Published:Updated:

கட்டாயமாகும் ஹால்மார்க் முத்திரை... தங்கம் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

Gold (Representational Image)
Gold (Representational Image) ( Photo by vaibhav nagare on Unsplash )

கட்டாய ஹால்மார்க்கிங் மூலம், குறைந்த தரத்திலான தங்க விற்பனையை நிறுத்துவதோடு, நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல், தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும் என்கிற அறிவிப்பை 2019-ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, இன்னும் சில மாதங்கள் கால அவகாசம் கொடுக்கச் சொல்லி தங்க நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்திருந்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் ஜூன் 1-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லீனா நந்தன்
லீனா நந்தன்

இது தொடர்பாகப் பேசிய நுகா்வோர் விவகார செயலாளர் லீனா நந்தன், ``தங்க ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு ஏற்கெனவே பல முறை ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு கோரி இதுவரை கோரிக்கைகள் எதுவும் வரவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் பி.ஐ.எஸ் (Bureau of Indian Standards (BIS)) ஏற்கெனவே முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. ஹால்மார்க்கிங் செய்ய நகை விற்பனையாளர்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் பி.ஐ.எஸ் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. எனவே, நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருள்களுக்கு ஹால்மார்க் முத்திரையிடுவது கட்டாயமாக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள ஶ்ரீதர் சாரதியிடம் பேசினோம். ``கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கான தரத்தை உறுதிப்படுத்த இந்தியத் தர நிர்ணயக் கழகத்தின் (BIS) ஹால்மார்க் முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையைக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தரத்தை உறுதிசெய்யலாம்.

ஶ்ரீதர் சாரதி
ஶ்ரீதர் சாரதி

இந்த முத்திரையைக் கட்டாயமாக்குவதற்கான விதிமுறைகளுக்கு மத்திய அரசு 2000-ம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. ஆனாலும், அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலான நகைகள் ஹால்மார்க் முத்திரைகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படுகிறது.

இந்த தேதிக்குப் பிறகு 14 காரட் (தங்கத்தின் தரம் 58.5%), 18 காரட் (தங்கத்தின் தரம் 75%) மற்றும் 22 காரட் (தங்கத்தின் தரம் 91.6%) ஆகிய மூன்று தரங்களில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்படும். விற்கப்படும் அனைத்து தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் தயாரிக்கப்படும் கலைப்பொருள்களில் கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கட்டாய ஹால்மார்க்கிங் மூலம், குறைந்த தரத்திலான தங்க விற்பனையை நிறுத்துவதோடு, நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க முடியும். இந்த விதிமுறை, குறைந்த தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களைக்கூட ஏமாறாமல் பாதுகாக்கும்.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் உள்ள 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்களில் சுமார் 34,647 நகைக்கடைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, அடுத்த 2 மாதங்களில் ஒரு லட்சம் நகை தயாரித்து விற்பவர்கள் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gold
Gold
தங்க நகைகளுக்கு இனி `ஹால்மார்க்' முத்திரை கட்டாயம்... நகை வாங்குபவர்கள் கவனத்துக்கு!

ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட கலைப்பொருள்கள் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் விற்கப்பட்டால், அந்த நகைக் கடை உரிமையாளருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் இந்தியா மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. ஆண்டுக்கு 800 டன் அளவிலான தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யும் தங்கம் பெரும்பாலும் நகை உற்பத்திக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அதனால், ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு நகை வாங்குபவர்கள் பி.ஐ.எஸ் ஹால்மார்க் தர முத்திரை, கேரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர் மற்றும் ஜூவல்லரி முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்" என்றார் தெளிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு