Published:Updated:

பர்சனல் ஃபைனான்ஸ்...10 கட்டளைகள்..!

நிதி நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி நிர்வாகம்

நிதி நிர்வாகம்

பர்சனல் ஃபைனான்ஸ்...10 கட்டளைகள்..!

நிதி நிர்வாகம்

Published:Updated:
நிதி நிர்வாகம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி நிர்வாகம்

நாம் அனைவரும் பணி செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கிறோம். நாம் கஷ்டப் பட்டுச் சம்பாதித்த பணத்தைத் திறமையாக நிர்வகிக்கிறோமா? பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தனிநபர் நிதி (Personal Finance) நிர்வாகத்தில் சிறந்து விளங்க முக்கியமாகக் கீழ்க்காணும் 10 கட்டளைகளைக் (Commandments) கடைப் பிடிப்பது முக்கியமாகும்.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

1. குடும்ப பட்ஜெட் போடுதல்...

நம்மில் பெரும்பாலானோர் குடும்ப வரவு செலவுத் திட்டத்தை (Family Budget) உருவாக்கத் தயங்குகிறோம். காரணம், அது வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களையும் குறைத்து விடும் என பயப்படுகிறோம். பட்ஜெட் என்பது எல்லா சந்தோஷங்களையும் குறைப்பதல்ல; இது உங்களின் நிதி இலக்குகள் நிறைவேறச் சரியாகப் பணத்தை ஒதுக்கீடு செய்வது பற்றியதாகும். நாம் திட்டமிட்டு பட்ஜெட் போட்டு செலவு செய்ய ஆரம்பித்த வுடன், சந்தோஷத்துக்கான சரியான புதிய வழியை நம் மனம் கண்டுபிடிக்கும்.

கூடுதல் பணத்தையும் ஆயுளையும் தரும் ஒரு நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய பட்ஜெட்டை உருவாக்குவது மிக முக்கியம். அதற்கு எது அவசிய செலவு, எது அநாவசியச் செலவு என இனம் பிரித்துச் செயல்படுத்தவும் சேமிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

2. குறைவான செலவு & அதிக சேமிப்பு...

தெளிவாக எழுதப்படும் குடும்ப பட்ஜெட் மூலம் புத்திசாலித்தனமாகக் குறைவாகச் செலவு செய்வதுடன், அதிகமாகச் சேமிக்க முடியும். பட்ஜெட் போடவில்லை எனில், பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கத்தில் சிக்கிவிடுவீர்கள்.

அதிகமாகச் சேமிக்க புத்திசாலித்தனமாகச் செலவு செய்வது முக்கியம். உங்களின் செலவு களைத் தினசரி, வாரம், மாதம் எனக் கண்காணிக்கும்போது தேவையில்லாத செலவுகள் என்கிற விவரம் வெளிப்படையாகத் தெரியவரும். அவற்றிலிருந்து விலகி இருந்தாலே சேமிப்பு தானாகவே அதிகரித்துவிடும்.

3. குடும்ப நிதிப் பாதுகாப்பு

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் (Bread Wnner), தனக்குப் போதிய தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுத்துக்கொள்வதன் மூலம் அவர் இல்லாத நிலை ஏற்பட்டால் குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் சிக்கல் இல்லாமல் தொடர வாய்ப்பிருக்கிறது.

அப்படி ஆயுள் காப்பீடு எடுக்கவில்லை அல்லது போதிய தொகைக்கு எடுக்கவில்லை எனில், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இல்லாமல் போகும்போது குடும்ப உறுப் பினர்கள் செலவுக்குத் தடுமாறிப் போவார்கள்.

ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கும்போது பாரம்பர்ய எண்டோவ்மென்ட் பாலிசிகள், பங்குச் சந்தையுடன் தொடர்புடைய யூலிப் பாலிசிகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இவை முதலீடு மற்றும் காப்பீடு இணைந்த திட்டம் என்றாலும், இரண்டு பலன்களையும் முழுமையாக அளிப்பதில்லை. அந்த வகையில், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுப்பது நல்லதாகும்.

இந்த பாலிசியை குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்களின் ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் போதிய தொகைக்கு மருத்துவக் காப்பீடு எடுப்பது கட்டாயமாகும். குடும்ப மருத்துவ வரலாறு, குடும்ப உறுப்பினர்களின் வயது, வசிக்கும் நகரத்துக்கேற்ப ரூ.5 லட்சம் தொடங்கி சுமார் ரூ.20 லட்சம் வரைக்கும் மருத்துவக் காப்பீடு எடுத்துகொள்ள வேண்டும்.

பர்சனல் ஃபைனான்ஸ்...10 கட்டளைகள்..!

4. சொத்துகள் பாதுகாப்பு

புதிய நிதிச் செல்வத்தைச் சேர்க்கத் தொடங்கும் முன், நமக்கு ஏற்கெனவே இருக்கும் சொத்துகளான வீடு, அடுக்கு மாடிக் குடியிருப்பு, கார் போன்றவற்றை விபத்து மற்றும் இயற்கைச் சீற்றங்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் காப்பீடு பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பாலிசி நிலநடுக்கம், தீவிரவாதத் தாக்குதல் போன்றவற்றால் சொத்துகளுக்குப் பாதிப்பு ஏற்படும்போது இழப்பீடு கிடைக்க உதவும். சில ஆயிரங்களைச் சொத்துக் காப்பீடு (Property Insurance) பிரீமியமாகச் செலுத்துவது மூலம் லட்சக்கணக்கான சேதத்துக்கு இழப்பீடு பெற முடியும்.

