெறும்போது அந்தத் தேதியில் நடைமுறையில் உள்ள அகவிலைப் படி (+ மருத்துவப்படி) கருவூல அதிகாரியால் வழங்கப்படும். அதாவது, பென்ஷன் ஏற்பளிப்பு செய்பவர் மாநிலக் கணக்காயர். அகவிலைப்படி ஏற்பளிப்பு செய்வது தமிழக அரசு. பென்ஷனரும் சரி, ஃபேமிலி பென்ஷனரும் சரி, வெளிநாடு சென்றால், வெளிநாட்டில் இருக்கும் காலத்துக்கு அகவிலைப்படி கிடைக்காது என்பது முக்கியமான தகவல்.