Published:Updated:

நடிகர் விஜய் `சொகுசு கார்' வரி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

நடிகர் விஜய்

நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டதுடன், நுழைவு வரி செலுத்தவும் விஜய்க்கு அறிவுறுத்தியது. இதையடுத்து ரூ.7.98 லட்சம் நுழைவு வரி விஜய் செலுத்தினார். ஆனால், வரி செலுத்தாமல் இருந்த காலத்துக்கு சுமார் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது தமிழக வணிக வரித் துறை.

நடிகர் விஜய் `சொகுசு கார்' வரி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டதுடன், நுழைவு வரி செலுத்தவும் விஜய்க்கு அறிவுறுத்தியது. இதையடுத்து ரூ.7.98 லட்சம் நுழைவு வரி விஜய் செலுத்தினார். ஆனால், வரி செலுத்தாமல் இருந்த காலத்துக்கு சுமார் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது தமிழக வணிக வரித் துறை.

Published:Updated:
நடிகர் விஜய்

பிரபல நடிகர் விஜய்யின் சொகுசு காருக்கு இறக்குமதி வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2005-ல் நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக வணிக வரித்துறை உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பு வழக்கு தொடர்ந்தது.

BMW M2 Competition
BMW M2 Competition

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டதுடன் வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவையும் நிராகரித்தது, நுழைவு வரி செலுத்தவும் விஜய்க்கு அறிவுறுத்தியது. இதை அடுத்து ரூ.7.98 லட்சம் நுழைவு வரி விஜய் தரப்பில் செலுத்தப்பட்டது.

ஆனால், அவர் வரி செலுத்தாமல் இருந்த இடைப்பட்ட காலத்துக்கு சுமார் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது தமிழக வணிக வரித்துறை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தரப்பு மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மார்ச் 14-ம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபராதம் மாதம் 2% எனக் கணக்கிடப்படாமல் மொத்தமாக 40% எனக் கணக்கிடப்பட்டுள்ளது என தன்னுடைய வாதத்தில் கூறினார். ஆனால், இந்த வழக்கு தொடுத்ததற்காக அபராதம் விதித்து இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வணிக வரித்துறை கூறியுள்ளது.

சட்டம்
சட்டம்

அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தீர்ப்பில் கூறியிருப்பதாவது, நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரியையும் செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது.

2019 ஜனவரிக்குப் பின் நுழைவு வரியை செலுத்தி இருக்காவிட்டால், 2005 காலத்திலிருந்து இல்லாமல் 2019 ஜனவரிக்குப் பிறகான காலத்துக்கு மட்டும் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய்
விஜய்

இனி அவர் நுழைவு வரி செலுத்தியதன் அடிப்படையில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஜனவரி வரை நுழைவு வரி செலுத்தாமல் இருந்திருந்தால், நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது!