கட்டுரைகள்
Published:Updated:

வீக்எண்டில் பணம் விரயமாகிறது என்று நினைக்கிறீர்களா?!

வீக்எண்டில் பணம் விரயமாகிறது என்று நினைக்கிறீர்களா?!
பிரீமியம் ஸ்டோரி
News
வீக்எண்டில் பணம் விரயமாகிறது என்று நினைக்கிறீர்களா?!

சேமிப்பில் 50%க்கு மேல் கடன் கட்டும் தொகை இருக்கக்கூடாது. வீட்டுக் கடன் அல்லது வாடகை, தனிநபர் கடன், வாகனக் கடன், பள்ளி, கல்லூரிக் கட்டணங்கள் இவையெல்லாம் இதில் வரும்

‘பணம் சேமிப்பது மிகுந்த மனவலியான விஷயமாக உள்ளது. இதை மனமுவந்து செய்ய முடியாதா?’ என்று கேட்டார் ஒருவர். எப்போது மனவலி வரும்? சம்பாதிக்கும் பணத்தை அனுபவிக்காமல், மிகவும் சிக்கனம் அல்லது கஞ்சத்தனம் காட்டிச் சேமிக்கும்போது வரும். ஒ‌ன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்... சம்பாதிப்பதே அனுபவிக்கத்தான். எனவே, வாழ்க்கையைத் தேவையான அளவு அனுபவித்துக்கொண்டே சேமிக்கும்போது, சேமிப்பு சுமையாக இருக்காது.

வயதும் வருமானமும்

25 - 40 வயது வரையான காலகட்டத்தை இளமைக்காலம் என்று சொல்லலாம். அந்த வயதில் வெற்றிகரமாக சம்பாதிக்கும் திறன் கொண்டவராக இருந்தால் போதும். இந்தக் காலத்தில் அதிகம் செலவழிக்கத் தேவையில்லாத அளவுக்குச் செலவுகள் குறைவாக இருக்கும்.

எனவே, சம்பாத்தியத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்தலாம். சம்பாதிக்கும் காலத்தில் வருமானமாக வரும் தொகை, எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் அளவுக்குக் கவனமாக இருந்தால் போதும்.

வீக்எண்டில் பணம் விரயமாகிறது என்று நினைக்கிறீர்களா?!

வருமானத்தில் சேமிப்புக்கு எவ்வளவு?

சேமிப்பில் 50%க்கு மேல் கடன் கட்டும் தொகை இருக்கக்கூடாது. வீட்டுக் கடன் அல்லது வாடகை, தனிநபர் கடன், வாகனக் கடன், பள்ளி, கல்லூரிக் கட்டணங்கள் இவையெல்லாம் இதில் வரும். மீதம் 50% தொகையில் குடும்பச் செலவுகள் போக, 10%-20% வரை சேமிக்க முடியும்.

கூடுதல் வருமானம்

குடும்பத்தில் ஒரு புது வருமானம் வருகிறது என்றால், அதை எப்படிச் செலவழிக்கலாம் என்று யோசிப்பவர்கள் அதிகம். உதாரணத்திற்கு, மனைவியின் வருமானம், பிள்ளைகள் வளர்ந்து வேலைக்குச் சென்று தரும் வருமானம் ஆகியவை. அந்த வருமானத்தைத் தொடாமல் அப்படியே சேமித்து வர வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவருக்கு மாதம் ரூ.15,000 கூடுதல் வருமானம் என்றால், ஆண்டிற்கு ரூ.1.8 லட்சம். வட்டியோடு சேர்த்து ரூ. 2 லட்சமாக மாறும். வங்கி பாஸ்புக்கில் தொடர்ந்து தொகை அதிகமாகிக்கொண்டே போவதைப் பார்க்கும்போது சேமிப்பிற்கான உத்வேகமும் அதிகரித்துக்கொண்டே வரும். பணம் சேர்ப்பது என்பது மனதின் ருசி மொட்டுகளைத் தூண்டிவிடக் கூடியது. ஒரு முறை சுவைத்துவிட்டால், அடுத்து அடுத்து கேட்டுக்கொண்டே இருக்கும்.

Iஎஸ்.கார்த்திகேயன்
Iஎஸ்.கார்த்திகேயன்

வீக் எண்டில் பணம் விரயமாகிறதே என்று நினைக்கலாமா?

நிறைய உழைக்க வேண்டும், அதேபோல உழைக்கிற உடம்பிற்கு ஓய்வும் கொடுக்க வேண்டும். நீங்கள் அலுவலகம் சென்றால் உங்களுக்குப் பணம் வரும். பணப்பையைத் திறக்க வேண்டியதே இல்லை. ஆனால்

வீக் எண்டில் அனைத்துச் செலவுகளுக்கும் உங்கள் பணப்பையைத் திறக்கவேண்டி இருக்கும். குடும்பத்தோடு அவுட்டிங் போனால் சில ஆயிரங்கள் காலி. என்றாலும், விடுமுறையைக் கொண்டாடுவதற்காக நாம் செய்யும் எல்லாச் செலவுகளும் ஆனந்தச் செலவுகளே. நாம் சந்தோஷமாக இருக்கும் நேரம் என்பது, விலையுயர்ந்த நேரம் என்பதை உணர வேண்டும். அந்த சந்தோஷத்துக்காக நாம் செலவிடும்போது, பதிலுக்கு நமக்கு அடுத்து உழைப்பதற்கு வேண்டிய ஆற்றல் கிடைத்துவிடும். அப்போது செலவிடும் பணத்தை, மறுநாள் உழைத்து எடுத்துவிடும் வித்தைத் தெரிந்தால் தாராளமாக செலவு செய்யலாம். விடுமுறையில் நன்றாகக் கொண்டாட நினைப்பவர்கள், அதற்கு ஈடாக சம்பாதிக்கும் திறனையும் அதிகரிக்க வேண்டும்.

வீக்எண்டில் பணம் விரயமாகிறது என்று நினைக்கிறீர்களா?!

உங்கள் கொண்டாட்டம் எந்த வகை?

ஒரு ஞாயிற்றுக்கிழமையில் குடும்பத்துடன் பேருந்தில் கிளம்பி கடற்கரைக்குச் செல்வீர்களா, டாக்சி எடுத்து மகாபலிபுரம் செல்வீர்களா என்பதைப் பொறுத்து உங்கள் செலவுகள் தீர்மானிக்கப்படும். மாதத்தில் நான்கு நாள்கள் ஆடம்பரப் பொழுதுபோக்கில் கழிப்பதை, மாதத்தில் ஒரு நாள் என்று குறைத்துக்கொண்டு, அந்தப் பணத்தை எதிர்கால தொலைதூரச் சுற்றுலாவுக்குச் சேமிக்கலாம். சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சி, பொழுதுபோகும் நிகழ்ச்சி என இலவச நிகழ்ச்சி ஏதேனும் கண்ணில்பட்டால் குடும்பத்தோடு செ‌ன்று செலவின்றித் திரும்பலாம். நெட்வொர்க்கிங் கூட்டங்களில் கலந்துகொண்டு கூடுதல் வருமானம் ஈட்டலாம்.

வயது இருக்கும்போது ஓய்வு நேரத்தை பகுதிநேர வேலை, பு‌திய கற்றல், கூடுதல் வருமானத் திட்டமிடலுக்கான நேரம் என மாற்றினால், வாழ்க்கை வளமாகும்!