மேலும், வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியிருக்கும்பட்சத்தில் அந்தக் கடன் தொகைக்கும் சேர்த்து டேர்ம் பிளான் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில், வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு ஏதாவது அசம்பா விதம் நடக்கும்போது, குடும்ப உறுப்பினர்கள் மீது கடன் சுமை விழாது; அந்த வீடும் குடும்பத் துக்குச் சேர்ந்துவிடும்.

5. அவசரகால தொகுப்பு நிதி

வேலை இழப்பு, கொரோனா பாதிப்பு போன்ற நிலையற்ற சூழ்நிலையில் அல்லது உங்கள் கார் அல்லது வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற சில திடீர் சூழ்நிலைகளைச் சமாளிக்கக் குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே சேமித்து வைத்திருப்பது அவசியம்.

பொதுவாக, அவசரகால நிதியானது மூன்று முதல் ஆறு மாத குடும்பச் செலவுகளைச் சமாளிக்கும் விதமாக வைத் திருக்க வேண்டும். நீங்கள் இந்த நிதியை உருவாக்கியிருந்தால், அவசர செலவு ஏற்பட்டால், உங்கள் மற்ற முதலீடுகளை முன்கூட்டியே முடிக்க வேண்டிய அவசியமில்லை. இதனால், இடையில் எடுப்பதற்கான அபராதம் அல்லது லாப இழப்பு களை நீங்கள் தவிர்க்கலாம்.

6. கடன்களை அடைக்கும் திட்டம்

உங்களுக்கு ஏதாவது கடன்(கள்) இருந்தால், அதை முதலில் அடைக்கத் திட்ட மிடுங்கள். அதிக வட்டியிலான கடன்களை முதலில் அடைக்கும்போது, வட்டி மிச்சமாகும். கடன் இல்லாத நிலை வரும்போது சேமிப்பு அதிகரித்துவிடும். இதை முறையாக முதலீடு செய்யும்போது நிதி இலக்குகளைச் சுலபமாக நிறைவேற்ற முடியும்.

பர்சனல் ஃபைனான்ஸ்...10 கட்டளைகள்..!

7. நிதித் திட்டம்

நீங்கள் எங்கே செல்லப்போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் விரும்பாத, தவறான இடத்துக்குச் செல்லலாம். உங்கள் நிதி இலக்குகளை முதலில் முடிவு செய்யுங்கள். அது வீடு வாங்குவது, கார் வாங்குவது அல்லது குழந்தைகளின் உயர்கல்வி தொடர்பான செலவாக இருக்கலாம்.

வாழ்க்கையில் நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதைப் பெற, நீங்கள் எப்படி அங்கு செல்வீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டியது அவசியம். ஏதாவது ஊருக்குச் சாலை வழியாக காரில் செல்கிறோம் எனில், உங்களுக்கு ஒரு சாலை வரைபடம் தேவையாகும். அதேபோல், உங்கள் நிதி இலக்குகளை அடைய நிதித் திட்டம் (Financial Plan) தேவையாகும். எனவே, உங்கள் மற்றும் குடும்பத்தினரின் நிதி இலக்குகளை நிறைவேற்ற நிதித் திட்டத்தை உருவாக்குங்கள்.

8. ஓய்வுக்காலத் திட்டமிடல்

உலக அளவில் ஓய்வூதியம் வழங்குவது நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதால், அதைப் பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் தவிர்த்து வருகின்றன. தனிநபர்களில் சுமார் 15% பேர் மட்டுமே தங்கள் ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் தேவைக்கு போதுமான அளவு சேமிப்பதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக் கின்றன. நீங்களும் இந்த 15% பிரிவினருக்குள் வராமல் இருக்கலாம். உங்கள் ஓய்வுக்காலத் தேவைக்கு இப்போதே சேமிப்பதன்மூலம் கடைசிக் காலத்தைக் களிப்பாகச் செலவிட முடியும். பிறகு, செய்துகொள்ள லாம் என்று தள்ளிப்போடும் எந்தக் காரியமும் நம்மால் செய்ய முடிவதே இல்லை. எனவே, நல்ல காரியத்தை இன்றே ஆரம்பிப்பது கட்டாயம்.

9. முதலீட்டுத் திட்டங்களை மறுஆய்வு செய்யுங்கள்

உங்கள் நிதித் திட்டம் மற்றும் முதலீடுகளை நீங்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். இதன்மூலம் நீங்கள் நிதி இலக்கிலிருந்து விலகிச் சென்றால், அதைச் சரிசெய்ய முடியும். இல்லை எனில், நிதி இலக்குகளை நிறைவேற்ற போதிய தொகுப்பு நிதி இல்லாமல் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். அல்லது இலக்கை நிறைவேற்றும் காலத்தைத் தள்ளிப்போடும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

10. நிதி ஆலோசகருடன் இணைந்து செயல்படுங்கள்

பல்வேறு இணையதளங்களில் உள்ள நிதி கால்குலேட்டர்கள் (Financial Calculators) மூலம் நிதித் திட்டத்தை உருவாக்க முடியும். ஆனால், நீங்கள் ஒரு முழுமையான, விரிவான, தனித் துவம் மிக்க மற்றும் நடைமுறையில் செயல்படக்கூடிய நிதித் திட்டத்தை உருவாக்க விரும்பினால், நீங்கள் தொழில்முறை நிதி ஆலோசகர்களின் (Professional Financial Planners) உதவி யைப் பெறலாம்.

மேற்கண்ட 10 நிதிக் கட்டளைகளைப் பின்பற்றுவது மூலம் நீங்கள் சுலபமாகச் செல்வந்தராக, நிதி சுதந்திரம் அடைந்த வராக மாற முடியும் என்பது நிச்சயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism