Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் வாங்குவது எப்படி? விவரிக்கும் ஆலோசகர்...

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

M U T U A L F U N D

மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் வாங்குவது எப்படி? விவரிக்கும் ஆலோசகர்...

M U T U A L F U N D

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட்

கொரோனா பாதிப்பு அனைவரையும் நிதிச் சிக்கலைச் சந்திக்க வைத்திருக்கிறது. விளைவு, குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், மருத்துவச் செலவு, வீடு வாங்குதல், ஓய்வூதிய நிதி போன்ற வாழ்நாள் தேவைகளை நிறைவேற்ற முதலீடு செய்து வந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்கும் எண்ணம் பலருக்குத் தோன்றலாம். அப்படிச் செய்தால், நீண்டகாலமாகச் செய்து வந்த முதலீட்டை இழக்க வேண்டி யிருக்கும். அதற்குப் பதில், மியூச்சுவல் ஃபண்டிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் மீது அடமானக் கடன் வாங்குவது பற்றி மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (என்.ஜே.பார்ட்னர் - http://p.njw.bz/54597) ச.ராமலிங்கம் விளக்கிச் சொன்னார்.

மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் வாங்குவது எப்படி? விவரிக்கும் ஆலோசகர்...

எவ்வளவு கடன் கிடைக்கும்?

‘‘எந்த வகை ஃபண்ட் என்பதைப் பொறுத்து கடன் கிடைக்கும் சதவிகிதம் இருக்கும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்ட், ஃபண்ட் ஆஃப் ஃபண்டு களில் அதன் மதிப்பில் 45% வரை அடமானக் கடன் கிடைக்கும். கடன் ஃபண்டில் 70 - 90% வரை கடன் வாங்கலாம். இந்த அளவும் வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்தும் மாறுபடும். குறைந்த பட்சம் ரூ.25,000-லிருந்து ரூ.25 லட்சம் வரை கடன் வாங்க முடியும். ஒருவரின் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டின் மதிப்பு ரூ.10 லட்சம் என்றால், அதில் சுமார் ரூ.4.5 லட்சத்தைக் கடனாக வாங்கலாம்.

அடமானம் வைக்கும் போது மற்றும் மீட்கும் போது சிறிய செயல்முறை மற்றும் ஆவணக் கட்டணம் வசூலிக்கப் படும். கடனை மாதத் தவணையாகக் கட்டி வரலாம். டீமேட் கணக்கு வைத்திருந்தால், இந்தக் கடனை ஆன்லைன் மூலமும் வாங்க முடியும். இந்தக் கடனை வங்கிகள், நிதி நிறுவனங்கள், உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நிர்வகிக்கும் நிறுவனங்கள் மூலம் பெற முடியும். கடன் தவணையை ஆன்லைன் மூலம் கட்ட முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் வாங்குவது எப்படி? விவரிக்கும் ஆலோசகர்...

கடன் தவணை கட்டுதல்...

12 மாத கடனாக எடுத்துவிட்டு ஆறு மாதங்களிலேயே கடனைக் கட்டும்போது பாக்கியுள்ள தொகை யுடன் 2% தொகையைச் சேர்த்துக் கட்டி கடனை முடித்துக்கொள்ளலாம். இதனால், பின்னர் கட்டப்போகிற வட்டி மிச்சம். நீங்கள் கடனை அடைப்பதாகச் சொன்ன காலத் துக்குள் அடைக்க முடியவில்லை என்றால், வங்கி, நிதி நிறுவனம் அல்லது முதலீட்டு நிறுவனம் உங்கள் யூனிட்டுகளை விற்றுப் பணமாக எடுத்துக்கொள்ளும். இது தொடர்பான தகவலை உங்களுக்குத் தெரிவிப்பார்கள். பிறகு, உங்கள் ஒப்புதலோடு யூனிட்டுகளை விற்பார்கள்.

பங்குச் சந்தை சரிந்துவிட்டால்...

கடனுக்காக ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பமிடும்போது இருக்கிற சந்தை மதிப்பை வைத்துதான், கடன் தருவார்கள். இடைப்பட்ட காலத்தில் திடீரென பங்குச் சந்தை சரிந்துவிட்டால், உங்கள் முதலீட்டின் மதிப்பும் குறைந்துவிடலாம். உதாரணமாக, ரூ.10 லட்சம் என்பது ரூ.8 லட்சமாகக் குறைந்துவிடலாம். அந்த நேரத்தில், அந்த மாதம் மட்டும் கூடுதலாக ஒரு தொகையைக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நீங்கள் கட்ட வேண்டும். இது குறித்த தகவல் உங்களுக்கு அனுப்பப் படும். கடன் அடைக்கப் பட்டுவிட்டால் அடமானம் வைத்த யூனிட்டுகள் திருப்பியளிக்கப்படும். இதுவே யூனிட்டுகளை விற்றிருந்தால், அப்போது கிடைத்த தொகையுடன் முடிந்திருக்கும்’’ என்றார்.

யாருக்குக் கடன் கிடைக்காது?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அடமானம் வைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ-க்கள்) கடன் வாங்க முடியாது. குழந்தைகள் பெயரில் இருக்கிற கணக்கில் கடன் வாங்க முடியாது. வருமானவரி சேமிப்புக்கான ஃபண்டான இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டிலிருந்தும் கடன் வாங்க முடியாது.