Published:Updated:

கொரோனாவால் நிலைகுலையும் இந்தியப் பொருளாதாரம்... நிபுணர்களின் கருத்தும் கணிப்பும்!

 பொருளாதார மீட்சிக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்
பொருளாதார மீட்சிக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்

ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதார அமைப்பின் கணிப்பு படி இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முதல் மூன்று மாதங்களுக்கு 3% குறைவாகவே இருக்கும்.

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவின் பொருளாதாரத்தைப் பயங்கரமாக உலுக்கி இருக்கிறது. நாடு முழுவதும் உற்பத்தித் துறைகள் முடக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் வருவாய் இல்லாமல் நிதிநெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த நோய் பாதிப்பின் மூலம் அந்தப் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் சாத்தியமில்லை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

இதனால் வரும் நாள்களில் தொடர்ந்து கடும் நிதி நெருக்கடி நிலவும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பொருளாதார நிபுணர்கள் பலரும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்த தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதார அமைப்பின் கணிப்பின்படி இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முதல் மூன்று மாதங்களுக்கு 3% குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதே காலகட்டத்தை குறித்து முன்னதாகக் கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் 4.3% என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, இந்தக் கொரோனா பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலை காரணமாகப் பெரும்பாலான நகரங்கள் முடக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்துகொள்ள அவர்களுக்குக் கையிருப்பு மிக அவசியமாகும். எனவே, அரசு அதைக் கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட முந்தைய நிதி திட்டத்தில் பல மாற்றங்களைக்கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்துள்ளனர்.

பினவ் சின்ஹா: வரியைக் குறையுங்கள்!

ஒருவேளை அரசாங்கம் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 1 சதவிகிதம் அதிகரித்தால், 18$ பில்லியன் மதிப்பிலான செலவினங்களைச் சமாளிக்க முடியும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசு கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் வீதம் வழங்கவேண்டும் அல்லது நிறுவனங்களின் மேல் விதிக்கும் அதிகபட்ச வரி விகிதங்களை குறைத்துக்கொள்ள வேண்டும்.

corona-india
corona-india

அபிஷேக் குப்தா: 'உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம்'

உலகப் பொருளாதாரத்தில் நிலவும் இந்தச் சரிவை மீட்டெடுக்க உலக நாடுகளின் அரசுகள் அறிவித்திருக்கும் நிதி உதவிகள் ஏராளம். ஆனால், இந்திய அரசாங்கம் குறைந்த அளவு நிதியையே இதற்கு ஒதுக்கியிருக்கிறது. வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளும் குறைவே. பாதிப்பைக் கருத்தில்கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து குறைந்தது ஒரு சதவிகிதத்தையாவது போர்க்கால அடிப்படையில் ஒதுக்க வேண்டும்.

`நுகர்வோரின் நம்பிக்கை.. உற்பத்தித்துறையில் பாதிப்பு!'- சரிவை நோக்கி செல்லும் உலகப் பொருளாதாரம்?

பிரியங்கா கிஷோர் : 3 சதவிகிதமாக சரியும் அபாயம்!

இந்தியப் பொருளாதாரம் வருடத்தின் முதல் இரண்டு மாத காலத்திலேயே பெரும் சரிவைக் கண்டிருக்கிறது. பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும், இந்தப் பாதிப்பின் விளைவாகக் கடந்த நிதியாண்டில் 4.3% இருந்த காலாண்டு வளர்ச்சி விகிதம், இந்த முறை 3 சதவிகிதமாகச் சரியும் அபாயம் உள்ளது. முன்னதாகக் கணிக்கப்பட்ட நிலையின் தலைகீழ் முடிவுகளைத்தான் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

`உலகப் போரின்போதுகூட இப்படி ஒரு சரிவைக் கண்டதில்லை' - வேதனை தெரிவித்த மோடி #corona

சஞ்சய் மாதுர் : வாராக்கடன்கள் அதிகரிக்கும்!

கொரோனா பாதிப்பால் எல்லாத் தொழில் துறைகளும் முடங்கியுள்ளன. இதனால், நிறுவன உரிமையாளர்களால் தொடர்ந்து வருவாய் ஈட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்களால் வங்கிகளில் வாங்கிய கடன்களை முறையாகச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி நடக்கும்பட்சத்தில் அரசுக்கு வாராக்கடன்கள் அதிகரித்து மேன்மேலும் நஷ்டத்தை உண்டாகும். இதற்கு அரசு முறையான சலுகைகளை அறிவித்து, பெரும் நஷ்டத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு