Published:Updated:

வளர்ந்துவரும் நேரடிக் கடன் வசதி... யாரெல்லாம் பயன்படுத்தலாம்? கந்து வட்டி இனி ஒழியுமா?

நேரடிக் கடன் வசதி...
பிரீமியம் ஸ்டோரி
நேரடிக் கடன் வசதி...

P 2 P L E N D I N G

வளர்ந்துவரும் நேரடிக் கடன் வசதி... யாரெல்லாம் பயன்படுத்தலாம்? கந்து வட்டி இனி ஒழியுமா?

P 2 P L E N D I N G

Published:Updated:
நேரடிக் கடன் வசதி...
பிரீமியம் ஸ்டோரி
நேரடிக் கடன் வசதி...

பி2பி (P2P - Peer to Peer) என்கிற மாற்று முதலீட்டுத் திட்டம் அண்மைக் காலத்தில் பிரபலமாகி வருகிறது. இது போன்ற ஒரு நிறுவனம்தான் மொனெக்சோ ஃபின்டெக் (Monexo - Money Exchange Online). சென்னையில் பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. இதன் இயக்குநர் எம்.சுந்தரை சந்தித்தோம்.

‘‘பி2பி முறையில் பணம் வைத் திருப்பவரையும் கடன் வாங்குப வரையும் ஆன்லைன் மூலம் இணைக்கிறோம். இதனால், கடன் கொடுக்க பணம் தருபவருக்கு அதிக வட்டி வருமானம் கிடைக்கிறது. கடன் வாங்குபவருக்குத் தேவைக்குச் சுலபமாகக் கடன் கிடைக்கிறது.

கடனுக்கான வட்டி விகிதம் 13% தொடங்கி 30% வரை கடன் வாங்கு பவரின் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். வங்கிக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்களைக் கொடுக்க வேண்டுமோ, அவற்றை யெல்லாம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, கடன் வாங்குபவரின் சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். ஆறு மாதம் தொடங்கி 36 மாதத்துக்குள் கடன் பணத்தைத் திரும்பக் கட்டிமுடிக்கலாம்.

 எம்.சுந்தர்
எம்.சுந்தர்

எங்கள் மூலம் ரூ.1 லட்சத்தை ஒருவர் முதலீடு செய்தால், அந்த ரூ.1 லட்சத்தை ஒருவருக்கே மொத்தமாகக் கடனாகக் கொடுக்காமல் 100 பேருக்கு ஆளுக்கு ரூ.1,000 என்பதுபோல் டைவர்சிஃபிகேஷன் முறையில் பிரித்துத் தருகிறோம். உதாரணமாக, ஒருவர் எங்களிடம் ரூ.20,000 கடன் வாங்குகிறார் எனில், அவருக்குத் தரும் அந்தத் தொகை எங்களிடம் முதலீடு செய்திருக்கும் 20 நபர்களின் தொகையிலிருந்து தலா ரூ.1,000 என்கிற விதத்தில் சென்றிருக்கும். இதனால், ஒருவரின் முதலீட்டு இழப்பு குறைக்கப்படுகிறது.

பி2பி முறையில் எங்கள் நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடு மற்றும் கடனுக்குக் கட்டும் தவணை எல்லாம் ஐ.டிபி.ஐ டிரஸ்ட்ஷிப் சர்வீசஸ் என்கிற அமைப்பால் நிர்வகிப்படுகிறது. இதனால், மோசடி, ஏமாற்று என்கிற பிரச்னை பணம் போடுபவர்களுக்கு இல்லை.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தவிர, சமூக உதவிக் கடன் (Social Impact Loan) என்ற திட்டத்தில் சிறு, குறு தொழில் செய்பவர்கள், பூ, காய்கறி வியாபாரம் செய்பவர்கள், விவசாயிகள் என அடித்தட்டு மக்களுக்குக் கடன் உதவி செய்துள்ளோம். இந்தப் பிரிவினரின் பங்கு எங்கள் கடன் போர்ட் ஃபோலியோவில் 40 சதவிகிதமாக உள்ளது. லாக்டெளன் காலத்தில்கூட இந்தப் பிரிவினர் மாதத் தவணை தவறாமல் கடன் கட்டினார்கள். மூன்று மாதத்துக்குள் கட்டும் விதமாகக் குறைந்தபட்சம் ரூ.3,000 கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் வழங்கும் கடன்களுக்கு செக்யூரிட்டி எதுவும் கிடையாது.

எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நிகர வட்டி வருமானமாக சுமார் 13% முதல் கிடைக்கிறது. கடன் கொடுக்க முதலீடு செய்பவர்கள் மொத்த முதலீடு என்கிறபோது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம், மாதம்தோறும் எனில், ரூ.5,000 முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் போல் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவிட்டு, எம்.ஐ.பி முறையில் மாதம்தோறும் வருமானம் பெற முடியும். எங்களுக்கு சேவைக் கட்டணம்தான் வருமானம். முதலீடு செய்பவர்கள் மூலம் 2.5%, கடன் வாங்குபவர்கள் மூலம் 2.5% என மொத்தம் 5% கிடைக்கிறது.

மிக முக்கியமாக, இந்த பி2பி கடன் வழங்கும் முறை ஆர்.பி.ஐ ஒப்புதலுடன் நடந்துவருகிறது. பி2பி முறையில் கடன் கொடுப்வரும் வளர்ச்சி அடைகிறார்; கடன் வாங்குபவரும் வளர்ச்சி அடைகிறார்” என்றார்.

இந்தக் கடன் மூலம் கந்துவட்டிக் கடன் கொடுமை ஒழியட்டும்!