Published:Updated:

அதிகரிக்கும் மருத்துவ செலவு... சாமான்யர்கள் என்ன செய்யலாம்?

லைஃப் ஸ்டைல்
பிரீமியம் ஸ்டோரி
லைஃப் ஸ்டைல்

லைஃப் ஸ்டைல்

அதிகரிக்கும் மருத்துவ செலவு... சாமான்யர்கள் என்ன செய்யலாம்?

லைஃப் ஸ்டைல்

Published:Updated:
லைஃப் ஸ்டைல்
பிரீமியம் ஸ்டோரி
லைஃப் ஸ்டைல்

இன்றைய நிலையில், நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள் களின் விலை மட்டுமல்ல, மருத்துவத்துக்கு செய்ய வேண்டிய செலவும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. மருத்துவத்துக்கான செலவு ஆண்டுதோறும் இரட்டை இலக்கத்தில் உயர்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் சாமான்யர்கள் மருத்துவ செலவுகளைச் சமாளிக்க என்ன வழி என்று டாக்டர் புகழேந்தியிடம் பேசினோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“இன்று எல்லோருடைய மனதிலுமே நாம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோமா என்ற கேள்வி பயம் கலந்து விதைக்கப்பட்டிருக்கிறது. எடுத்ததற்கெல்லாம் டாக்ரிடம் போ, டெஸ்ட் எடு, மருந்து சாப்பிடு என்பதாகவே இருக்கிறது. உண்மையைச் சொன்னால் அலோபதி மருந்துகளில் 75% தாவரங்களிலிருந்து எடுக்கப் பட்ட மூலப்பொருள்கள்தான் உள்ளன. இவை எல்லாமே நம்முடைய உணவின் மூலமாகவே நாம் பாரம்பர்யமாக எடுத்துவந்தவைதான். இன்று அவற்றில் பெரும்பாலாவற்றை நம்முடைய உணவில் பார்க்க முடிவதில்லை. நாம் சாப்பிடுகிற உணவிலும் ஏகப்பட்ட மாற்றங்கள், கலப்படங்கள் செய்யப்பட்டு விட்டன. நாம் எதிர்கொள்கிற பெரும்பாலான நோய்களுக்கு நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்கள்தான் காரணம். அடிப்படையில் நம்முடைய வாழ்க்கை முறை, உணவு முறையைக் கூர்ந்து கவனித்தாலே பெரும்பாலான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அதிகரிக்கும் மருத்துவ செலவு...
சாமான்யர்கள் என்ன செய்யலாம்?

ஆனால் அதை மறந்த காரணத்தினால்தான் இன்று தீவிர நோய்களிலிருந்து வாழ்க்கைமுறை நோய்கள் வரை அனைத்தினாலும் பாதிக்கப்பட்டு மருந்துகளுக்கு அதிக செலவுகளைச் செய்ய வேண்டிய நிலைமைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். பாரம்பர்யமாக உணவோடு உணவாக மருந்து இருந்து வந்த நிலையில் இடைப்பட்ட காலத்தில் உணவிலிருந்து மருந்தை தனியாகப் பிரித்ததன் விளைவுதான் இன்று மருத்துவத் துறையில் மருந்துகளுக்கான சந்தை மிகப்பெரிய அளவில் லாபம் கொழிக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது.

பொதுவாக வரக்கூடிய தலைவலி, ஜுரம், சளி இதற்கே மக்கள் மருந்துகளுக்காக பெருமளவு செலவு செய்கிறார்கள். ஆனால் இவற்றுக்கு உடனடியாக மருந்துகள் எடுத்துக் கொள்வதைவிட அவற்றுக்கு கசாயம், மிளகு ரசம் போன்ற உணவுகள் மூலமாகத் தீர்வு காண முயற்சி செய்யலாம். ஜுரம், சளி, தலைவலி போன்றவை இரண்டு நாள்களுக்கு மேலும் நீடித்தால் மருத்துவமனைக்குச் செல்லலாம். சக்கரை வியாதிக்கு எளிமையான தீர்வு சிறு தானிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதுதான்.

இப்போது பற்கள் தொடர்பாக நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மூலகாரணம் நாம் பயன்படுத்துகிற பேஸ்ட் வகைகள்தான். ஆலும் வேளும் பல்லுக்கு உறுதி என்பதையே நாம் மறந்துவிட்டோம். இதுபோல ஒவ்வொரு பிரச்னைக்குமான மூலகாரணத்தை ஆராய்ந்தால் அதில் நிறுவனங்களின் சதி இருப்பதைக் கண்டறிய முடியும். குழந்தை களுக்குக்கூட ஏராளமான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை அவசியம்தானா என்பதை சில மருத்துவர்கள் சொல்லிவிடுகிறார்கள். தேவையில்லாமல் மருந்துகளைத் தரவேண்டாம் என்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் நாம் வாங்கும் பெருமளவிலான மருந்துகளைப் பயன்படுத்தா மலே, காலவதியாகி குப்பையில்தான் எறிந்துகொண்டிருக்கிறோம். இன்று உங்கள் வீட்டை சோதனை போடுங்கள். எவ்வளவு மருந்து மாத்திரைகள் இருக்கிறது, அவையெல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதா, எவ்வளவு மருந்துகளை வீணாக்குகிறீர்கள், அதற்கு எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதை நீங்களே கண்டுகொள்ள முடியும். அதிலிருந்தே நான் சொல்ல வருவது புரியும்.

ஓமவல்லி, துளசி, தூதுவளை, முடக்கத்தான், வல்லாரை, முருங்கை, கீரை வகைகள் போன்றவற்றை நாம் தொடர்ந்து உணவு மூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பொருள்களைத் தவிர்ப்பது, உப்பு அளவாகச் சேர்த்துக்கொள்வது, வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது, வேகவைத்த உணவுகளைச் சாப்பிடுவது, திணை வகைகள், சிறு தானியங்களை உணவில் சேர்ப்பது இவையெல்லாம்தான் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். ஜிம்முக்குப் போகிறவர்களுக்குக்கூட டிரெய்னர்கள் அடிக்கடி சொல்வார்கள் உடல் ஆரோக்கியத்தில் உடற்பயிற்சியின் பங்கு 25 சதவிகிதம் எனில் உணவு 75 சதவிகிதம் பங்கு வகிக்கிறது.

எனவே ஆரோக்கியமான சரிவிகித உணவு, நல்ல தூக்கம், தினமும் கொஞ்சம் உடற்பயிற்சி இவற்றைக் கடைப்பிடித்தாலே போதும். பெரும்பாலான மருத்துவ செலவுகளைத் தவிர்த்துவிட முடியும்" என்றார்.

மருத்துவத்துக்கு செலவு செய்வதைவிட, நம் வாழ்க்கைமுறையை சீர்செய்தாலே பெரும் பணத்தை நாம் மிச்சப்படுத்தலாம்; நிம்மதியைப் பெறலாம்!